காட்சி 44
காட்சி -- 44
குடிசை வீடு
72 பகுதிகளில்
**குடிசை வீடு** (அடுப்பு புகைகிறது...உமா, கண்ணைக் கசக்கிக்கொண்டே சமைக்கிறாள்...புகை தாங்காமல் கண்ணில் நீர்வழிய உட்கார்ந்தபடியிருந்து வருகிறாள்...ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவாறு விங்கன் அவளைப் பார்த்து..) விங்கன்:—என்ன உமா!...சமைக்கிறது கஷ்டமா இருக்கா?...அதுக்காகவா கண்ணீர் விடுறே?... உமா:—நான் ஒண்ணும் கண்ணீர் விடலே; அடுப்புப் புகை தாங்கலே!... விங்கன்:—இங்கே அடுப்பு புகையிறதினாலே உன் கண்ணிலே கண்ணீர் கொட்டுது!...எத்தனை ஏழைங்க வீட்டுல அடுப்பு புகைய வழியில்லையேன்னு தாய்மார்கள் கண்ணீர் சிந்துறாங்க தெரியுமா?...சரி!...சரி!....நீ சாப்பிடு...கொஞ்சம் கண்ணிப்பாறு!...நான் சமையல் வேலையைக் கவனிக்கிறேன்!... (எழுகிறான்...உமா, அவனைக் கரம் பிடித்துத் தடுத்து) உமா:—ஊஹூம்...வேண்டாம்...வேண்டாம்...எல்லாப் புகப் பழக சரியாப் போயிடும்...நீங்க இருங்க!..நானே பாத்துக்கிறேன்!... ★