கவிதை 47 / 58

அந்த வருங்காலமே; அருங்காலமாகும்!

That Future Age Will Be a Precious Age!

X
அந்த வருங்காலமே;அருங்காலமாகும்!
எங்கேனும் கண்டதுண்டா ?எவரேனும் சொன்னதுண்டா ?
இளவரசனாக பதினாறு ஆண்டுகளும்நாடாளும் நாயகனாக முப்பது ஆண்டுகளும்
மொத்தம் நாற்பத்தி ஆறு ஆண்டுகளில் - மும்முடிச் சோழன்என்றும், செயங்கொண்ட சோழன் என்றும்,
முறையே மண்டலப் பெயர்களையும், வளநாட்டுப் பெயர்களையும்மற்றும் - சோழேந்திர சிம்மன், சிவபாதசேகரன், சிகாமணி,
ஜனநாதன், நிகரிலி சோழன், இராசேந்திர சிம்மன்,சோழ மார்த்தாண்டன், இராசாசிரியன், இராச மார்த்தாண்டன்,
நித்திய விநோதன், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன்,சிங்களாந்தகன், இரவிகுல மாணிக்கம், தெலுங்கு குல பாலன்என்றும்......
இன்னும் இன்னும் எண்ணற்ற பட்டங்களும், விருதுகளும்,சென்ற இடமெல்லாம் வெற்றியும் ஈட்டித் தந்து
தமிழகப் பேரரசு ஒன்றை முன்னூறு ஆண்டுகள் நிலைபெறச் செய்யஅடித்தளமிட்ட அந்த வீராதி வீர - வெற்றித் திருமகனுக்கு -
அவன் பிறந்த ஆண்டு எதுவென்று ;அவனுக்கும் தெரியாது - அவன் வீட்டுக்கும் தெரியாது.
நாட்டுக்கும் தெரியாது - அதை நம்பத்தான் முடியவில்லை.நம்ப முடியாதவைகளும் நடப்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு!
களம் பல கண்ட அவன் நிகழ்ச்சிகளுக்குகல்வெட்டுச் சான்றுகள் கணக்கிலடங்காதவை உண்டு -
அமைத்திட்ட ஆலயங்களுக்கும்ஆவணங்கள் பல உண்டு -
அவன் அரசு நிர்வாகம், ஆட்சி முறைசெங்கோல் சிறப்பு பற்றிக் கூற செய்திகள் உண்டு.
ஆனால் அகிலத்தை உலுக்கிய அலெக்சாண்டரினும்ஆற்றல் மிக்கவனாய் உறுதிபடைத்தவனாய்
புகழ் செதுக்கிய அந்தப் பூபதிக்குப்பிறந்த நாள் மட்டும் குறிப்பிடப்படாமலே போய்விட்டது!
ஆண்டு எதுவென அறியாத நிலையில் ஐப்பசி திங்கள் சதய நாளில்அவன் பிறந்தான் என்ற குறிப்பு மட்டுமே உள்ளது -
அந்த அடிப்படையில் இராசராசனின் சதய விழாஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
கல்வெட்டுகள், சாசனங்களில் குறிப்புகள் வரைந்துசோழரின் பேரரசு காலத்து நிகழ்வுகளை செதுக்கி வைத்த
மன்னவனுக்கு; அவனுடன் இருந்தவர்களோ; அவன்மக்களாகப் பிறந்தவர்களில்
எவருமே உருப்படியாக யோசித்து, அவன் மறைந்த நாளைஎழுதி வைக்கவும் மறந்து விட்டனரே!
எதிர்காலச் சொத்தாக அவற்றை எடுத்துக்காட்டவில்லையே என்பதுஏமாற்றத்துக்குரியதுதான்; அதற்கு நாம் தலைகுனியவேண்டியது தான்!
பிறந்த நாள் குறிப்பு இல்லாமையினால் ஒருவர்பிறக்கவே இல்லையென்று ஆகி விடுமா ?
கார்காலம் கனமழை பொழிவது குறிப்பாக எந்த மேகத்திலிருந்துஎனக் கணிக்க முடிகிறதா ?
நிரம்பியுள்ள - ஏரி குளங்களைக் கண்டு தானேநிச்சயிக்கிறோம் பெருமழை பெய்ததை!
