கவிதை 41 / 58

பாதுகாப்போம்; பல்லவர் தலைநகரம்!

Let Us Protect It: The Pallava Capital!

X
பல்கலைக் கழக மாணவர்களுக்குப்பாடநூல்கள் எழுதி அவற்றில் பல நூல்கள்,
மாணவர்க்குப் பாடமாகவும் இருக்கும் நிலையில்,முனைவர் ந.க. மங்களமுருகேசன் எழுதிய
“பல்லவர் வரலாறு” பாடநூலை படித்தபொழுதுபல்லவர் ஆட்சிக்குக் “காஞ்சி - தலைநகர் அல்ல” என்று
பெரிதாக வாதிட்டிருப்பது பெரும் வியப்பளித்ததினால் ;பேராசிரியர் அன்பழகனாரிடம் அதுபற்றிப் பேசிய வேளையில்,
“பல்லவர்க்குக் காஞ்சிபுரம் தலைநகரல்ல என்பதைவிட,பல்லவரே இல்லை ; காஞ்சிபுரமே இல்லையென்றுகூறிவிடலாமே!” என்றார்.
காஞ்சி ; பல்லவர்க்குத் தலைநகராயிருந்ததில்லை யென்றகருத்தொன்று மாணவரிடையே பரவி விடக் கூடாதே என்பதற்காக ;
ஆதாரங்களை நான் தேடியதில் அறிந்தவற்றை அளிக்கின்றேன்.ஆய்வு செய்து வரலாறு எழுதுவதில் வல்லவராம்
மயிலை. திரு. சீனி வேங்கடசாமி எனும் அறிஞர் ;“மகேந்திர வர்மனின் தந்தை சிம்மவிஷ்ணு,
காஞ்சியைத் தலைநகரெனக் கொண்டேகட்டியாண்டார் பல்லவ நாட்டை” யென்று ; கதையல்ல,
காசாகுடி வேலூர்பாளையம் செப்பேட்டுச் சாசனங்கள்சான்றுகளாகி விளக்குகின்ற நிகழ்வுகளை நினைவூட்டுகின்றார்.
புலிகேசியுடன் பல்லவர் போரிட்ட புள்ளலூர் ; செங்கை மாவட்டம்,காஞ்சிக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவு தான் என்பதும் ;
மகேந்திரன் நரசிம்மன் காலத்துமலைப்பாறை சிற்பங்களும்
மனங்கவர் குகைக் கோயில்களும், குறிப்புகளும்மாமல்லபுரமென்றும், பல்லவபுரமென்றும்,
மாமண்டூர், சிங்கவரம், மண்டகப்பட்டு என்றும்,மகேந்திரவாடி, திருக்கழுக்குன்றம், தளவானூர் என்றும்,
பல்லவ மன்னர் அடையாளச் சின்னங்களெனமங்கல முருகேசனே சுட்டிக் காட்டுவதால் ; அவரே
மறுக்கத் தேவையில்லை ; காஞ்சித் தலைநகரை -மாற்றி அமைக்கவும் தேவையில்லை ; ஆந்திர தேசத்திற்கு!
சீன யாத்திரிகர் யுவான் சுவாங் குறிப்பில் ; குறுக்கேகாஞ்சிக்கும் கடற்கரைக்கும் இருப்பது கல் தொலைவு
என்கிறபோது, அதை மறைத்தும் மறுத்தும்காஞ்சிக்கருகே கடலே இல்லை என்று ;
மாமல்லபுரத்தை மறந்து விட்டுப் பேசுவதால், நமக்குமன மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும்?
“மகேந்திரவர்மன் காஞ்சிக்கு அண்மையில் உள்ள“மகாபலி”புரத்தை கவனியாதிருக்க முடியுமா? அங்கே
தர்மராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும்மகேந்திரன் காலத்தவை” என முனைவர் இராஜமாணிக்கனாரின்
ஆய்வினை அலட்சியப்படுத்திடல் இயலுமோ? அவற்றைஅமைத்தவர் ஒரு பல்லவ மன்னர் என்பதில் அய்யப்பாடுஉண்டோ?
மதம் மாறி சைவத்திற்குச் சென்றமகேந்திர வர்மன் “மத்த விலாசம்” என
நகைச்சுவை நாடகம் எழுதி, நடிக்கச் செய்துசமண புத்த மதங்களை நையாண்டி புரிந்தபோது அந்த
மதப் பிரச்சார நாடகத்தில் மாதகர் காஞ்சியின்மகிமையுடை கோபுரங்களில் தவழும் முகில்களை குறிப்பிட்டு ;
“கருமுகில் தவழுமாடக் கச்சி யேகம் பன்றே” எனும்அருள் வாக்கும் அப்பர் வாக்கும் இணைந்து வருவதாக ;
மயிலை வேங்கடசாமி விளக்குவதை விலக்கி விட இயலாதே?மற்றவை ஒரு புறம் இருப்பினும் ;
மகேந்திரனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான“சித்திர காரப் புலி” எனும் பட்டம் காஞ்சியில் உள்ள
ஏகாம்பரேசுவரர் கோயில் மண்டபத் தூண் ஒன்றில்,இடம் பெற்றிருப்பது எவ்வாறு எனும் வினா எழுகிறதே!
பல்லவர்களின் ஆட்சிச் சின்னமும் அவர்கள் போற்றியபல்வகைக் கலைச் செல்வமும் - பரவியது
பல திசை எனினும் - காஞ்சியைச் சுற்றிலும் அதன்பக்கமாகவும் தானே பல சான்றுகளைப்
பார்க்க முடிகிறது என்பதையும் ; அதைப்பெயர்த்தெடுத்து ஆந்திரத்தில் அமைப்பதென்பது ;
வியர்த்தமான வேலை என்பதையும் வீணாகக்காஞ்சியின் புகழுக்குக் களங்கம் விளைக்கும் செயல் என்பதையும்
உண்மையான தமிழக வரலாறுகள்உலகின் கண்களில் படாமல் திரையிடப்பட்டுள்ள நிலையில்
இது மற்றோர் திரையாக ; ஆகாமல் தடுத்திட இந்தப்பல்லவர் வரலாற்றுப் பகுதியின் விளக்கம் பயன்படுமாக!
★ ★ ★
‘காஞ்சித் தலைநகர் அல்ல’ என்று கடும் வாதமிடும் நண்பர் ;“திருக்கழுக்குன்றத்து குடைவரைக் கோயிலில் உள்ள
வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன் கல்வெட்டுஅந்தப் பல்லவ மன்னன் காலத்து எனக் கருதப் பெறுகிறது” என
எழுதியிருப்பது கவனிக்கத் தக்கது ; எண்ணியதை மாற்றிக்கொள்ள ;ஏற்ற சான்றாக அமையத் தக்கது!

மூலமும் சான்றும்