கவிதை 39 / 58

தானாக வந்தவரல்ல; தளபதியால் கொண்டுவரப்பட்டவர்!

Not One Who Came on His Own; One Brought by the Commander!

X
தொல் பழங்காலந் தொட்டுத் தென்னக வரலாறு எழுதிடத்தொடங்கின் பழம் பெரும் ஆதிகாலத் தமிழ் மன்னர்களாம் ;
சேர, சோழ, பாண்டியர்களின் பட்டியல்கள்,நெடியவை குறுகியவை அனைத்தும் நேரில் வந்து நிற்கும்.
மூன்று கொடி கொண்டவர்கள் முத்தமிழ் வளர்த்த மூவேந்தர்கள்முதல், இடை, கடை என மூன்று சங்கம் கண்டவர்கள் -
சேரன் என்றால் பேரரசன் செங்குட்டுவன் என்றும் ;சோழன் எனிலோ திருமாவளவன், கரிகால் பெருவளத்தான்என்றும் ;
பாண்டியன் எனும்போது கடல் கொண்ட கபாடபுரத்தைத்தலைநகராய்க் கொண்டு, தமிழையும் வளர்த்த முடத் திருமாறன்என்றும் ;
முச்சங்கம் வாழ்ந்திட்ட முதிர் நிலை வரையில் முடிசூடிஆண்டோரின்பிடி தளராப் பேரரசுகள் பெருவாழ்வு வாழ்ந்தன!
அக்காலம் அவரவர் ஆண்டிருந்த நிலப்பரப்பைநீட்டித்துக் கொள்ளவும் நெடும்பகை தீர்த்துக் கொள்ளவும்,
கடும் போர்கள் விளைத்தனர், கட்டித் தழுவி, காழ்ப்பும்தவிர்த்தனர்.தமதாட்சித் தனித்தனி பகுதிகளிலே எனினும் நட்புறவு காத்தனர்.
இவர்களில் யார் வரலாற்றையும் ஆதி முதல் அரிச்சுவடியிலிருந்து,இறுதியாக இதுவே என அறுதியிட்டு எவரும் எழுதவில்லை ;எழுதவும் இயலாது!
பின்னர் பிற்காலச் சோழர் ஆட்சி பிறந்து வளர்ந்து பெரு வலிமைபெறுவதற்கு முன்பு இடைப்பட்ட காலமான அய்நூறுஆண்டுகளில்,
களவர் என்றும், களப்பிரர் என்றும், கங்கையாறு வரையில்கட்டியாண்ட சாதவாகனர் என்றும் - எத்தனையோ பிரிவினர் ;குறுகிய
கோட்டங்கள் போல் அரசுகள் அமைத்து அதற்கே கோட்டைகள்படைத்துகோலோச்சி வாழ்ந்திட்டார் எனினும் ; மங்காப் புகழ் பெற்ற
மகேந்திர வர்மனும் அவன் மகன் மாவீரன் நரசிம்ம வர்மனும்பல்லவ மன்னர்களிலேயே வல்லவர்களாம் மிக நல்லவர்களாம் ;
சிம்ம விஷ்ணு மரபில் வந்தசிங்க ஏறுகளாம் ; அவர்கள்
காஞ்சி நகரைத் தலைநகராய்க் கொண்டுமூன்றூறு ஆண்டுக் காலம் முடியாட்சி நடத்தியதுண்டு!
பாண்டிய சோழ மன்னர்களைக் கூட களங்கள் சிலவற்றில்பல்லவ நந்திவர்மன் போன்றோர் வெற்றி பெற்று வீழ்த்தியதாகவரலாறு!
சமண மதமே தனக்குச் சம்மதம் என்றிருந்த மகேந்திரன்சைவ மத வேந்தனாக மாறிய பின்னர் ; சமணத்தைக் கேலிசெய்து,
‘மத்த விலாசம்’ என்றோர் நாடகம் எழுதி ; அதனைமதப் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தியது கண்டு,
மாற்று முகாம் சென்றவுடன் மனம் இப்படியும் மாறுமா என்றுசமணரெல்லாம் கடந்த காலத்தை எண்ணி கவலை மிகக்கொண்டனர்.
பல்லவர் தலைநகராம் காஞ்சி தானா என்பதிலே அய்யம் கூடபல ஆய்வாளர் எழுப்பியதுண்டு ; அதற்குச் சான்றாக
