காட்சி 49
காட்சி -- 49
விங்கன் குடிசை வெளிப்புறம்
72 பகுதிகளில்
**விங்கன் குடிசை வெளிப்புறம்** பாடல் முடிய... ஜமீன்தார், காளிங்கராயனும் அங்கே வருகின்றனர். (ஜமீன்தார் குழந்தையை மகிழ்ச்சியுடன் தூக்குதல்.) ஜமீன்தார்:—காளிங்கா! அதையெல்லாம் உள்ளே கொண்டு போய் வை!... காளிங்க:—டேய்! அந்த சாமான்களே எல்லாம் குடிசைக்குள்ளே கொண்டு போயி வையுங்கடா.! விங்கன்:—என்ன இதெல்லாம்? காளிங்க:—சும்மா குழந்தைக்கு... தங்க கிலுகிலுப்பை!... மாணிக்கப் பாலாடை!... அசல் யானைத் தந்தத்திலே செஞ்ச தொட்டில்!... விங்கன்:—வேண்டாம்! வேண்டாம்!... இதெல்லாம் இங்கே ஒட்டாது!.... துணியில ஒரு தொட்டில்!... டீன் ஒலியில ஒரு கிலுகிலுப்பை!.. சங்கிலே ஒரு பாலாடை!.. அது போதும் எங்க வீட்டு குழந்தைக்கு!... ஜமீன்தார்:—மாப்பிளே!... என்ன இருந்தாலும்... ஜமீன்தார் ஜம்புலிங்க பூபதியின் பேரப்பிள்ளே!... விங்கன்:—(குழந்தையை வாங்கி... உற்றுப் பார்த்து) அப்படி ஒண்ணும் நெத்தியிலே எழுதலியே!... காளிங்க:—மாப்பிளே...கிண்டல் பண்றாரு!... (அப்போது அங்கு கட்டப்பட்டிருக்கும் காளை மாடு ஜமீன்தாரைப் பார்க்கிறது—மைதானத்தில் முட்டிய உருவம் போல் காளைக்குத் தெரிகிறது—உடனே காளை, சீறிப்பாய்ந்து நிற்கிறது. ஜமீன்தார் காளையைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.) ஜமீன்தார்:—ஏதம்மா இந்தக்காளைமாடு? உமா:—அவர் தான் வளர்க்கிறார் அப்பா... ஏதோ ஒரு லட்சியத் தூக்காக வளர்க்கிறாராம்... நான் நாள்தோறும் இதுக்குப் பூஜை செய்கிறேன்!... (ஜமீன்தார் காளிங்கனைப் பார்க்கிறார் திகிலோடு.) ★