அது போலத் தான் பேரரசு ஒன்று அமைந்ததை வைத்துஇராசராசன் பெருமையைக் கணக்கிட்டுப் புகழ்கிறோம் -
அவன் நடத்திய போர்களை எண்ணி வியப்புறுகிறோம் -அவன் பெற்ற வெற்றிகளை நினைத்து நெஞ்சமிக விம்முகிறோம்....
மேகத்தை மறந்தாலும் மழையை மறக்காதது போல் - அவன்பிறந்த நாளை மறந்தாலும் - பெருமைகளை மறந்தோமில்லை!
தமிழர்களைத் தனி மகிழ்ச்சி அடையச் செய்த ஆட்சியன்றோதரணி புகழ் இராசராசன் ஆட்சி!
நாடாள மகுடம் புனைந்த நான்காம் ஆண்டேசேர நாட்டின் மீது படையெடுத்தது சோழ நாட்டுச் சீயம் -
அதற்குத் தலைமையேற்ற தளநாயகன்பஞ்சவன் மாராயன் எனப் பெயர் கொண்ட
அஞ்சா நெஞ்சன் அருமைப் புதல்வன் இராசேந்திரச் சோழன்அப்போரில் எதிர்த்து வந்தோர் சேர பாண்டியர்
அவர்களிருவரையும் வென்று காட்டிக்குன்றமென நிமிர்ந்து நின்றதாம் சோழர் குலம்.
★ ★ ★
குடமலை நாட்டில் இராசராசனின் தூதன்; பெருமை குலைந்திடநடத்தப்பட்டதாக குமுறியது சோழர் பெரும் படை -
‘மகனே; புறப்படு’ எனும் மன்னன் ஆணை கேட்டுமாற்றாரை மண்டியிட வைத்தே திரும்புவேன் என்று
இராசேந்திர சோழன் எடுத்துப் பிடித்த வாளினைத்தடுத்து நிறுத்த எவராலும் முடியவில்லை!
குடமலை நாடு பணிந்தது - குலுங்கச் சிரித்து ;கோபம் தணிந்தது தஞ்சை!
★ ★ ★
கொங்கு நாடு கொடுங்காளூர் சிற்றரசர்கள்,மேலைக் கடற்கரையை ஆண்டவர்கள்
அனைவருமே அடி பணியவும் அவர்தம் முடிதாழ்த்தவும் தயாராயினர் -
தடையின்றி அங்கெல்லாம் எங்குநோக்கினும் சோழர் படை! சோழர் படை!
“கீர்த்தி பராக்கிரம சோழன்” என விருது பெற்றுவெற்றியும் பெற்று அந்தத் திருமகன் திரும்பினான் தஞ்சைக்கு!
★ ★ ★
அன்றைய மைசூரில் ஒரு பகுதி கங்கபாடிஅதற்கப்போது தலைநகர் தலைக்காடு -
அரசர்க்கரசன் இராசராசன் காவிரி தாண்டினான் முதலில்!அடுத்து கங்கபாடியில் நுழைந்தான் ; படையுடன்!
அதனையும் கைப்பற்றி,அத்துடன் தடிகைபாடியையும் தன்னாட்சிக்குக் கீழே
கொண்டு வந்து - கொடி நாட்டினான் - சோழர்கொற்றம் தழைத்தது ஆங்கே!
★ ★ ★
கீழைச் சாளுக்கிய நாடு பெருங்குழப்பத்தில் தவித்ததாலே ;பகையைச் சமாளிக்க முடியாமல் சக்தி வர்மன் என்பான் ;
பயந்து, சரணடைந்தான் இராசராசன் முன்னிலையில்!படையுதவி புரிந்து வேங்கி நாட்டை வீழ்த்தி
வெற்றிக் கொடியை ஏற்றிய சோழன் ;பற்றிக் கொள்க இதனையென்று - தன்
கருணைக் கரம் நீட்டினான்.பற்றிக் கொண்டான் சக்தி வர்மன் -
அதன் பிறகும் இராசராசன் தனது மகள்குந்தவையை - சக்தி வர்மன் தம்பி விமலாதித்தனுக்கு
மணமுடித்து; பலம் பெருக்கிக் கொண்டான் வேங்கி நாட்டில்!அவன் இராசராசன் மட்டுமல்ல ; அரசியலில்
அவன் இராச தந்திர ராசனுங்கூட என்பதைஇத்திருமணம் தெரிவித்தது!
