கவிதை 45 / 58

தந்தை இராசராசனும், சிந்தை கவர்ந்த செல்வனும்!

Father Rajaraja and the Son Who Captivated Hearts!

X
தந்தை இராசராசனும்,சிந்தை கவர்ந்த செல்வனும்!
குருதி கொண்டு வரையப்பட்ட“ஆதித்த கரிகாலன் கொலை” என்ற
பயங்கரச் சரித்திரத்திற்குப் பின்னர்இரண்டாம் பராந்தகன் எனும்
சுந்தரச் சோழன் “காஞ்சிப் பொன்மாளிகை”யில்பிள்ளைப் பாசத்தினால் மனமுடைந்து மரணமுற்ற
சோகப் பின்னணி இசை ஒலித்துக் கொண்டேயிருந்திட ;நடந்து முடிந்த அவல நிகழ்ச்சிகளுக்கான காரணங்கள்
வினாக்குறிகளாகப் பேருருக் கொண்டிருந்த போதுமதுராந்தகன் கி.பி. 970ஆம் ஆண்டில் ஆட்சி பீடம் ஏறினான்.
ஆதித்த கரிகாலன் கொலைக்குஅவனுமோர் காரணமென ஒரு கூற்றும் -
அவனாக இருக்க முடியாதென்ற ஒரு மறுப்பும் -வரலாற்றுப் பக்கங்களில் வாதப் பொருள்களாயிருந்தபோது ;
அந்த வஞ்சகச் செயல்புரிந்தோரை வரிசைப்படுத்தி,பஞ்சவன், பிரமாதிராசன், பரமேசுவரன்,
தேவதாசன், சோமன், ரவிதாசன் எனஅறுவரின் பெயர் கூறி ; அவர்களில் நால்வர்
அய்யர் என்று அடையாளம் காட்டிகாட்டுமன்னார்குடிக் கல்வெட்டு கண்ணீர் சிந்துகிறது!
ஆய்வு செய்த அறிஞர் பலர்ஆளுக்கொரு தகவல் சொல்வதால் ;
ஆதித்த கரிகாலன் கொலை என்றஅதிர்ச்சியிலிருந்து நாமும் நம்மை மீட்டுக் கொண்டு
அதைவொட்டி ஆட்சிச் சக்கரத்தைஅருண்மொழி வர்மனாம் இராசராசன் இயக்கிய
அற்புதத்தைத் தொடர்ந்து செல்வோம் - அவன்பொற்காலப் பேரரசை அமைத்த விதம் அறிந்து கொள்வோம்.
உத்தம சோழன் எனும் மதுராந்தகன் தான்உண்மையிலேயே ஆதித்த கரிகாலன் கொலைக்குக்
காரணம் என்றால் ;அவன் ஆட்சி அமைத்தவுடன் அருண்மொழியாம்
இராசராசனை இளவரசனாக அறிவித்திடாமல்தன் மகனையன்றோ நியமித்திருப்பான் என
தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர் ;வினவுகின்றார்!
அவ்வாறு மதுராந்தகன் செய்திருந்தால் ;அவன் புரிந்த மாமக் கொலையை மறைப்பதற்காகத் தான்
அருண்மொழி வர்மனை இளவரசாக்கினான் ; என்றுஅப்போதும் ; அஃதோர் தந்திரமென மக்கள் அம்பலத்தில்ஏற்றுவரே!
அதனால்தான் கண் துடைப்பு நாடகமாக ;அவன் மகனை விடுத்து அருண்மொழியை இளவரசனாக்கினான்
எனவும் கணிக்கலாமல்லவா ? அவன்கனவும் பலித்ததம்மா என்பதே போல் ;
உத்தம சோழன் உயிராய்க் கருதிய பதவியும் கிடைத்தது - அதைப்பாதுகாக்கும் கேடயமாக இராசராசன் உறவினரும் கிடைத்தனர்.
வஞ்சகம் புரிந்து ஆதித்த கரிகாலனை வதைத்தவர் பார்ப்பனர்என்றுவரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் தான்
வாதத்தையே ஆரம்பித்து வைத்தவர் ஆவார் - அதை மறுத்துமதுராந்தகன் நிரபராதி என சதாசிவ பண்டாரத்தார் சான்றுகாட்டுகிறார்!
இருவருமே காட்டும் சான்றுகள் ;கல் வெட்டும் செப்பேடுகளுமே தான்.
நாம் அந்தச் சாட்சியங்களைச் சற்று நகர்த்திவெளியே நிறுத்தி விட்டு ; சந்தேக சூழ்நிலையில் அளிக்கும்விடுதலையை
தீர்ப்பாக வழங்கி விட்டு ;தென்னகம் மட்டுமன்றி இந்திய
தேசம் முழுதும் தமிழர் பேரரசு நிறுவியதங்க மகன் - சிங்கம் நிகர் சோழன் -
இராசராசனைப் பின் தொடர்ந்து சென்றால்,இவன் ஆட்சியை எப்படி நிலைப்படுத்திக் கொண்டான்
என்பதை ஆராய்ந்து அறியலாம் - அடங்கா மகிழ்ச்சிஅடையலாம் -இளவரசப் பொறுப்பில் இயங்கும் இராசராசனுக்கு
அரச நிர்வாகம் அரசியல் தந்திரம் -அடுத்தாரை அரவணைத்தல் எவ்வாறு ?
தடுத்தாரைத் தன் வயமாக்குதல் எவ்வாறு? எனும்அனைத்துக் கலைகளிலும் மதுராந்தகன் பயிற்சி தந்தான் ;
ஒருவேளை ; செய்த குற்றத்துக்குப்பரிகாரம் தேடும் செயலாகவும் இருக்கலாம்.
மறப்போம் பகை துறப்போம் சோழமண்டலத்துப் பலம் பெருக்குவோம்
எனச் சொல்லாற்றல் செயல்பட்டுஎப்பகையும் எதிர் நில்லாமல்
ஏறு நீ, ஏறு நீ, என எதிர்கால வெற்றிகளை நோக்கியேமுன்னேறி முடி சூடிக் கொண்டவன்
இராசராசன் கி.பி. 985 ஜூன் திங்கள்இருபத்தி ஐந்தாம் நாள் -
பட்டத்திற்கு வருவதற்கு முன்பே இராசராசன்பதினாறு ஆண்டுகள் இளவரசனாகப் பரிபாலனப் பயிற்சி பெற்று
அதற்குப் பின்னர் அவன் பட்டமேற்று முடி சூடியஆண்டைக் கணக்கிட்டால் ; சுற்றொப்ப அகவை நாற்பதில் தான்
அரசாட்சியை நேரடியாக நடத்தலுற்றான்!அதன் பிறகும் முப்பது ஆண்டுகள் ஆண்டு முடித்தான் ;
அவன் மகன் இராசேந்திரனும் அகவை ஐம்பதில்தான்ஆயிரத்துப் பன்னிரெண்டாம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறுகின்றான் -
தந்தை இராசராசன் உயிர் வாழ்ந்த போதே தமிழர்சிந்தை கவர்ந்த செல்வன் இராசேந்திர சோழன் மன்னனானான் -
தந்தையின் கைச் செங்கோலின் மகிமை ; வட திசையில்கிருஷ்ணையாறு வரையிலும் பரவியிருந்தது என்றும் -
மேற்றிசையில் அரபிக் கடல் அலையும்தென் திசையில் இலங்கைத் தீவும் -
எற்றிப் பணிந்தன இவ்விருவர் ஆட்சியை என்றும் -வானளாவப் புகழ்ந்து வணங்குகிறது வரலாறு!

மூலமும் சான்றும்