கவிதை 53 / 58

கடற்கோளில் தப்பிய தமிழ்; கடைச் சங்கம் கண்டது!

Tamil Escaped the Sea-Deluge; It Found the Last Sangam!

X
கடற்கோளில் தப்பிய தமிழ்;கடைச் சங்கம் கண்டது!
இந்தியத் திருநாடு இன்றைய குமரிமுனைக்குத்தெற்கே எழுபது காதம் தொலைவு பரவியிருந்ததாம்!
எல்லை அரணாகக் குமரி மலைத்தொடர் காவலிருக்கஅதுகிழ் என குமரியாறு, பஃறுளியாறு இரண்டும்
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போலகெட்டியாகப் பாதுகாத்துக் கொண்டிருக்க ;
தென்கிழக்கே சந்தாத் தீவுகள் தொடங்கிஅதன் மேற்கே ஆப்பிரிக்காவை அடுத்து
கீழ்க்கரை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையில்அகன்றதொரு நிலப்பரப்பே ; ஆழ்கடலின்
அகோரப் பசிக்கு இரையாகி, கடற்கோள் பேரழிவு எனும்கவர்ச்சிப் பெயரைச் சூட்டிக் கொண்டு தமிழர் நிலம், நலம்,
வளம், பலம் அனைத்தையும் அடியோடு கவிழ்த்ததாம் –வரலாற்று வல்லுநர்களின் ஆய்வுதான் இந்த முடிச்சினைஅவிழ்த்ததாம்.
தொலைதூரம் பரந்துகிடந்த தொல்பழங்காலத் தமிழர் பூமியில்பகைமை குலுங்கிடப் பஃறுளியாறு வெட்டி வைத்தவன் ;
பாண்டியன் நிலந்தரு திருவினான் என்பது நெஞ்சுக்கினியசெய்தியாம்!பல்லாயிரம் லட்சம் கோடியென இறந்து புதைந்த மனிதஉடல்களின் மேல்தான்
பிறந்து வளர்ந்து நாம் புதுவாழ்வு தேடுகிறோம் ; எதிர்காலஇளைஞர்கள்சிறந்து விளங்கிட எருவாக நம் வரலாறு நாடுகிறோம்.
சூரியன், சந்திரன், சுக்கிரன், ராகு, கேது, கோரசனிகும்பம், மகரம், ராசி பார்த்தோம் –
பிரபவ, விபவ என ஆண்டுக் கணக்கு அறுபது வருஷம்என்றோம் –பிறந்தன பிள்ளைகளாய் நாரதர் கிருஷ்ணன் இருவருக்குமென்றோம் –
எல்லாம் சரிதான் ஏமாந்து மறந்து விட்டோமே ; நம் வரலாறு!சொல்லாமல் எழுதாமல் விட்டுவிட்டோமே – அதனால் இன்று,
கல்லான பூமியிலன்றோ கடப்பாரை போட்டுக் கெல்லிஎடுக்கின்றோம்நல்லோர்கள், வல்லோர்கள், சரித்திரத்தை!
★ ★ ★
பஃறுளி ஆற்றோரும் நெடிய வீதியொன்றில் பாவிகள் பூட்டியதேரில்புயல் வேகத்தில் நிலந்தரு திருவின் பாண்டிய மன்னன்வருகின்றான்
வீதியில் அவன் எதிரே வந்த குதிரையிலிருந்து இறங்கிபாதுகாப்புப் பணியாளர் பணிந்து குனிந்து வணங்குகின்றான்.
மன்னன் கேட்கிறான் ; “மண்டபத்தில் எல்லோரும்குழுமி விட்டனரா ?”
“அரசே; அத்தாணி மண்டபத்தில் அத்தனை புலவர்களும்காத்திருக்கிறார்கள் –”
“அரசியார் புறப்பட்டுவிட்டாரா ?”
“அவர் மன்னருக்காக மாளிகையில்எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறார்!”
“அப்படியா”
அதன்பிறகு அந்தத் தேர் ஓடவில்லை – தெருவில் பறந்தது.
சினத்தினால் சிவக்கா விட்டாலும்சிரிப்பின் செழிப்பில்லை, முகத்தில் அரசிக்கு!
புரிந்து கொண்ட பாண்டியன் –
“நேரமாயிற்றே – புறப்படலாமா ?”
“பரவாயில்லை; இவ்வளவு தாமதமாகவாவது!”சாந்தமாகத்தான் பேசினாள் அரசி; ஆனால் சலிப்பு மிகுதி!
ஏறிக்கொண்டாள் எழில் குலுங்கத் தேரில்
“பஃறுளி ஆற்றுப் பணி முடிய, சற்றுகாலம் தாழ்ந்து விட்டது”
“ஓ! அதற்கு அடுத்த பணிதானா;தொல்காப்பிய அரங்கேற்றப்பணி ?”
