கவிதை 52 / 58
படையெடுப்பை முன்கூட்டியே அறிவிக்கும் பண்பாடு!
A Culture That Announces an Invasion in Advance!
படையெடுப்பை முன்கூட்டியேஅறிவிக்கும் பண்பாடு!
“சுற்றிச் சுற்றி வருகின்றாயே சோழர் வரலாற்றையே ;பற்றுக் கொண்டோர் நாங்கள் பாண்டியர் வரலாற்றில் ;
முற்றுப் பெற்றவுடன் பல்லவர் சோழர் வரலாறுகள் ;சற்று விரைவில் வருக பாண்டியர் பக்கம்” என,
வேண்டியவர், வேண்டாதவர் என்றில்லாமல் ; என்விருப்பத்துக்குரியோர் பலரும் விரும்பி அழைத்தனர் –
பாவேந்தி வருகின்ற பழைய வரலாறுகளில்பாண்டியரையே முதலில் வைத்து நான் வடித்த கவிதை
1945 ஆம் ஆண்டிலேயே அய்யாவின் ‘குடியரசு’அலுவலகத்தில் பணியாற்றிய போதே வெளிவந்ததைப்
படித்துப் பார்க்க வேண்டுகிறேன் ; பாசமுள்ள நெஞ்சங்களை!நொடிக்குள் உணர்வீர் ; என்னுள்ளத்துக் கொந்தளிப்பை!
“காவிரியின் கரையினிலேபெண்ணையின் பாய்ச்சலிலே
சரிதமில்லை ; சரிதமில்லை!அய்யகோ தமிழ்நாடே ;
ஆரம்பம் கங்கையிலாம்! பாண்டியர்ஆண்டதை யார் கண்டார் ?
சேர் செழிப்பைச் செதுக்கியதெவர் ?சோழர் வளப்பம் சொன்னதும் உண்டோ ?”
இப்படியொரு கவிதையும்இன்னும் வேகமுடன் ;
“சேர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே ?வீர பாண்டியர் அரசேன் கவிழ்ந்தது ?
சோழர் உலவிய சோர்விலா நாட்டில்,தோழைக் கொள்கை குவிந்தது எவ்விதம் ?
வெடித்தன வினாக்கள் ;வெதும்பிய மனத்தில்......
நாட்டு வெறி பிடித்த காளைகளே!கிலி பிடித்த மனிதர்களை ; கீழே தள்ளுங்கள்!புலி வாழ்வின் உச்சியிலே புதுமைத்தனைப்பொறித்திடுவோம்!”
இப்படியும் ஒரு கவிதை எழுதியவன்எப்படி மறப்பேன் மூவேந்தர்களில் ஒருவராம் முத்தமிழ்ப்பாண்டியரை ?
★ ★ ★
எங்கிருந்து தொடங்குவது பாண்டியர் வரலாறு......எவரைப் பற்றி முதலில் தொடங்குவது அந்த வரலாறு ?
முச்சங்கம் முளைத்ததற்கும் – அது ;முதல், இடை, கடை என முகிழ்த்ததற்கும்
மூலப் பொருளாக இருந்தவரும் –மூளைப் பொருள் வழங்கியவரும் ;
முன்னாள் பாண்டிய மன்னர்களாம் ; அவர்களில்முதல்வராக இருப்பவன் முடத்திருமாறனாம் –
முதல் சங்கம் நிறுவி நடத்தியோர் ; என‘காய் சின வழுதி’ முதல் ‘கடுங்கோன்’ ஈறாக
பாண்டிய மன்னர் எனப் பட்டியல் இருப்பினும்வேண்டிய ஆதாரம் ஏதுமில்லை அந்த வரலாற்றில்!
இடைச் சங்கம் பற்றிய இறையனார் களவியலுரையில்இதனை நடத்தியோரில் முடத் திருமாறன் தவிர்த்து முன்னோர்குறித்த
விபரங்களை ; வெளிச்சத்தில் தேடியும் கிடைத்தபாடில்லை!பளிச்செனக் கிடைத்தது பாண்டியன் முடத் திருமாறன்,
கடைச் சங்கம் நிறுவிய செய்தி! அக்காலம் தான் இரண்டாம்கடற்கோள் நிகழ்ந்து ; குமரியும் பஃறுளியாறும் அடியோடு
அழிந்து விட்ட காலமென்றும் வரலாற்று அறிஞர் கூறுகின்றார்.ஆர். இராகவ அய்யங்கார் ; முடத் திருமாறனே நிலந்தருபாண்டியன் என்பார்!
“இவனுக்கடுத்த பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி”இவ்வாறு குறிப்பிடுழுதி உரைப்பவர் உ.வே.சா. அய்யராவார்.
இம்மன்னர் மீது காரிகிழார், நெட்டிமையார், நெடும் பல்லியத்தனார்எனும்புலவர் பிரான்கள் போற்றிப் பா எழுதியுள்ளனர் – அதில் ;
“முற்றுகையிட்டு ஒரு நாட்டைத் தாக்கிடப்படையுடன் வரும் மன்னன் ;
முதலிலே அந்நாட்டு அப்பாவி மக்கள் அறிவதற்குப்படை வருவதைப் பறையொலி மூலம் தெரிவிப்பானாம் –
என்னே ; போர் முறையில் பண்பாடு –இன்னே ; எங்கு ஒளிந்தது அந்தப் பண்பாடு ?”
