கவிதை 44 / 58

இரும்புத் தூணும் ஈக்களின் இறகும்!

The Iron Pillar and the Wings of Flies!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: இரும்புத் தூணும், ஈக்களின் இறகும்!

X
இரும்புத் தூணும்ஈக்களின் இறகும்!
ஆதித்த சோழன் காலத்தில் அவன் மகன் என்ற நிலையில்ஆட்சியில் அமர்ந்தவன் முதலாம் பராந்தகன்
அவனுக்கு மனைவிகள் பன்னிருவர் -அவ்வர் மகன்கள் -
இராசாதித்தன், கண்டராதித்தன்,அரிகுலகேசரி, உத்தமசீலன், அரிஞ்சயன்.
இவர்களில் இராசாதித்தன்இறந்து விட்டான் தக்கோலம் போரில் என்பதால்,
இவனுக்கடுத்த கண்டராதித்தனே பட்டம் பெற்றான்.மழவரையன் மகள் செம்பியன் மாதேவியை
மணந்து உத்தம சோழனை மகனாகப் பெற்றான்.மதுராந்தகன் என மற்றொரு பெயரும் இவனுக்கு உண்டு.
கண்டராதித்தன் காலமான போது, மதுராந்தகன்மழலைப் பருவத்தினன் என்பதால் ;
அரிஞ்சயன் எனும் தம்பி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றான் எனினும் ;அவனும் அகால மரணமே அடைந்தான்.
அரிஞ்சயனின் மகன் இரண்டாம் பராந்தகன்அடுத்து, பட்டத்திற்கு வந்தான்.
இராசகேசரி எனும் விருது இவனுக்கு வழங்கினர்.இளையவனாக இவன் இருந்த போதிலும் ; போரில்
வீர பாண்டியனை எதிர்த்துச் சேவூர் எனுமிடத்தில்வெற்றியும் பெற்றுப் பாண்டியனை சாவுருக்கும்
அனுப்பி வைத்தான் என்று திருவாலங்காட்டில்அமைந்துள்ள செப்பேடு ; இவன் திருப்புகழ் பாடுகிறது.
இரண்டாம் பராந்தகன் துணைவியரில் குறிப்பிடத்தக்கோர்இருவர் -ஒருவர் மலையமானின் செல்வி வானவன் மாதேவி -
இவர்தான் தனது கணவனுடன் உடன் கட்டை ஏறியவர்.“ஏறுவதாக நினைத்தேன்” என்று எவரையும் ஏமாற்றியவரல்ல.
அந்தப் பழக்கம் பகுத்தறிவுக்கேற்றதில்லை யென்று நாமும்அதனைஅன்றும், இன்றும், என்றுமே ஆதரித்தது இல்லை.
வானமாதேவியும் அவர் வாழ்க்கைத் துணைவர்இரண்டாம் பராந்தகனும் இன்னுயிர் இழப்பதற்கு முன்பு,
சோழப் பேரரசு உருவாகக் காரணமாய் விளங்கியசொக்கத் தங்கமாம் ; சோழ இளவல் இராசராசன்
வானமாதேவியாம் அவன் தாய் மடியில் அமர்ந்துவாள் சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தான்.
இரண்டாம் பராந்தகனின் இன்னொரு மனைவி சேரன் மாதேவி -இவர் பெயரால் அமைந்த ஊர்தான் ; “சேரமாதேவி”யாகும்!
இராசராசனையும், ஆதித்த கரிகாலனையும், குந்தவைநாச்சியையும்தந்திட்ட தாயாம் வானமாதேவியின் மணி வயிறு ; சோழரின்
புலிக் கொடி புவியெங்கும் பறந்து கண்டு குளிர்ந்தது! அதற்குத்தன்புதல்வர்களின் ஆற்றலே காரணம் என்பதுணர்ந்து ; “ஈன்றபொழுதின்
பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்”என்ற குறளுக்குஇலக்கணமாகத் தானே ஆனது கண்டு இறும்பூதெய்தினாள்அந்தத் தாய்!
வானமாதேவியின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் எனினும் ;அவன்தனது தந்தை இரண்டாம் பராந்தகன் உயிரோடிருந்த போதே -
பாதகர் சதி யொன்றுக்குப் பலியாகி விட்டான் - அதுபாராளும் உரிமை யாருக்கென்ற கேள்வியால் வந்த வினை!
ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டவுடன் அடுத்து பட்டத்துக்குவரவும்முறைப்படி முடிசூட்டிக் கொள்ளவும் இராசராசன் உரிமைபெற்றவன் என்பதால் ;