ஆந்திரப் பகுதியில் உள்ள பெத்த காஞ்சி என்பதையேபல்லவத் தலைநகரமான காஞ்சி என்றும் பெரிதாகஅறிவிக்கின்றார்!
‘யுவான் சுவாங்’ எனும் சீன யாத்திரிகர் கூட அந்தக் காஞ்சியைத்தான்உரைத்திருக்கக் கூடுமென யூகித்துச் சொல்லுகின்றார் ;உண்மை அறிவோம்!
சீன யாத்திரிகரின் சிறப்புக் குறிப்பில் நம்சிந்தைக்குத் தேன் துளியாகச் செய்தி ஒன்றும் உளது ;
“திராவிட நாட்டில் பல தூண்களை அசோகன் நாட்டினான் ;அவைகளில் சில தூண்கள் பழுதடைந்து நிற்கின்றன”
எப்போதெல்லாம், எத்தகைய அறிஞர்களால் எல்லாம்‘திராவிட’ எனும் பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி ;
இதயம் விம்முகிறது -இன்பம் பொங்குகிறது!
சாளுக்கிய புலிகேசி என்பான் சமருக்கு வந்தான்மகேந்திர வர்மனைப் போரில் மண்டியிடச் செய்வதற்காக ;
பொங்கும் எரிமலையாய்ப் போரில் குதித்தனர் ;இருபெரும் படையினரும் -
அப்போதொரு பொய்யைக் கல்வெட்டில் செதுக்கினார் ;புலிகேசி மன்னன் ; புள்ளலூர்ப் போரிலே மகேந்திரன் ஓடி ஒளிந்துவிட்டானென்று!
அதை மறுத்தறிவித்த மாமன்னன் நரசிம்மன்மாமல்லனும் ஆனபடியால் ; அந்தப் பெயரால் தானே
மாமல்லபுரமே உருவானது - என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் -வருகிறாயா “நெருக்கு நேர் போருக்கு” என்று ;
அறைகூவல் விடுத்தவுடன் - ஓடிமறையும் அறை எங்குளது என்று ;
புலிகேசி ஓடி ஒளிந்துகொண்டான் ; அதில் புகுந்து கொண்டான்!பல்லவன் நரசிம்மன் விடவில்லை ; அந்தப் புயங்கொள்ளியை!
பரஞ்சோதியாம் தளபதியை பின்தொடரச் செய்து -வாதாபி யெனும் புலிகேசியின் தலைநகர் வரையில் சென்று ;
அங்கே ;புலிகேசியின் முதுகு புண்பட்டை உலகிற்கு உணர்த்தி -அவர்களைவாகை சூடியதற்கு அடையாளமாக ;
வாதாபி நகரில் இருந்த அழகான யானைச் சிலை ஒன்றையும்போரில் கிடைத்த பொருளாகத் தமிழகத்துக்கு எடுத்து வந்தான் -
வாதாபி கணபதி வாழ்த்துடன் இசை நிகழ்ச்சி இன்றைக்கும்தொடங்குவது ;அன்றைக்குத் தளபதி பரஞ்சோதி எடுத்து வந்த அந்த யானைச்சின்னம்
தமிழர்க்கு அறிமுகமான பிறகே தான் ; எனவேதானாக வந்து வரம் தருபவரல்ல பிள்ளையார் - நம்
தளபதியாம் பரஞ்சோதி போரில் வென்று ; வாதாபியிலிருந்துதமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டவர் என்பதே வரலாறு!
★ ★ ★
“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்தொன்னகரம் துகளாகத் துணைநெடுங்கை வரையுகைத்தும்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்இன்னன எண் ணிலகவர்ந்தே இகரைசன்முன்கொணர்ந்தார்”(பெரிய புராணம் - சேக்கிழார்)

மூலமும் சான்றும்