கவிதை 46 / 58

முன்மாதிரியாகத் திகழ்ந்த மும்முடிச் சோழன்!

The Three-Crowned Chola Who Stood as a Model!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: முன்மாதிரியாகத் திகழ்ந்த மும்முடிச் சோழன்

X
முன்மாதிரியாகத் திகழ்ந்தமும்முடிச் சோழன்!
இராசராசன் ஆட்சிக் காலம் ; இன்பத் தமிழ் வளர்ச்சிக்கு,இன நல பயிற்சிக்கு, இன உணர்வு எழுச்சிக்கு
பண்பாட்டு முதிர்ச்சிக்கு, பழம் பெருமைப் புகழ்ச்சிக்குசமத்துவ சமுதாய மலர்ச்சிக்கு, உழவர் தம் மகிழ்ச்சிக்கு
வழிகோலி விழி திறந்த ஆட்சி ; ஆனாலும் அது வரலாற்று ரீதியாகப்பொற்கால ஆட்சி என்று பதிய வைப்பதிலே தயக்கமிருப்பதை
வெளிப்படுத்துவதிலும், அதற்கான காரணங்கள் பளிங்கு போல்தெளிவாக இருப்பதைத் தெரியப்படுத்துவதிலும் - துணிவும்தூய்மையும்
துணையாக நம் பக்கம் இருப்பதை எடுத்தியம்பும் வேளையில் ;வட புலத்து நிலப் பகுதிகளையும் வசப்படுத்தி, கடலாதிக்கத்திலும்
கையிருப்பைக் காட்டி, குமரி முதல் இமயக் கொடுமுடி வரையில்,பெரும் பிரதேசத்தை உருவாக்கி பேரரசு எனும் பெருமைநிலைநாட்டி
மூன்று நூற்றாண்டுக் காலம் தழைத்துச் செழித்திருக்கப் பாடுபட்டமுன்னோடி மன்னர்களின் சிறப்பைச் சீர்குலைக்க விழையாமல் -
அவர்கள் பெற்ற வெற்றிகள் - பெருமித விருதுகள் - எதிலும்,சினையினும் சிறிய பிழையும் காணாமல்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள மறந்த விவசாயி போல ;வாய்ப்பு வந்த போது தமிழர் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள
நினையாத நெஞ்சத்தினராய் - முடியாத முடவர்களாய் -முனையாமல்முடித்துக் கொண்டதே தமிழ் இனம் தன் முன்னேற்றத்தை ; எனும்
முணுமுணுக்கும் சோகம் தான் ; பேரரசு அமைந்த பெருமையை -அதனைமும்முடிச் சோழன் அமைத்துக் கொடுத்த அருமையை
முழுமையாகப் போற்ற முடியாத நிலைமையை ஏற்படுத்தி ; இதனைஎழுதும்போதே என் கையை நடுங்கச் செய்கிறது என்பதுதான்உண்மையாம்!
சோழப் பேரரசர் ஆட்சி நடந்த காலம் -அரசியல் துறையில் மட்டுமே அது சங்க காலம் ;
அரிய வெற்றி பல கண்ட காலம் ; ஆனால் வாழ்க்கைத் துறையில்அது சங்க கால மாண்பை - இன மாண்புப் பண்பை எட்டவில்லை!
வரலாற்றுப் பேராசிரியர்கள் மட்டுமல்ல - தமிழின்வாய்மை போற்றும் தன்மானமுடைய பெருமக்களும் வருந்தினர்.
பழுதொன்று மில்லாத தமிழர்தம் கலை இலக்கியப் பண்பாடுபழங் குலங்கும் பஞ்சசோலைப் பூ மலராத பழங்காலத்தே ;
புகுந்து விட்ட வண்டு ; பழத்தை நாம் புசிப்பதற்கு முடியாமல்செய்வதேபோல்பரந்து விரிந்து தமிழர் தேசப் பேரரசு வட திசையும் சென்றதினால்,
வாரிக் கொண்டு வந்து விட்டது அந்த நாகரிகம், பழக்கவழக்கங்களை!வண்டு துளைத்த கனியாகியது வண்டமிழர் பண்பாடு!
