கவிதை 42 / 58
பட்டயங்கள், பறைசாற்றுகின்றன!
The Charters Proclaim It!
வாதாபி வீழ்ச்சியைத் தொடர்ந்துவலிமை இழந்த புலிகேசி மன்னனும்
வீழ்ந்திடவே ; அடுத்து அவன் வழித் தோன்றல்விக்கிரமாதித்தன் வீறு கொண்டெழுந்தான்!
வீழ்த்தி நசக்க வேண்டும் காஞ்சிப் பல்லவரையென்று,ஆத்திரத்தில் ; சேர, சோழ, பாண்டிய சிற்றரசர்களாம்
எவர் உதவியும் தனக்குத் தேவையில்லை யென்றுஎண்ணிலா வீரர் கொண்ட பெரும்படையுடனே
பல்லவச் சீமை மீது சூறாவளியாய்ச் சூழ்ந்தான் - அது கண்டு,பாண்டியன் அரிகேசரி நெடுமாறன் ; எரிச்சலுற்று
சேரனையும், சோழனையும் ; அவர்கள் சிற்றரசர்கள் எனினும்சேர்த்தணைத்துக் கொண்டு செருமுனையில் கூட்டாக ;
நெருப்புமிழும் படைகளுடன் அணி வகுத்து,நெல்வேலிப் போர்க்களத்தில் ;
சாளுக்கிய விக்கிரமாதித்தனை சந்தித்த காரணத்தால்,சமாளிக்க முடியாமல் பல்லவர் எல்லையைத் திரும்பிப்பாராமலே அவன் ;
பயந்து, பதுங்கி ; வந்தேன் வந்தேனென்று வாதாபிக்கேஓடிவிட்டான் - அதனைவியந்து சேக்கிழார் தமிழக அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்துப்பாடினார்!
நெல்வேலிப் போர் கி.பி. 675ல் என்றும், அது நிகழ்ந்த போது ;பல்லவ மன்னனாக முதலாம் பரமேஸ்வர வர்மன்இருந்தானென்றும் -
விக்கிரமாதித்தனுக்கு மட்டும் வீம்பு இல்லாமலிருந்தால் ;வீழ்ந்திருக்க மாட்டான் என்றும் ;
ஆய்வாளர்கள் பலர், உண்மையினை அகழ்ந்தெடுத்துஅனைவரும் உணர்ந்திட உரைக்கின்றார் -
வீழ்ச்சியோ வெற்றியோ ; எதற்கும் இருக்கும் ஒரு காரணம் -வீண் ஆணவமேவீரனையும் வீழ்த்தி விடுமென்பதற்கு விக்கிரமாதித்தனே ஓர்உதாரணம்!
★ ★ ★
தோற்றோடிய விக்கிரமாதித்தன், தோல்விப் புண்ணின் வலியைஆற்றிக் கொள்ள முடியாமல் ; தொடர்ந்தான் அதே ஆண்டு ;
காஞ்சித் தலைநகர் மீது பெரும்படை கொண்டு போராட்டம் -கலங்கியது திடீர் தாக்குதலால் பல்லவர் சேனை!
சாளுக்கிய மன்னன் காஞ்சியில் பெற்ற அந்த வெற்றியை ;சரித்திரச் சான்றுகளாக ; கட்வல் ; சோர, கேந்தூர்
பட்டயங்கள் தெரிவிப்பதாகப் பன்மொழிப் புலவர் கூறுவார் -பல்லவனின் காஞ்சிக்குள் தன் பட்டத்துக் குதிரை மீதேறி
விக்கிரமாதித்தன் வெற்றிப் பவனி நடத்தியதோடு ;வீராதி வீரன் மாமல்லன் நரசிம்மனின் பேரனான
பரமேசுவர வர்மனைத் தன் பாதம் பணியச் செய்தான் என்கிறதுபகைவன் அமைத்த அந்தப் பட்டயம் -
தனக்குக் கிடைத்த வெற்றியினால் சாளுக்கியன்தலைகால் தெரியாமல் ஆடியதைப் பொறுத்திட முடியாமல் ;
தமிழரசர் அனைவரும் மீண்டும் ஒன்றாகக் கூடினார் - அவர்களின்தானைகள் புறப்பட்டன பெருவளநல்லூர் போர்க்களம் நோக்கி!
எலிகள் ஏழெட்டு ஒன்று சேர்ந்தாலே ; அவற்றைஎதிர்க்க முடியாமல் பூனை திணறும் - இதோ ;
புலிகளே ஒன்று சேர்ந்து விட்டால் - இந்தப்புவியும் அவர் வலிமை உணரும்!
தமிழகத்து அரசர்களின் ஒற்றுமையால்சரணடையும் நிலைக்குத் தாழ்ந்தது சாளுக்கியப் படை!
துணைக்கு வந்த தமிழ் மன்னர்களுக்கெல்லாம்தூய மனத்துடன் நன்றி கூறிப் பல்லவ மன்னன் ;
“பரமேஸ்வர வர்மன், ‘அரிவாரண’ மெனும் தனதுபட்டத்து யானை மீதேறிப் பவனி வந்து,
காஞ்சி வீதிகளிலே பகைப் படை வீரர்களைக் கலக்கினான்.கந்தலாடை யொன்றினால் தன்னை மறைத்துக் கொண்டு
வீதிகள் பல கடந்துவிக்கிரமாதித்தன் ;
கால் பிடரியில் இடிபட ஓடினான் ; ஓடினான் ;காஞ்சி நகர் எல்லையை விட்டே ஓடினான்”
(இக்கருத்தமைந்த வெற்றிப் பட்டயம்“கூரம் பட்டயம்” எனும் பெயரால்,பெருவள நல்லூர்ப் போர் முடிவைஅடுக்குச் சொற்களால்அழகுபட வர்ணிக்கிறது)
அது மட்டுமா?
(சாளுக்கியரின் ‘கேந்தூர்’ பட்டயமும் ;பாண்டியரின் ‘சின்னமனூர்’ செப்பேடும் ;சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரமும் ;இதற்குச் சரித்திரச் சான்றுகளாகபறைசாற்றுகின்றன ;பல்லவர் பெற்ற வெற்றிக்குக்கொடி ஏற்றுகின்றன)