காட்சி 50

காட்சி -- 50

அந்தரங்க மாளிகை

72 பகுதிகளில்

**அந்தரங்க மாளிகை** ஜமீன்தார்:—அது காளைமாடு அல்ல!... காலன்! எமன்!... என்னைப் பழிக்குப் பழிதீர்க்க அந்த விங்கன் கூர்தீட்டி வைத்திருக்கும் பயங்கர ஆயுதம்!.... விங்கன் வசிக்கிறானே குடிசைப்பகுதி அதற்குத் தீ வைத்தால்... விங்கன்... அந்தக் காளைமாடு.. எல்லாமே வெந்து கருகிப் போவார்கள்!... காளிங்க:—நம்ப பொண்ணு உமா அங்கே இருக்கே...? அது ஏம் தீயில கருகிடுமே!.. ஜமீன்தார்:—அந்தக் குடிசைப்பகுதிக்கு தீவைப்பதற்கு முன்... விங்கனிடமிருந்து உமாவைப் பிரித்துவிட வேண்டும். அதற்கும் திட்டம் வைத்திருக்கிறேன்!... காளிங்க:—அடடா! திமிர் திமிர்னு திட்டம் இந்த மூளையிலே உதிக்குதே?... இது என்ன மூளதாணு?... ஜமீன்தார்:—அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உன்னுடையது!... (சுற்றுமுற்றும் பார்த்து காளிங்கன் காதில் ரகசியமாகச் சொல்லுகிறார்... சுவாரஸ்யமாக காளிங்கன் அந்த ரகசியத்தைக் கேட்கிறான்.) காளிங்க:—ஆமா! ஆமாம்!... இன்னைக்கு வெள்ளிக்கிழமையா!... கோகிலா முருகன் கோயிலுக்கு வருவா கட்டாயம். நான் பாத்துக்கிறேன்... ★