உதாரணமாக ; ஒரு கொடுமையே போதும் ; இறந்த கணவனுடன்உடன்கட்டை ஏறி உயிரோடு கருகிச் சாகும் வழக்கம்,
உண்டா என்றாவது தமிழ் நிலத்தில் ?.......பூதப் பாண்டியன் தேவி முதல் புவியாண்ட சோழ மாதேவிகள்வரையில்
பீடித்து விட்ட அந்தத் தொத்து நோய்க்கு மருந்து ;இராஜாராம் மோகன் ராய்தானே தர முடிந்தது ? -
உடன்கட்டை மட்டுமல்ல ; உயர்வென்றும் தாழ்வென்றும்உடன் பிறந்த மாந்தருக்குள் பேதம் கற்பித்து - அது
வேதத்தின் கட்டளை என்று அச்சுறுத்தி ;“நெற்றியில் பிறந்தோரின்” வெற்றி அறுவடையாக,
சாதியக் கட்டுப்பாடுகளும்சதுர்வேதி மங்கலங்களும் தோன்றி
சமணம் பெளத்தமெனும் சமயங்களாம் தெளிந்த நீராறுகளும்சமமாகக் கலந்திட முடியாமல் கட்டிய அணைகளும்
வந்து நம்மை நொந்திடச் செய்ததைவரலாறு காட்டும்போது வாட்டம் தானே வாட்டுகிறது!
தென்னக வரலாற்றில் சங்க காலத்துடன்திடமாகப் போட்டியிட வல்ல காலம்
சோழப் பேரரசர் ஆட்சி நடந்த காலம்.அரசியல் துறையில் மட்டுமே அது சங்க காலம் - அதில்
அரிய வெற்றி பல கண்ட காலம் - ஆனால் வாழ்க்கைத் துறையில்ஆரிய வாடை அப்போதே வீசியதால் வழுக்கல் துவக்க காலம்!
இதனைவரலாற்றுப் பேராசிரியர்கள் மட்டுமல்ல ; தமிழின
வாய்மை போற்றும் தன்மானமுடையோர் அனைவருமேவருந்தி உணர்ந்து வாயடைத்துப் போய் நிற்கிறனர் ;
வரலாற்றில் விளைந்து விட்ட மாற்றம் கண்டு!பழமையா புதுமையா ? பகுத்தறிவா ? அல்லவா ? நம்
பண்பாட்டுக்கேற்றவை எவை யெனப்பகுத்துணர்ந்து முடிவுக்கு வருவதற்கு முன்பே
பட்டத்துக்கு வந்தோர் வரிசையை இராசராசன் வென்றான்.“பரிசு” எனப் பற்பல வெளிச்ச மின்னல்கள் உருமாறிப்
புரவி நிலவாகி - உச்சிப் பகல் உயர் சூரியன் என மாறி ;சோழ வரலாற்றின் ஒளிக் கதிர் வட்டமென நின்றான்.
அவன், ஆண்டில் முதிர்ந்தவனுமல்ல ; அதனால் வாலிபனுமல்லவச்சிரமானவன் - வாளேந்தி நின்றான் என்றால்
வான்பிறையைக் கறுப்பு வண்ணத்தில் தோய்த்து மீசைவடிவத்தில்முகத்தில் பொருத்தியது போன்ற வீர மிகு உருவப் பொலிவு ;
முத்தமிடக் கூட நெரியாத முகத்தில் ஒரு கம்பீரம் - யானையின்மத்தகத்தை எடுத்து வலிமை நிறை நெஞ்சகமாகப் படைத்திட்ட
மலைத் தோற்றம் ஒரு மனிதனாகத் தோன்றுகிறதோ - எனஅய்யுறும் வண்ணம் அழகிற் சிறந்த ஆண் சிங்கம்
அமர்க்கள வேலையில்லாத ஓய்வு நேரம் அவனுக்குஅரை நாழிகை ஒரு நாழிகை கிடைத்தாலே அரசமாதேவியர்
அய்ந்தும் ஆறும் ; அவர்களைக் காண விரைந்து வருவான்.அப்படி வரும் வழியில் பலகணி வழியாக பெண்ணொருத்தி ஒன்றுகேட்கும்
அருண்மொழி அல்லது அருண் என்ற பெயரைக் கேட்டவுடன்அவன் தன்னை மறந்து குரல் வந்த திசையில் செல்வான்
பாட்டி செம்பியன் மாதேவி தன் பேரனைத் தழுவிக் கொள்வாள்பக்கத்தில் தம்பி மீது பாசம் பொழியும் குந்தவைப் பிராட்டியார்
நலம் விசாரித்தல் - நாட்டு நட்பை விவாதித்தல் எல்லாம்பாட்டியிடமும் சகோதரியிடமும் பணிவாக அன்பாக பரிவு மேலிட!
