காட்சி 45-46

காட்சி -- 45-46

வெளிப்புறம் / குடிசைப் பகுதியை ஒட்டிய தெரு

72 பகுதிகளில்

**வெளிப்புறம்** **குடிசைப் பகுதியை ஒட்டிய தெரு** கண்ணாயிரம்:—காளா!...காளா! மயிலக்காள கொண்டு வந்து விட்டேன்... (கண்ணாயிரம் காளையைக் கொண்டு வருகிறான்.) விங்கன்:—சபாஷ்! கண்ணாயிரம்!..சரியான காளை! நான் நினைத்தபடி கொண்டு வந்துவிட்டாய்... (குடிசைக்குள் திரும்பி)....உமா! உமா!.....கொஞ்சம் வெளியே வந்து பாரேன்..உமா!... (உமா வருகிறாள் குடிசைக்குள்ளிருந்து — அதற்குள் குடிசை வாசிகள் சிலரும் சூழ்கிறார்கள்.) விங்கன்:—உமா!...இந்தக் காளைக்கு தினந்தோறும் நீ பூஜை செய்யவேண்டும்!... உமா:—காளைக்கு பூஜையா?...பகவானுக்குத்தான் கோபூஜை செய்வாங்க!.... விங்கன்:—இது சாதாரண காளையல்ல—ஒரு லட்சியத்திற்காக நம் வீட்டில் வளரப்போகிற காளை!...அதற்கு நீ பூஜை செய்தால்தான் பொருத்தமா இருக்கும்! உமா:—நீங்க சொன்னா சரி... விங்கன்:—எனக்காக பூஜை செய்யக்கூடாது! நீ உன் இதய சக்தியோடு பூஜை செய்யணும்!.... உமா:—(சரியெனப் புன்னகையுடன் தலையசைத்தல்.) ★