கவிதை 51 / 58

திருமணங்களாலும் வருவதுண்டு திருப்பம்!

Marriages Too Can Bring a Turn!

X
திருமணங்களாலும்வருவதுண்டு திருப்பம்!
இராசேந்திர சோழ தேவனாம் ;இரண்டாம் இராசேந்திர சோழன்
‘கொப்பம்’ போர்க்களத்தையேகொலு மண்டபமாக்கிக் கொண்டு
மன்னர் மன்னனாக மகுடம் புனைந்தவுடன்மாற்றார் படையாம் சாளுக்கிய படையின்
தளபதிகளான ஜெயசிங்கன், புலிகேசி,தசபன்மவன், ஆரையன், அசோகமையன்,
ஆகியோர் தலைகளை அங்கேயே வெட்டி வீழ்த்தினான்.அரச குலப் பெண்டிர் சத்தியவை, சங்கைவை
இருவரையும் கைப்பற்றிக் கொண்டதோடுஇரத்த வெறிப் பழியுணர்வு அடங்காமல்,
பகை நாட்டுப் பட்டத்து யானைகளானசத்துருபயங்கரன், கரபத்திரன், மூல பத்திரன்
மற்றும் ஒட்டகங்கள், குதிரைகள் போன்ற – சாளுக்கியக்கொற்றவனின் உடைமைகளையும் தனதாக்கிக் கொண்டான்.
இவன் கி.பி. 1054இல் – பிணக் குவியலுக்கு மத்தியில்இந்த மண்ணில் பேரரசுப் பட்டம் சூட்டிக் கொண்டு ;
இரண்டாம் இராசேந்திரன் எனும் பெயருடன்ஒன்பதாண்டு காலமே உலகில் வாழ்ந்தான் என்றும்
அதன் பின்னர் 1063இல் உயிர் விட்டான் என்றும் –தொடர்ந்து ஆள வந்தவர்கள் அவன் தம்பியர்
இராசமகேந்திரன், வீர இராசேந்திரன் என்றும் ;அவர்களும் அதிக காலம் வாழவில்லையென்றும்
வரலாறு முற்றுப் பெறுகிறது ; ஆக ; வீரஇராசேந்திரன் 1070இல் மறைந்தவுடன் ;
அதி ராசேந்திரன் என்பான் ஆட்சிக்கு வந்து ; அவனும்உள்நாட்டுக் கலகத்தினால் அற்பாயுளில் உயிர் விடுத்தான்.
இவ்வாறு கி.பி. 850 ஆம் ஆண்டுகடற்கரம் நீட்டியெழுந்த சோழர் அரசு ;
இருநூறு ஆண்டுகள் மக்கள் பணியென்றும்,இறை பணி என்றும், மாற்றாரைக் களத்தில்
சந்திக்கும் போர்ப்பணி என்றும், ஆட்சிப் பணியாற்றிஅதிராசேந்திர சோழனுடன் அத்தமித்தது எனினும்
அதன் பின்னர் ‘சாளுக்கிய சோழர்’ எனும் பெயரால்அய்ம்பதாண்டுக் காலம் குலோத்துங்க சோழன்
கோலோச்சிய சரித்திரத்தையும் ஒளியுமிழ்ஓவியமாகத் தீட்டித்தான் காட்டுகிறது –
ஒளியுமிழ் ஓவியமெனினும் ; அந்தச் சோழநிலவில் “ஒளவைக் கிழவி”யாம் நிழலாக
ஒட்டிக் கொண்ட “சாளுக்கிய மரபு” என்றகுட்டிக் குறைபாட்டினையும் ; குலோத்துங்கன்
எட்டித் தள்ளி விட்டுஏற்றமிகு ஆட்சி நடத்தினான்.
இரு நூற்றாண்டு சோழர் வரலாற்றில்இவன் யார் சாளுக்கிய சோழன் ?
இந்தக் கேள்வியும் இடம் பிடித்து விட்ட பிறகுவிடையளிக்காமல் விலகிட முடியுமா ?
சமர் வெற்றிகள் மட்டுமல்ல ;சமரச உடன்பாடுகள் –
பெண் எடுத்தல் கொடுத்தல் எனும்கொள்வினை கொடுப்பினைகள்
மூலமும் – மூளையைப் பயன்படுத்திசோழ தேச நிலப் பரப்பைக்
கட்டுக் காவலுடன் காத்து நிற்பதற்குஇராசராசனும் ஓர் இணையற்ற வழிகாட்டியன்றோ ?
அவன்தானே அன்றைக்குத் தனதுஅருமை மகள் இளைய குந்தவைக்கும்
சாளுக்கிய மரபு வழித் தனயான வீரன் விமலாதித்தனுக்கும்மரபு வழிக் கலப்பு மணவிழாவை நடத்தி வைத்தான் –
இருவருக்கும் பிறந்தவன் இராசராச நரேந்திரன் –இவன் இராசராசனின் மகன் வழிப் பேரன்