“வரவில்லையா இன்னமும் தேவர்?” என்று குந்தவையிடம்கேட்பான்.வந்து விட்டேன் என்று வந்து கொண்டே வந்தியத் தேவன்சிரிப்பான் -
அக்காளின் கணவன் அரசின் மிகப் பெரிய அதிகாரி ;அவன் குந்தவையிடம் ; என்ன எனக்கேட்டு கண் சிமிட்டுவான்!
அங்கிருந்து சற்று விலகிச் சென்றுகுந்தவையும் தேவனும் அந்தரங்கம் பேசுவர் -
உரையாடல் நடைபெறும்போதே மகளிர் குழு ஒன்றுமகிழ்ச்சி பொங்க அங்கே வந்து சேரும் -
மகளிர் குழு என்றால் ; அது தான்மன்னன் இராசராசனின் மனைவியர் கொண்ட குழு -
உலக மகாதேவி, சோழ மாதேவி, நக்கன் தில்லை அழகி,பஞ்சவன் மாதேவி, திரைலோக்கிய மாதேவி,
அபிமான வல்லி, இலாட மாதேவி, பிரிதிவி மாதேவி,மீனவன் மாதேவி, வீர நாராயணி, வானமாதேவி
இவர்களில் வானமாதேவிக்குக் கிடைத்த பேறு ;இராசேந்திர சோழனின் அன்னை என்பதாகும்.
அவனும் ; சோழ மாதேவி தொடங்கி ;ஒரு சுற்று பதினொரு பேரிடமும் நலம் விசாரித்து விட்டு ;
பாட்டி செம்பியன் மாதேவி பாதம் தொழுது ;ஈட்டி யொன்றை அவள் கையால் வாங்கிக் கொண்டு......
அவைக்க்களம் நோக்கி ஆலோசனைக்குச் செல்வான்அன்றாடம் இது அருண்மொழி வர்மனின் அரசப் பணியாகும் -
அதற்கிடையே அவன் குடும்பத்திற்கென ஒதுக்கிடும்நேரத்தில்தான்அத்தனை சந்திப்புகள்! அன்பு உரையாடல்கள்! அனைத்தும்களத்தில்
வீசப்படும் வாள்களின் வேகத்தில் ; வேல்களின் விரைவினைப்போல்!பரபரப்பு! சுறுசுறுப்பு! என்றோ ஒருநாள் இயற்கை அளித்தால் ;இடைவேளை!
இப்படி இராசராசன் பம்பரமாய்ச் சுழன்றான் - பரிதியாய்க் கடமைஆற்றினான் -இளைய மகள் குந்தவை ; விமலாதித்தன் மனைவி, வருவாள் -அவள்
இல்வாழ்வு பற்றிப் பேச்சிருக்காது ;இருவரும் ‘ராஜ்ய பாரம்’ பற்றியே விவாதிப்பார்.
வேலேந்தி விட்டால் களத்தில் அதற்குரிய வேலை தான் பார்க்கவேண்டும் ;கோலேந்தி விட்டாலும் ; குடிகளைத்தானே கவனிக்கவேண்டும் -
குடும்பத்தையே கவனிக்க முடியுமா ?முடியாது என்பதற்கு இந்த மும்முடிச் சோழனே முன்மாதிரியாகத்திகழ்ந்தான்.

மூலமும் சான்றும்