அவனேதான் ஆட்சிக்கு வர ஆவல் கொண்டு அச்சதி செய்துகொன்றான், என்றுஅவதூறுப் பழியொன்று இராசராசன் மீது கிளம்பிற்று! அப்பழியும்
ஆதவனைக் கண்ட பனி போல அக்கணமே விலகிற்று ;ஆனால் நடந்தது என்ன என்பதை நாடு உணர்ந்து கொண்டது.
உண்மையில் இரண்டாம் பராந்தகனின் மறைவுற்ற மகன்ஆதித்த கரிகாலன்தான் உரிமையுடையவன் ஆட்சி நடத்திடஎனினும்
‘உத்தம சோழன்’ எனப்பட்டம் மாத்திரம் பெற்றிருந்த மதுராந்தகன்உயிர் பறிக்கும் வேலையை ஒரு விளையாட்டாகக் கருதி ;
தன் பெயருக்கே சற்றும் பொருத்தமில்லாமல்,வன்முறைச் சதியை ஒரு நாள் முடித்து விட்டான் என்பர்.
செயலுக்கும், பெயருக்கும் சிலருக்குப் பொருத்தமில்லைஎன்பதற்குச்சான்றாக அமைந்து விட்டான் ; சான்றோர் அவையில் கலந்துவிட்டான்!
உத்தம சோழன் மீது ஊரார் சுமத்துவதுவீண் பழியே என்றும் - அவனது உற்றார் உறவினரே
ஆதித்த சோழன் கொலைக்குக் காரணமென்றும்வேறு கதை புனைந்து விளக்கமளிப்போரும் உண்டு.
ஏதோ ஒன்று ஆதித்த சோழன் முடிவுக்குக் காரணமாயினும் ;எவர் செய்தார் அச்சூழ்ச்சி என்பது மர்மமாயினும்
சூழ்ச்சி செய்தே அவன் உயிரைச் சுருட்டி விட்டார் என்பதைஎதிர்த்து வாதிட்டோர் எவரும் மறுத்ததில்லை.
இனி இராசராசன்தான் மன்னன் என எண்ணியிருந்தோர்இனிய கனவுகளில் மூழ்கியிருந்தோர்; ஏமாற்றத்தால் தத்தளித்தார்.
ஆனால் இராசராசன் ; அனைவரையும் அமைதிப்படுத்தி -ஆதித்த கரிகாலன் சாவுக்கு மதுராந்தகனும் காரணமோவெனஐயுற்றிருந்தும் ;
அந்தச் சிற்றப்பனையே செங்கோல் ஏந்திடச் செய்தான் -அதனால்“அருள் மொழித் தேவன்” என்ற பெயர் ;
அவனுக்கு எவ்வளவு பொருத்தம் பாருங்கள் - எனவேஆதித்தன் கல்லறையே மதுராந்தகன் மகுடம் புனைந்துஅமருகின்ற சிம்மாசனம் ஆயிற்று ;ஆம் ; சதி வென்றது - அப்பாவி மக்களே ;
அடடா ; விதி வென்றதே என முணுமுணுத்துவிழிநீர் பெருக்கினர் ; இத்தனைக்கும்
இராசராசன் இதயத்தில் எள் முனைச் சலனமும் இல்லை.இரும்புத் தூண் ஈக்களின் இறகுபட்டா இற்றுப் போகும் ?
இளவரசனாக இருந்தே இந்த ஆட்சியைக் கண்காணிப்பேன் எனச்சூளுரைத்துப் பொறுப்பேற்ற இராசராசன் ; சிற்றப்பா மதுராந்தகன்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் -சற்றும் கண் அயராமல் கவனித்து வந்தான் ;
முற்றும் உணர்ந்தவனல்லவா ; சிற்றப்பாவைப் பற்றி!முடியைத் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டு ;
முடித்தவனாமே ஆதித்தசோழனின் ஆயுளை ; அதனால்“முருகன் மயில் மீது அமர்ந்தது போல்” என்பார்களே ;
அது போல், இளவரசுப் பொறுப்பில் அமர்ந்து கொண்டு அந்தமயிலாக மதுராந்தகச் சோழனையே மனத்தில் எண்ணியிருந்தான்.
பெரிய குடும்பங்களிலே வீட்டுத் தலைமைக்கே போட்டியிருக்கும்நிலைமையில்பேரரசுக்கான நாட்டுத் தலைமைப் பதவிக்குப் போட்டியில்லாமல்போய்விடுமா ?
அதைத் தான்புத்தி சாதுர்யத்தாலும் - பொறுத்தார் பூமியாள்வார் எனும்பொன்மொழி மீது கொண்ட நம்பிக்கையாலும்
அவற்றுக்கெல்லாம் மேலாக - அரண்மனைக்குள் குழப்பமெனில்அது அந்நியர் நுழைவுக்கு இடம் கொடுத்து விடும் என்றஅச்சத்தாலும்,
இராசராசன் இளம் பருவத்திலேயே இங்கிதம் புரிந்துநடந்து கொண்டான் - பின்னர் நாடும் ஆண்டான்!

மூலமும் சான்றும்