முதலாம் இராசேந்திரனின் இரண்டாம் மகள் அம்மங்கை தேவி –இவளும் இராசராசன் மகன் வழிப் பேத்தியாவதும்.
இராசராச நரேந்திரனுக்கும் அம்மங்கை தேவிக்கும்பிறந்தவன் குலோத்துங்க சோழன் எனில்
சாளுக்கிய சோழர் குலமெனச் சாற்றுதற்குச்சரித்திரம் சற்றேனும் தயங்குமா ; அதுவும் நமது
சமுதாயக் கோட்பாடு வளர்ந்து வரும் விதத்தில் ?சாத்திரக் குப்பை மேடுகள் பெருகி வரும் காலத்தில் ?
★ ★ ★
தவழும் பருவத்திலேயே குலோத்துங்கன்தடம் பார்த்துத் தவழுவதில் குறியாக இருந்ததாலே
தாத்தா போலவே தந்திரக்காரன் என்றும்தவறியும் தோற்கும் வழி செல்ல மாட்டான் என்றும்
இளம் வயதில் இராசேந்திரன் என்றே ஊரில்எல்லோரும் அழைத்தார்கள் ; அவன் பெயரை!
வேங்கி நாடு இளவரசன் ஆன போதுவிஷ்ணுவர்த்தனன் எனும் பெயரை வைத்தனர்.
வேறு சிறப்புப் பெயர்கள் எத்தனையோ உண்டு ;விருதராச பயங்கரன், கரிகாலன்,
மனுகுல தீபன், உலகுய்ய வந்தான்,பார்த்தகன், சுங்கம் தவிர்த்த சோழன் –
பல பெயர்கள் உண்டு – பெற்ற பட்டங்களும்பற்பல உண்டாம்!
கி.பி. 1070 ஜூன் திங்கள் ஒன்பதாம் நாள்கிரீடம் தரித்தான் ; சோழச் சக்கரவர்த்தியாக!
அதனால் “திரிபுவன சக்கரவர்த்தி” என்றுஅடைமொழி கொண்ட முதல் மன்னனும் இவனேயாவான்!
கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூடிக் கொண்டுகாஞ்சிபுரத்தையும் ஒரு தலைநகரமாக்கிக் கொண்டு
பழையாறை, திருமழபாடி நகர்களைத் தனதுபரிபாலனத்திற்கேற்ற இடங்களாக மாற்றிக் கொண்டு
தனது உள்ளங்கவர்ந்த செல்வனாம் விக்கிரம சோழனைதனக்குத் துணையாகவும் தனக்குப் பின் அவனேதான் எனவும்
அறிவித்து ஆட்சி நடத்திய குலோத்துங்கன் அய்ம்பதுஆண்டுகள் ;அரச நடத்தினான் எனினும் ; கலிங்கத்துப் பரணிக்குக்காரணமான
கலிங்கப் போரில் அவன் கண்ட வெற்றியே, அவன் ஆட்சியில்பெற்றகடைசி வெற்றி போலும் ;
விக்கிரம சோழன் ஆட்சியும் நேர்மை நியாயம் போற்றிய ஆட்சியாக –தந்தைவிட்டுச் சென்றதை இழக்காத ஆட்சியாக விளங்கிற்று எனினும்
இலங்கையில் இருந்த பிடிப்பை இழந்தது ; அதனைப்பேரிழப்பின் ஆரம்பம் ; பின்னடைவின் துவக்கமாயிற்று எனலாம்
மன்னார்குடிப் பெருமாள் கோவில்மன்னன் குலோத்துங்கன் எழுப்பியதே ; அதனால்
குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றுஅழைப்பர் அதனை!
குலோத்துங்க சோழன், நாகை புத்த விகாரத்துக்குநிலக் கொடையும் கொடுத்த ‘செப்பேடு;’
‘ஆலந்து’ நாட்டு லீடன் நகரப் பொருட்காட்சியில்அமைந்துள்ளதை இன்னும் காணலாம்.
இறுதியாக ஒன்று ; முனைவர் இராசமாணிக்கனார் கூறியபடிகங்கை கொண்ட சோழபுரம் தலைநகரமெனும்
தகுதி பெற்ற பின்னர்தில்லை நகராம் சிதம்பரம், சிறப்பு பெறலாயிற்று!
விஜயாலயச் சோழன் காலம் முதல்இராசராசன் காலம் வரையில் அவர்கள்,
திருவாரூரையேமிகச் சிறப்பாகக் கருதினர்!
அது இரு ஊர்களுக்கும் இடையே உள்ளஉறவின் காரணம் போலும்!

மூலமும் சான்றும்