★ ★ ★
புராணம் போல ஒரு வரலாறு உண்டு பொற்கைப் பாண்டியனுக்கு!புகழுகின்றேன் சுருக்கமாக ; புரிந்து கொள்வீர்!
நாள் தோறும் மாறு வேடம் பூண்டுநள்ளிரவில் கூட நகர் சோதனைக்கு வரும்
மன்னன் பாண்டியன் ஓர் இரவுமறையவர் ஒருவர் தன் மனைவியிடம்
வெளியூர் சென்றிட விடைபெற்றிடும்போது ;வேந்தனிருக்கிறான் நமக்கெல்லாம் காவல் என
விளம்புவதைக் கேட்டு விடுகிறான் – பின்னர்திங்களொன்று கடந்து திரும்பி வந்த
கணவனுடன் வீட்டில் மனைவி பேசுவதைகதவோரம் நின்று கேட்டுவிட்டு ; கணவன் மனைவியென்றுகருதாமல்
கள்வர் எவரோ வந்து விட்டதாக எண்ணி மன்னன்கதவைத் தட்டி விட்டான் – அதன்பின் கணவன் மனைவி எனத்தெரிந்து
அங்கிருந்தே மன்னன் விரைந்து நடந்து விட்டான் –அய்யர் வீட்டில் சந்தேகம் – அம்மாமி மீது!
யாரடி அவன் கதவைத் தட்டியது எனக் கேட்டு – அவள்கற்பின் மீதே கடும் அய்யமுற்றார் கணவர்.
அய்யர் வீட்டில் தன்னால் குழப்பமா எனக் கவலையுற்ற மன்னன் ;அய்யப்பாடு நீக்க, அனைவரது வீட்டுக்கதவுகளையும் தட்டிவிட்டுப் போய் விட ;
மறுநாள் மாளிகைக்குச் சென்று ஊரார் மன்னனிடம்நள்ளிரவு கள்வன் வந்து கதவைத் தட்டிய கதை சொல்லவே ;
மன்னன் அந்தக் கள்வனுக்கு என்ன தண்டனை தரலாமெனக்கேட்க ;கதவு தட்டிய கள்வன் கையை வெட்டலாமென்றனர் அமைச்சர்குழுவினர் –
அக்கணமே வாளை ஓங்கித்தன் கையை ; தானே மன்னன் வெட்டிக் கொண்டு –
மன்றத்தினரிடம் ; நடந்த கதையைமனம் திறந்து சொன்னான்.
ஒடிந்த கரத்துக்கு உபரிக் கரமாகஊர்மக்கள் பொற்கரம் செய்து பூட்டினர் மன்னனுக்கு
அன்று முதல் அவன் பொற்கைப் பாண்டியன்எனப் புகழப் பெற்றான்.
புராணங்களை ஓரளவு ஒழுங்காக எழுதினார்கள் –புதையல்களாக வரலாறுகளைத்தான் புதைத்தே விட்டார்கள்.
★ ★ ★
கடைச் சங்கக் காலத்துப் பாண்டியரில் அறிவுடைநம்பியும்,ஒல்லையூர் தந்த நல்லிசைப் புலவர் வரிசையில்
ஒப்பற்ற கவிஞன் பூதப் பாண்டிய மன்னனும் –கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியும்,
ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் –தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனும் –
நன்மாறன் வெற்றி வேற் செழியன் எனநாடாண்ட பாண்டியர்களும்
என் எழுத்தோவியங்கள் பலவற்றில்ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர் என்பதால் ; மீண்டும் விரிவாக்கி
அந்தப் பாண்டியர் வரலாறு கூறுவது விடுத்துகடைச் சங்க காலத்தும் அதற்குப் பின்னரும்
தங்க காலம் உருவாக்கிய பாண்டியர்வரலாறு தொடர்வோம்.
★ ★ ★
காலத்தால் மூத்த காப்பியம்கடவுள் வாழ்த்துடன் தொடங்கிடாத காப்பியம்
நிலந்தரு திருவின் பாண்டியன்நலந்தரு அவையில் ஆன்றோர் சான்றோர்
ஆசிரியர் அதங்கோட்டாசானின்அன்பு தவழ் இனிய வாழ்த்துக்களுடன்
அரங்கேற்றப்பட்ட அறிவுக் கருவூலம்அறிஞர்கள் ஏற்றிப் போற்றும் அரிய நூல்
தொல்காப்பியம் ; அரங்கேறிய காலம்;விழைந்த நாண் ; அக்காப்பிய பூங்காவில்
நுழைந்தவன் மட்டுமல்ல உம்மையும் வருக எனக்குழைந்து அழைத்துச் சென்று ; “கோடையல்ல இது ;
குற்றால அருவியின் குளிர்” எனக் காட்டியவன் – எனவேபொற்றாமரைக் குளம் கொண்ட மதுரை முதல்
மற்ற பாண்டிய நாட்டுப் பகுதிகளையும் ஆண்டமாவீரர் பற்றி உரைத்திடுவேன் ஒரு தொடராக!