கவிதை 48 / 58

அழியாத சிற்பக் கலையும், அழகிய ஓவியக் கலையும்!

The Undying Art of Sculpture and the Beautiful Art of Painting!

X
அழியாத சிற்பக் கலையும்,அழகிய ஓவியக் கலையும்!
இராசராசன் ; தன் தந்தையாம் இரண்டாம் பராந்தகன்இயற்கை எய்திய பிறகு ; தமையனாம் ஆதித்தனும்
சதியினால் சாய்ந்த பிறகு ; சரியாகவோ, தவறாகவோ – அதில்சம்பந்தப்பட்டதிப் பேசப்பட்ட மதுராந்தகன் மகுடம் புனைந்து
மரணமுறும் வரை ஆட்சி செய்து ; அந்த மூவருக்குப் பின்னரேமன்னராக முடிசூடிக் கொண்டான் என்கிறபோது ;
என்ன இருந்தாலும் வயது அவனுக்கு கி.பி. 985இல் ;நாற்பதுக்கும் அய்ம்பதுக்கும் நடுவில்தான் இருக்க வேண்டும்!
அவனும் முப்பதாண்டு ஆட்சி நடத்திய பிறகே; இராசேந்திரசோழன்அரசப் பொறுப்பு ஏற்றான் எனில் அவன் வயது, அப்போதுஅய்ம்பது என;
ஆய்வு செய்து எழுதுகிறார் அறிஞர் இராசமாணிக்கனார்!அவனுக்கும் ஆட்சிக்கு வந்த ஆண்டு – கி.பி. 1012 என்று மட்டுமேதெரிகிறது.
மார்கழித் திங்கள் திருவாதிரை நாளில் பிறந்தான் – மற்ற விபரம்;அந்தமன்னாதி மன்னர் குடும்பத்தில் எதுவுமே இல்லை!
தந்தைக்குச் சதய நாளும், தனயனுக்கு திருவாதிரை நாளும் – இத்தரணியில் “அவதரித்த” நாள்கள் என்று மட்டும்கண்டுபிடித்துவிட்டார்கள்!
தனயன் இராசேந்திரன் ஆட்சி பீடம் ஏறிய பிறகே; இயற்கையாகத்தந்தை இராசராசன் மறைவுற்றான் எனினும்; மறந்தே போனதுஅந்த நாளும் –
வரலாற்றில், என்கிற போது; மனம் புண்ணாகித் தான் போகிறது!நல்ல வேளை;வரை மறந்தார் முன்னோர்; தேதிகளை எனினும்; சேதிகளைமறக்கவில்லை!
மாதமும் நட்சத்திரமும் சொன்னால் மட்டும் போதுமா ? ஒவ்வொருமாதமுந்தான், நாள், நட்சத்திரம் வரும், போகும்; பரவாயில்லை;நமது பழைய கால
மாளிகைகள்; பிறந்த நாள், இறந்த நாளை மறந்து விட்ட வரலாற்றுமகிமை கொண்டவைகள்! மறைவாய்ப் புதைத்தஒடுக்கலாகிவிட்டவைகள்!
சரி, போகட்டும்; சரித்திரமாவது – கிழிந்த துண்டாகக்கிடைத்ததே; அதற்கும்தரித்திரம் வராமல் – அதனால் ஆறுதல் அடைந்து, தொடர்வோம்!
★ ★ ★
இராசராசன் காலத்து சோழ நாடு,தஞ்சையைத் தலைநகராய்க் கொண்டு –
வடக்கில் துங்கபத்திரையும்வடகிழக்கே வேங்கி நாடும்,
தெற்கே ஈழத்தின் மையப் பகுதியும் – இன்றையதென்னாற்காடு, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையென
எல்லைகளைக் கொண்ட பண்டைய சோழ மண்டலமாக அமைந்துதொல்லைகளைத் தவிர்த்திடும் வகையில் ‘வளநாடுகள்’ பலஉருவாயின.
வள நாட்டின் உட்பகுதிகளும் நாடுகள் என வழங்கலாயின –‘பாப்பா நாடு’ ‘உறத்த நாடு’ எனப் பட்டியல் நீளும் –
அரசனுக்கு உதவி செய்திட அமைச்சர்கள் கொண்ட குழு –‘பெருந்தரம்’, ‘சிறு தரம்’ எனப் பிரிவுகளைச் சார்ந்த
அரச அதிகாரிகளும் அவர்களுக்கு அடுத்த நிலை அதிகாரிகளும்அவர்களுக்கெனத் தனி ஊதியம் பணமாகப் பெறாமல்
நிலங்களை மானியமாகப் பெற்று; அதில் கிடைக்கும்பயனையே அந்த ஊழியர் ஊதியமாகப் பெறுவர்.
அதிகாரிகளின் நேர்மை, நாணயம் அருஞ்செயலைப் பாராட்டிஅவர்களில் சிலருக்கு நிலத்தை இறையிலியாக வழங்குவதும்உண்டு.
‘நாடு’ எனப்படும் ஒவ்வொரு பகுதியும் – ஒருகாவல் அதிகாரியின் கண்காணிப்பில் இருந்தது.