“இரண்டும் ஒரே பணிதான்!”
“ஓலைச் சுவடியை வெளியிடுவதும்ஓடும் நதியை ஒழுங்குபடுத்துவதும்ஒன்றுதான் என்கிறீரா ?”
“ஒன்றல்ல; ஆனால் நீ சொல்வது போல்இரண்டுமல்ல!”
“பணி வெவ்வேறல்லவா ?”
“ஒன்றைப் புரிந்து கொள் தமிழரசி ;வெளியிடப்போதுஓலைச்சுவடியல்ல – அதுஉலகச்சுவடி! –பணி ஒன்று போல் தெரியும் ;ஆனால், பயன்கள் வெவ்வேறு!”
பஃறுளி ஆறு மக்கள் வளத்துக்கு வகை செய்வது –தொல்காப்பியம் மக்களின் வாழ்க்கைக்கேவழி காட்டுவது –முன்பு வந்ததை முதல் கடற்கோள்என்றார்கள் – எனினும் குமரி ஆறும்பஃறுளியும் பாதுகாப்பாக இருக்கிறது –அடுத்தொரு கடற்கோள் வந்தால்தடுத்திட முடியுமோ பஃறுளி, குமரி ஆறுகளின் பேரழிவையென்றுதவிக்கிறது என்னுள்ளம்!”
அரசி பெருமிதமுடன் பதில் சொன்னாள் –
“எத்தனை கடற்கோள் வரினும் ; இன்று அரங்கேறும்தொல்காப்பியத்தை அணுகித் தொடக் கூட முடியாது –ஆறுகள் கடல்கள் நாடுகள் கூட திசைமாறும்ஆனால் தொல்காப்பியம் போன்ற தமிழ் ஏடுகள்அழியா வலிமை பெற்றவை – எவராலும், எதனாலும்அழிக்க முடியாது; என்றும் ‘சிரஞ்சீவி’!”
அளவிலா மகிழ்ச்சியுடன் முடத்திரு மாறனாம்நிலந்தரு திருவின் பாண்டியன்அவளை ஆரத்தழுவிக் கொண்டுநன்றியை செயல்படுத்த நினைத்தான்எனினும் நகரின் நடுவீதிஎன்பதால் கண்களால் மட்டும்அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.
★ ★ ★
அணிதோள் புரவிகள் அரச குடும்பத்தின்அவசரம் புரிந்தது போல –அரங்கேற்றம் நடைபெறும்அத்தாணி மண்டப வாயிற்புறம்அதற்குள் வந்தடைந்தன.
“இன்னொரு கடற்கோள் வரக்கூடுமாம்” ;இந்த அச்ச உணர்வு அவைப் புலவரிடையேஇருந்ததையும் உணர முடிந்தது அவர்களின் உரையாடல் கேட்டு!
அரச குடும்பத்தினர்க்கு அவைப் புலவர்களைஅறிமுகப்படுத்தினார் அதங்கோட்டாசான் ;ஆசிரியர் என்றே அவரை அனைவரும்அழைப்பர், அன்பு பொங்கிட!தொல்காப்பியர், அகத்தியர், இருங்கையூர்க்கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன்சிறுபாண்டிரங்கன், திரையன்மாறன்,துவரைக் கோமான், கீரந்தைஇவர்கள் எல்லாம் இடைச்சங்கப்புலவர்களாக வீற்றிருந்து,இணையிலாக் காப்பியமாம் தொல்காப்பியத்தைநிலந்தரு திருவின் பாண்டியன் முன்னிலையில்அரங்கேற்றம் செய்து கொடுத்துவிட்டுஅதங்கோட்டாசான் வாழ்த்தையும் வழங்கச் செய்து,அங்கிருந்து இனிது கலைந்தனர்.
இன்னும் சில மாதங்களில் இன்னொரு கடற்கோள்வரப்போவதை அறிந்து கொள்ளாமலே!
இந்நாள் பொன்னாளாய்த் திகழ்ந்தது எனினும்பொல்லா நாளொன்று விரைவில் வந்து புகுந்துஅந்நாள் தான் அடுத்தொரு அழிவினைக் கொண்டுவரும் –என்பதைஇடைச்சங்கப் புலவர்கள் அறிந்து கொண்டிருந்தால்இசைப் பாடல்களாம் கலியும், குருகும், வெண்டாளியும்வியாழ மாலை அகவலும் எனப் பாடல்கள் பல பாடிக்களித்திருப்பாரா ?இயற்கையோடும் போராடும் இயல்பினர் – அவர்கள் ;எஃகு இதயத்தினர் –இதை மட்டுமல்ல ;எதையும் சந்திப்பர்!