★ ★ ★
கலிங்கத்தை வென்றான் என்றும் ;இலங்கையிலும் ஒரு பகுதியை கைப்பற்றினான் என்றும் ;
கல்வெட்டுக்கள் வெற்றிக் கவிதைகளைவிண்முட்டப் பாடுகின்றன.
★ ★ ★
இராசராசனின் வெற்றி வரலாற்றில்இமயச் சிகரமாக “இலட்சத் தீவு”களைக்
கைப்பற்றிய நிகழ்ச்சி அமைகிறது எனலாம் ;கி.பி. 1013ல் அவன் கடற்படை யொன்று கண்டான்.
அப்படையைப் பயன்படுத்தாமலே ‘அத்தீவுகளை’ வென்றான்தந்தை தொடங்கிய அம்முயற்சிதான் பின்னர்
தனயன் இராசேந்திரனின் கடற்படைப் போர்களில்வெற்றிகளைக் குவித்திட முன்னோட்ட முயற்சி எனலாம்.
வெற்றி குவிக்கும் படை வரிசைகளும் - எதிரியின்நெற்றிப் பொட்டில் அடித்து விரட்டும் பாசறைகளும் -
பயிற்சி பயிற்சி என எந்நேரமும்தளர்ச்சியின்றி வீரக்கட்டுப் பயிற்சி தரும்
தளகர்த்தர்களும் கொண்ட அந்தத் தமிழன் சேனையில்வேளக்காரர் படையென ஒன்றும் உண்டாம் -
அந்தப் படையினர்; தமது அயர்வால் அரசர்க்குச் சிறுஆபத்து விளைந்திடப் பார்த்தாலும்; தம்முயிரை மாய்த்துக்கொள்ளத்
தயாராக இருக்கும் தற்கொலைப் படையினர் ஆவர் ;தஞ்சை மன்னன்பால் நெஞ்சம் முழுமையும் பறிகொடுத்தவர் அவர்!
★ ★ ★
தஞ்சைப் பெரிய கோயில் கோபுரம் ;தமிழகத்திற்கு இராசராசனின் நினைவுக் கொடை எனப்
புகழ்கிறோம் - போற்றுகிறோம் - நிலைத்த கொடையும்அதுவேதான்!அதிலும் ஒரு குறை ; கோயில் கட்டினான் என்றல்ல ; ஒரு
கோட்டையிலிருந்து தானே அந்தக் கோயிலைக் கட்டினான் ;கோயிலிருக்கிறது - கோட்டை எங்கே?
இந்த வினா; தஞ்சையில் மட்டுமல்ல -தமிழக முழுவதுமே; எழுகின்ற ஏக்க வினா!
நல்லவேளை நமது மன்னர்களும் - அவர்தம்வழித்தோன்றல்களும் - அந்தக்கல்வெட்டுக்களையும் ஆவணங்களையும் -அக்கால இலக்கியங்களையும்
காத்தளித்தாவது நம் வரலாற்றை அறவே அழியாது;வைத்துள்ளனரே என்றெண்ணிப் பூரிப்போம் -
குடிமக்கள் நலனுக்கு கோவேந்தன் இராசராசன்படிப்படியாக தீட்டிய திட்டங்கள் -
ஆட்சி முறை - அதற்கான அமைப்பு முறை - அனைத்தும்மாட்சிமை நிறைந்தது எனினும் ; வடமொழி ஆதிக்கம்மேலோங்கி,
தாய்மொழி தமிழ் தவித்திடும் நிலை பிறந்தது ;இவ்வாறு தமிழ்க் குலம் தாங்கிக் கொண்ட
குறையிருந்தது எனக் கூறினாலும், அதுபாலில் மோர் கலந்தது போலத்தான்!
உழைப்போர்க்கு, உழுவார்க்கு இன்னும்நலன்பல புரிய முனைந்திருக்கலாம்
மன்னர்களுக்கு ; மகேசன் தொண்டு அதிகமானதால்மக்கள் தொண்டு ; சிறிது படுத்துக் கொண்டது போலும்!
