காட்சி 48
காட்சி -- 48
குடிசைப் பகுதி
72 பகுதிகளில்
**குடிசைப் பகுதி** (குடிசைப்பகுதி மக்கள், விங்கன், உமா முதலியோர் ஆடிப் பாடி குழந்தைக்கு விழா எடுக்கிறார்கள்... பாட்டின் இடையே சடையன், வண்டியோட்டி, ஜமீன்தாரும் காளிங்கனும் வருகிறார்கள்... குடிசைப் பகுதியே விழாக் கோலமாக இருக்கிறது....இள மகளிர், வாலிபர் — அனைவரும் பாடியும் ஆடியும் குழந்தையை வாழ்த்துதல்.) (பாட்டு) ஊரைத் திருத்த - ஒரு புள்ளே பொறந்தான்!- அப்பன் பேரை நிறுத்த - இரு கண்ணைத் தொறந்தான்! தாரை தம்பட்டம் கொட்டுங்கடி!- கைத் தாளம் தப்பாமே தட்டுங்கடி! — ஊரைத் ஒருவன்:—அணிப்புள்ளே; தென்னம் புள்ளே; கிளிப்புள்ளே; கிரிப்புள்ளே; அத்தனைக்கும் ஒசந்து என்ன புள்ளே? ஆடச் சொல்லு, புள்ளே! ஒருத்தி:—ஒரு ஆத்தா மடி சுமந்த சின்னப்புள்ளே!- தொட்டுப் பாத்தா கைமணக்கும் வண்ணப்புள்ளே! — ஊரைத் வெள்ளரிக்கா விதை போலச் சிரிக்குதடி!- புள்ளே வெள்ளெளுக்கும் பூவாட்டம் இருக்குதடி! கள்ளிருக்கும் தாமரைப்பூ; காடிருக்கும் மல்லிகைப்பூ- முள்ளிருக்கும் சேரியிலே பொறந்ததடி!- இங்கே உள்ளிருக்கும் சேரியெல்லாம் அறிஞ்சுதடி! — ஊரைத் பெத்தெடுத்த அம்மையொரு பணக்காரி!—நல்ல பேறுவெச்ச அப்பனொரு தொழிலாளி! மேலிடத்தைக் கீழிடத்தை ஓரிடத்தில் சேர்த்து வைக்கக் காரணமா வந்ததடி இந்தப்புள்ளே!— இந்தக் காரியத்தை வேறெவனும் செஞ்சதில்லே! — ஊரைத் விங்கன்:— ஆனந்தத் தேனே! அருமை மகனே! நான் சொல்லப் போறதைக் கேட்டுக்கடா!— நீ நல்லதைக் காதுலே போட்டுக்கடா! ஆலையில் உழைக்கும் தொழிலாளி! — உன்னை அரிசியைக் கொடுக்கும் விவசாயி! மூட்டையைத் தூக்கும் மாட்டாளி! — இந்த மூவரும் நமக்குக் கூட்டாளி! — ஆனந்தத் தேனே ★