நாடு முழுதும் எவ்வளவு நிலங்கள் என அளந்து கணக்கிட்டு,காடு மேடு கழனி என தரம் பிரித்து நிலவரி ஒழுங்குபடுத்திட ;
உத்திரவு பிறப்பிக்கப்பட்டு அது உடனடியாகவும் நடைமுறைக்குவந்தது.“உலகளவித்த திருவடிகள் சாத்தன்” என அதிகாரி பெயரைஅறிவித்திடும்
கல்வெட்டு ஒன்று; கருவூரில் காணப்பட்டதாகக் குறிப்பு உண்டு!கடல் போல் காட்சி தரும் ஏரிகளும் சோழ மன்னர்அருட்கொடைகள்தான்!
ஊர் தோறும் மன்றங்கள் அமைப்புப் பெற்று நான்கு வகைஊராட்சி மன்றங்கள் ஆங்காங்கு தேர்தலில் உருவாக்கப் பெற்று,
ஊடே புகுந்த உயர்சாதி ஆதிக்கத்தினால் – அந்தஊராட்சிகள்; “சதுர்வேதி மங்கலசபை” என்றும்,
“தேவதான மன்றங்கள்”, “பிரமதேயச் சபை” என்றும்“பிராமணரல்லாதார் தேர்வான ஊர் மன்றங்கள்” என்றும்
கதையொன்றும் கட்டவில்லை; கல்வெட்டுச் சான்றுகளைத்காட்டுகின்றார் ஆய்வாளர் – என்கிறேன்! இந்த
அடித்தட்டு ஊராட்சி முறையில், இராசராசனுக்கு –அறுபது ஆண்டுக்கு முன்பே அரசோச்சிய;
பராந்தக சோழனுக்கும் பங்குண்டு என்று‘உத்திரமேரூர்க் கல்வெட்டு’ம் உரிமை கொண்டாடும்.
வாரியங்களும் அமைத்தனர் – பொதுக்காரியங்கள் நடத்திட!
ஒழுக்கம், பண்பு, நாணயம், நேர்மையில்ஒரு துளி இழுக்கு என்றாலும் அவர் பெயர்;
குடவோலையில் குறிப்பிடப்படக் கூட முடியாமல்உடனடியாகத் தகுதியிழப்பர் –
தக்காரே தேர்ந்தெடுக்கப்படுவர் –தகவிலார் தள்ளப்பட்டு விடுவர் –
ஏரி வாரியம் என்றும் கழனி வாரியம் என்றும்கணக்கு வாரியம் என்றும் – கலிங்கு வாரியம் என்றும்
மக்கள் கடமையாற்றும் வாரியங்களில்மாசு மறுவற்றோரே பொறுப்பு வகிப்பர் –
ஊராட்சிகளை ஒன்றியமாக அமைத்து முதலில்சீராட்சி நடத்தியவனும் இராசராசன் தான் –
எம்மதமும் சம்மதம் எனும் கருத்துடன் வாழ்ந்தஇராசராசன்; சைவ மதத்தின் பால் தனி ஈடுபாடும்
எல்லா மதத்தினரையும் அரவணைக்கும் நிலையும் எடுத்துநல்லார் எம்மதத்தினராயினும் அவர்களை ஆதரித்து மகிழ்ந்தான்.
அவன் அக்காள் குந்தவை நாச்சியாரே;தாதாபுரம் எனுமிடத்தில்
சைவர், வைணவர், சமணர் எனமூன்று சமயத்தினருக்கும்
நிறைவு ஏற்படும் வண்ணம் மூன்று ஆலயங்களை அவரேமுன்னின்று எழுப்பியுள்ளார் –
★ ★ ★
தந்தை வழியை தவறாமல் கடைப்பிடித்து தமிழ் மக்கள்சிந்தையில்இடம் பெறுவேன் என்று சூளுரைத்து; தன் முன்னோர்
தாள் பணிந்து வாள் பிடித்த இராசேந்திர சோழன்தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தைஎந்நோற்றான் கொல் எனும் சொல் – எனும்
அய்யன் திருவள்ளுவரின் இரு குறளுக்கும்இலக்கண உருவாய்த் திகழ்ந்து
மகன் இராசேந்திரன் ஆட்சி நடத்திய காட்சி கண்டுமாவீரன் இராசராசன் மனம் பறி கொடுத்தான்
கலை இலக்கியத்திற்கு இருவரும் வழங்கியமலையளவு ஆதரவு; ஒரு புறம்
ஆத்திகத்துக்கு அரணாக அமைந்தது எனினும் –ஆடற்கலையையும் பாடல் கலையையும்
அழியாத சிற்பக் கலையாகவும்அழகிய ஓவியக் கலையாகவும்
படைத்தளிப்பதற்கு அவர்கள் ஆற்றியபணியும் பார் புகழ் பணியே ஆகும் –
அவைதான் தஞ்சை ராஜராஜேச்சரமும்அதற்கிணையான கங்கை கொண்ட சோழபுரமும் ஆகும்!

மூலமும் சான்றும்