வீரமிக்க விற்பன்னர்களும் கூடஅந்தத் தமிழ் வித்தகர்கள்!
அவர்தம் களிப்பு நீடிக்காமல்அறைகூவல் விடுப்பது போல் – ஆறு திங்கள் கழித்துஇயற்கையின் வெறிக் கூத்துகவாடபுரத்தில் ஆரம்பமாயிற்று! ‘பேய்’ பிடித்த இயற்கை;பிரமாண்டமான இரும்புக் கரம் கொண்டுபெருங்கடல் அலைகளின் மீது கருந்தாக்குதல் நடத்த,இருள் காடாயிற்று அந்தப் பகுதி முழுதும் –இடியாக ஒலித்து, மின்னல்களாக இறங்கி –பூகம்பமாகக் குலுங்கி, கடலுக்குள்நிலநடுக்கமாகப் புகுந்துகுமரியாறு – பஃறுளியாறு இரண்டும் ஒன்றாகிஎங்கே போயின என்று தடம் மாறி – இடம் பெயர்ந்து –இல்லாமலே மறைந்து விட்டன எனில் ;இயற்கைச் சீற்ற விளைவை யார் தான் கணிக்க இயலும் ?அழிவு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டுகடற்கோள் “பைசாசம்” ஆடி அடங்கிய பிறகுதான்அமைதி ‘தலை’ காட்டியது – ஆம்அகன்று நீண்ட பெருவெளியில்அங்கு நடந்த ‘கெடுதலை’க் காட்டியது!மக்கள் நடமாட்டமே இல்லைஎங்கே போயினர் எல்லோரும் ?திகைப்பு – திகைப்பு! எங்கெங்குகாணினும் சாவின் நகைப்பு!
அன்றொரு நாள் ஆறேழு திங்கள் முன்னேதொல்காப்பியம் அரங்கேறிய அத்தாணிமண்டபம் மட்டுமே – அங்குஎஞ்சியிருந்திட ;மற்ற எல்லா மாட மாளிகைகளும்கூட கோபுரங்களும் மண்ணுக்குள் புதைந்து போயின!
“அடியார்க்கு நல்லார்” வழங்கியசிலப்பதிகார உரையின்படி ;“தென்பாலி முகத்துக்கு வட எல்லையாம்பஃறுளிக்கும் குமரியாற்றுக்கும் இடையேஎழுநூற்றுக் காவத தூரம் இவற்றின் நீர்மலிவான்என மலிந்த ஏழ் தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும்,ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும்,ஏழ் குறும்பனை நாடுமெனமொத்தம் நாற்பத்தி ஒன்பது குறு நாடுகளைமுழுக்கச் செய்து முடிவுரை தீட்டப்பட்டது ;மூர்க்கத்தனமிக்க அந்தக் கடற்கோளால்!
தனது ராணி தமிழரசி எங்குற்றாள்என முடத்திருமாறன் தேடியலுத்து ; அவள்கடற்கோளில் காணாமல் போய்விட்டகுடிப்படைகளில் ஒருத்தி என்று குறித்துக் கொண்டுகண்ணீர் வடித்தான் எனினும் ;“தமிழரசிதானே தப்பவில்லை; என்தமிழ் தப்பியதே” எனத் தகத்தகவெனக்குதித்து “தப்பிய தமிழை தக்கவைப்போம்”என்று சூளுரைத்து – இரண்டாம் தமிழ் சங்கமாம்இடைச் சங்கத்து எஞ்சிய புலவர்களுடன் இவனும் இணைந்துமுனைந்தனன் உடனே மூன்றாம் தமிழ்ச்சங்கமாம்கடைச் சங்கம் கண்டிட!இயற்கைச் சீற்றத்துக்குள்ளான இடைச்சங்கஇறுதிக் காலத்திலும் – கடைச் சங்க துவக்கக்காலத்திலும் – இருந்த பெருமை ;முடத்திருமாறனாம் நிலந்தரு திருவின் பாண்டியனுக்குக்கிடைத்தது ; என்பதை உணர முடிகிறது! உவகை கொள்ளவும்முடிகிறது.
★ ★ ★
குறிப்பு:
இலங்கை பெற்ற வரலாறு“இராஜாவளி” நூல்கி.மு. 265க்கும் 161க்கும்இடையே இலங்கையை அடுத்துள்ளபகுதியில் கடற்கோள் நிகழ்ந்ததாகக் கூறுகிறது.மற்றொரு வரலாறு ;“மகாவம்சம்” 60 ஆண்டுகள் வித்தியாசம் என்கிறது.எனவே இடைச் சங்க காலத்து இரண்டாம்கடற்கோள் ; கி.மு. 150ல் நிகழ்ந்ததாகஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

மூலமும் சான்றும்