கவிதை 40 / 58

காஞ்சி மண் காட்டிய கனிவும் கருணையும்

The Tenderness and Compassion Shown by the Soil of Kanchi

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: காஞ்சி மண் காட்டிய கனிவும் கருணையும்!

X
இறையினால் அனுப்பப்பட்டவர் எனப் போற்றப்படும்இஸ்லாம் தீர்க்கதரிசி முகம்மது நபிகளார்,
மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற கி.பி. 622“ஹிஜ்ரா” எனக் கூறப்படுவதாகும்!
அதே காலத்தில்தான் இங்கே அப்பர் எனும்அருளாளர் திருநாவுக்கரசரும், மகேந்திர வர்மனும்
வாழ்ந்தனர் என்று ‘மகேந்திரன் வரலாறு’ எழுதியமயிலை சீனி. வேங்கடசாமி ஒப்பிட்டு உரைத்து ;
காஞ்சிப் பல்லவ மன்னனின் காலத்தைக் கணக்கிட்டுக்காட்டுவது நமக்கெல்லாம் களிப்பூட்டும் ஒரு செய்தியாகும்.
அந்த மகேந்திர வர்ம பல்லவனின் மைந்தன்நரசிம்ம பல்லவனின் நாட்டுக்கு எல்லை எது ?
வடக்கே சாளுக்கியர் ஆட்சியும், தெற்குத் திசையில்வைகை நதிக்கரை பாண்டியர் பரிபாலனமும்
மேற்கு திசை மேவிடிலோ சேரர் பூமி யென்றும் சூழ்ந்திடமத்தியில் அமைந்ததே எல்லை என்று வரலாறு வரைந்து காட்டும்.
அந்தப் பல்லவர் ஆட்சி வலிமை பெற்றிடக் கூடாதென்றும்ஆழமாக வேரூன்றி விடல் ஆகாதென்றும் அழுகையை கொண்டு,
அடிக்கடி படையெடுத்த ஆதிக்க வெறியன் சாளுக்கியபுலிகேசியின்ஆணவத்திற்கு முடிவு கட்ட ஆர்த்தெழுந்தான் நரசிம்மன் -
புய வலிமையினாலும், போர்த் திறனாலும் புலிகேசியைபுறமுதுகிடச் செய்து காஞ்சிப் பல்லவர் படை
வாதாபி வரையில் அவனைத் துரத்திச் சென்று ; பல்லவன் ; தனதுதளபதி பரஞ்சோதியின் ஆற்றலையும் புலிகேசிக்குப்புரியவைத்தான்.
பல்லவரின் சின்னத்தை வாதாபி ஆலயத்தில் அழகுறப் பதித்துஅது இன்றைக்கும் காணுகிற அளவுக்குச் சரித்திரச்சின்னமாயிற்று!
நரசிம்மவர்மனின் நாடு புகழ் வெற்றியினைக் குறிப்பிடும்கல்வெட்டுகள் ;“பல நூறு யுத்தங்கள் நடத்தியவனும், பரியலும், மணிமங்கலம்,சூரமாரம்
எனும் களங்களில் தோற்றோடிய புலிகேசியின் முதுகில் ;தனது வெற்றியை எழுதியவனுமான பல்லவ மன்னன்” என ;
வியந்து பாராட்டுகின்றன வேலூர், கூரம், சந்திரமங்கலம்பட்டயங்கள் ; இதனை வரலாறு பறை சாற்றுகின்றது!
காஞ்சியைச் சேர்ந்த தர்மபாலர் எனும் பேராசிரியர்தான்நாலந்தா பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர் என்பதால்
பெருமையுடன் காஞ்சி வாழ் கற்றறிந்தோர் ; பேருவகையும்பெருமிதமும் இன்றைக்கும் கொள்கின்றனர்.
திராவிடப் பகுதியாம் காஞ்சிபுரத்தில் திகம்பர சமணர் பலர்திருவுடையார் எனத் திகழ்ந்து வாழ்ந்ததையும் -
கெளதம புத்தரே காஞ்சிக்கு வருகை தந்துநூற்றுக்கணக்கானவரைபெளத்தராக்கியதையும் சீனத்து யுவான் சுவாங் குறிப்பிட்டமறக்கவில்லை.
இனிய நண்பர்களையும் நரசிம்ம வர்மன் கைவிட்டுப்பழக்கமில்லை.இலங்கையில் மானவர்மன் என்றோர் சிற்றரசன் ; அவனை
மாற்றார் தோற்கடித்துக் குடும்பத்துடன் தோணியொன்றில்-இந்துமாக்கடலில் மிதக்க விட்டு நாட்டை விட்டே துரத்தி விட்டார்!
மனமொறிந்த மானவர்மன் ; நண்பன் நரசிம்மன் தனதுஇன்மில்லாவிடினும் ; நட்புக்குப் பெருமை சேர்க்கும் இனிய
குணம் கொண்டவன் என்ற நம்பிக்கையில் ;மாமல்லபுரம் துறைமுகம் நோக்கித் தோணியைச் செலுத்தினான் ;
முகம் கோணி வரவேற்பானோ நரசிம்ம நண்பன் எனஅகம் வினவு ; அங்கு வந்தடைந்த மானவர்மன் ;
அதிசயத்தால் அயர்ந்து போனான் -ஆச்சரியத்தில் மயங்கிப் போனான்!