அது காலத்தின் குறை என்பர் ;காவலன் குறையெனக் கூறுவதே பொருந்தும்!
“காலத்தின் குறையையும் ஒழுங்குபடுத்திகாவலன் நிறை காண வேண்டும்” என்பதுதானே நல்லோர்கருத்து.
அக்கருத்து தான் மூலக் கருத்து எனினும் -அக்கால முதல் இக்காலம் வரையில் - ஓர்
அரசின் வலிவுதான் - பொலிவுப் பட்டியலில்ஆரம்ப வரிசையில் அமர்ந்து கொள்வதால் -
அதற்கே முதலிடம்வழங்கப்படுகிறது வரலாறுகளில்!
இதோ இராசராசன்அமைத்தளித்துள்ள
அந்தத் தஞ்சை ஆலயம் கூடகாட்டுகின்ற கல்வெட்டு கண்டால்,
“திருமகள் போலப் பெரு நிலச் செல்வியும்தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளிவேங்கை நாடுங் கங்க பாடியுந்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
முரட்டொழிற் சிங்கள ஈழ மண்டலமும்இரட்டபாடி யேழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந்திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
நெழில்வள ருழியு ளெல்லா யாண்டும்தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
தேசு கொள் கோராச கேசரி வர்மரானஉடையார் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு”
இந்தப்பன்னிரண்டு நாடுகளை வென்றான்இவற்றைத் தன் குடைக் கீழ்க் கொணர்ந்தான்.
அவற்றின் காவல்களாம்....செழியன், சேரன், மகிந்தன், உதகை அரசன்,
குடமலை நாட்டு மன்னன், நுளம்பப்பாடி அரசன்,கங்கபாடி மன்னன், தடிகைப்பாடி அரசன், சத்தியாசிரியன்,
தெலுங்க வீமன், சக்தி வர்மன், கலிங்க மன்னன்,முந்நீர்ப் பழந்தீவுகளின் அரசன், பழுவேட்டரையர்,
கொல்லி மழவன் ஒற்றியூரான் பிருதிகண்ட வர்மன், திருவையன்சங்கர தேவன், கொடும்பாளூர் வேளான் சுந்தர சோழன்,
நன்னமரையன், வீர சோழன் இலாடப் பேரரையன்,இராசராச வாணகோவரையன், மலையமான்,
வல்லவரையன் வந்தியத் தேவன், விமலாதித்தன்என்று தான் விளக்கப்பட்டியல் இருக்கிறது; அவன் விரல் நுனியில்!
எது எப்படியிருப்பினும் ;எம்மரபும் தமிழகத்தில்
எல்லோரும் போற்றும் வண்ணம் ;அனைத்துக் கலையிலும் சிறந்தவனாய் –
அக்கலைகளைப் பரப்பியவனாய் –வீரம் விளைத்தவனாய்; வெற்றிகள் குவித்தவனாய்;
வேளாண்மையில் விருப்பமுற்றுநிலவளம் செழிக்கநீர் வளம் கொழிக்கஆறுகள் வாய்க்கால்கள்ஆழமான அகலமான ஏரிகள்அமைப்பதில் அக்கறையுடையவனாய்;அவற்றை அடிக்கடி தூர்வாரிசீரமைப்புச் செய்துபயிர் விளைக்க பயன்படப்பணி தொடர்பவனாய்,பாழ் வெள்ளம்புயற் காற்றுபாதிக்காமல் மக்களைப்பாதுகாப்பவனாய்;
பல்லாண்டு காலம் ஒருவன் வாழ்ந்தான்படை நடத்திப் பகை அகற்றினான் –
அவன் நல்லவன்வல்லவன் –அதனினும்; நமக்கு மகிழ்ச்சி தருவதுஅவன்“நம்மவன்”என்பதேயாகும்.நம்மவர்கள் எல்லாம்நல்லவர்களாகவல்லவர்களாக வாழ்ந்திடஅந்த வரலாறு வழங்கிடவருங்காலமே தமிழர்க்கு அருங்காலமாகும் –அது வருங்காலமாகவே இருக்கட்டுமே!

மூலமும் சான்றும்