காட்சி 47

காட்சி -- 47

சுற்றடைப்புள்ள ஒரு மைதானம்

72 பகுதிகளில்

**சுற்றடைப்புள்ள ஒரு மைதானம்** (விங்கனும், கண்ணாயிரமும் காளையைப் பழக்குகிறார்கள்...காளை, சீறிப்பாய்ந்து அவர்களால் முடுக்கி விடப்பட்டு முன்னோக்கி ஓடுகிறது...ஒரு உருவத்தைப் போய் முட்டுகிறது. அது ஜமீன்தார் அல்ல; ஜமீன்தார் போன்ற ஒரு பொம்மை.) விங்கன்:—பலே! அப்படித்தான்!....கண்ணாயிரம்!..பழகி விட்டது காளை!...இனி அடுத்தது பழக வாங்கும் பாடம்!.... (சிரிக்கிறான்) ஹா! ஹா! ஹா! ஹா!.... (அப்போது ஒரு சிறுமி ஓடிவந்து....) சிறுமி:—அண்ணே! அண்ணே!...உமா அக்காளுக்கு குழந்தை பொறந்திருக்கு!...குழந்தை... விங்கன்:—ஆ!.....(மகிழ்ச்சி) (விங்கன் ஓடி வருதல்) ★