அவனையும் அவன் துணைவியையும்சொந்தச் சோதராக் குடும்பத்தினர்போல
அண்ணனாக நரசிம்மன் மாறி தன் அரண்மனைக்குஅழைத்துச் சென்று, அணிமணிகள் அனைத்தும் வழங்கி ;
“ஆருயிர் சோதரா! ஆக வேண்டியது அனைத்தையும் தந்திடஆதரவுக் கரம் நீட்டியுள்ளேன் - இலங்கையில் உன்
பகைவரை வீழ்த்தி மீண்டும் நீ மகுடம் புனைய, என்ன வேண்டும்கேள் ;தயங்க வேண்டியதில்லை ; தட்டாமல் தருகிறேன்” என்றான்பல்லவன்.
“வாள் முனையில் வெற்றிகளைக் குவிக்கும் வீரரே ; நண்பனாய்நடித்த ஒருதேள் மனத்தான் சூழ்ச்சியாலே மண் இழந்தேன்,மாளிகையிழந்தேன் -
மானமிழக்காமல் மானவர்மன் வாழ்வதற்கு வகை செய்க என்றேதானம் கேட்க வந்துள்ளேன் உன் துணையை” என்றான்இலங்கை நண்பன்.
எத்தனை படை வீரர்கள் தேவையெனினும் அழைத்துச் செல்க;இதோஎஃகினைய உளம் படைத்த பரஞ்சோதித் தளபதியிருக்கிறார், அவர்
தேவையானவற்றையெல்லாம் செய்து தருவார் என்று; பல்லவன்;பார்வையைப் பரஞ்சோதியின்பால் திருப்பிடவே;
பரஞ்சோதி “நான் தயார்; தங்கள் நண்பருக்குத் தேவையானபடை அனுப்புவதற்கு” எனத் தலையசைத்து விடை பெற்றான்.
★ ★ ★
காஞ்சிப் படையுடன் களம் காண மானவர்மன் புறப்பட்டான்வாஞ்சையுடன் தழுவி நரசிம்மன் நண்பனை வழியனுப்பிவைத்தான்.
இலங்கைப் போரில் எதிரிகளுக்கே வெற்றி கிட்டியதால்இதயம் நொறுங்கி இனிய நண்பன் காஞ்சிக்கே திரும்பி வந்தான்.
வீழ்ச்சிக்கான காரணத்தை விளக்கமாக அறிந்து கொண்டு - இனிவியூகம் எப்படி வகுத்திட வேண்டுமென்ற வித்தையையும் கற்றுத்தந்து
மானவர்மனை வழியனுப்ப நரசிம்மன் மாமல்லைத் துறைமுகம்மகிழ்ச்சியுடன் கிளம்பி விட்டான்.
அங்கோர் அதிர்ச்சி காத்திருந்தது அவர்களுக்கு -“அரசர் நரசிம்மர் இல்லாமல் நாங்கள் கப்பல் ஏற மாட்டோம்”; எனப்
படை வீரர்; அனைவருமே ஒருமுகமாய் எதிர்ப்புக் காட்டி -“பல்லவ பூபதியும்; இலங்கைக்கு எம்முடனே வந்தால்தான்,
ஏறுவோம் கப்பல்” என்று வேண்டுகோள் விடுத்தனர் -மானவர்மன் மனக் கலக்கம் கண்டு அஞ்சாதீர் என அமைதிப்படுத்தி;
நரசிம்ம வர்மன் அந்தக் கப்பலிலே ஏறிக் கொண்டான் -“மன்னர் வாழ்க!” ஒலியுடன் காஞ்சிப் படை பயணம் தொடங்கியது
கடலில் கொஞ்ச தூரம் சென்றவுடன் - தன்உடலைக் கம்பளியால் மூடிக் கொண்டு;
கப்பலின் வேறு வழியாகக் காஞ்சியின்காவலன் இறங்கி விட்டான்; படகொன்றில்!
அவன் படை போய்ச் சேர்ந்தது இலங்கைக்கு!மன்னன் தம்மோடு இருக்கின்றான் என்ற மனத் தெம்போடு
மாவீரர் வளைத்தனர் மாற்றார் படையை; விளைவுமானவர்மனுக்கு வெற்றி மாலை!
மாற்றார், களத்தில் மாய்ந்தனர்;மாமல்லை மன்னாதி மன்னன்,
நரசிம்மன்; நண்பனையும் காத்து அவன்நாட்டையும் காத்து; இருவரிடையே - தூய
நட்பு பூத்திருப்பதை இச்செயலால்நல்லதோர் காட்சியாக்கிக் களித்தான் -
மண்ணாளும் மகராசர் என்றால் - அவர்க்கட்டுமனமென்ற ஒன்றே இருக்காது; இருந்தாலும் அதில்
மனித நேயம் துளிர்க்காது என எண்ணுவோர்க்குமண்டையிலடிக்கும் பதிலாக;
மானவர்மனை மீண்டும் நரசிம்மன்மன்னராக்கிய நிகழ்ச்சி அமைந்தது -
எல்லாம் காஞ்சி காட்டிய கனிவும் கருணையும் - எனக்கூறி நட்புக்குநல்லான் நரசிம்மன் வாழ்க என மடல் வரைந்தான் மானவர்மன்!அதில்;
பாறைகளைக் குடைந்து மண்டபங்கள் கண்டார் உம் தந்தை - நீயோபகைப் புலத்தைக் குடைந்து வெற்றிக் கம்பங்கள் நாட்டுவதால்
பனிக்காற்று பட்டது போல் குளிர்கிறது எம் மக்களின் சிந்தை!”இனிய மடல் கண்டு மகிழ்ந்தான் மன்னன்;எனினும், மமதை கொண்டானில்லை!

மூலமும் சான்றும்