காட்சி 43

காட்சி -- 43

ஜமீன் மாளிகை

72 பகுதிகளில்

**ஜமீன் மாளிகை** (விங்கன் உமா வீட்டை விட்டு வெளியேறப் புறப்பட்டிருக்கிறார்கள். எதிரே ஜமீன்தார் வர, உமா விங்கனைப் பார்க்கிறாள்.) உமா:—அத்தான்!...அப்பாவிடம் ஒரு வார்த்தை,... விங்கன்:—அப்பாவிடம் விடை பெற்றுக்கொள்! அனுமதி கேட்காதே!.... ஜமீன்தார்:—(வந்து கொண்டே) என்ன மாப்பிள்ளே?..இதெல்லாம் என்ன விபரீதம்?... விங்கன்:—விபரீதங்களைத்தாங்கிக்கொள்ள முடியாமல்தான் வெளியேறுகிறேன்!...உங்கள் மகளுக்கு விடைகொடுத்தனுப்புங்கள்!... (சடையன் வருதல்) ஜமீன்தார்:—சடையா!...பார்த்தியா?..எப்படி செல்வமா வளர்ந்த பெண்ணை..விரல் அசைத்தால் வேலை செய்ய நூறு வேலைக்காரர்களிடமிருந்து இட்ட வேலையைத் தட்டாம செய்கிற அந்தஸ்த்து, ஆடம்பரம் நிறைந்த இந்த மாளிகையிலே பிறந்து வளர்ந்த பெண்ணை..மண் குடிசைக்கு அழைச்சிக்கிட்டு போறேங்கிறாரே மாப்பிள்ளை...இது நியாயமா?... சடையன்:—எம்ப்பா, உனக்கு என்ன..பைத்தியம் பிடிச்சுட்டுதா? ஏண்டா இந்த வேலையெல்லாம் செய்ற? ஏண்டா எஜமான் மனசிலே இவ்வளவு பெரிய வேதனையை உண்டாக்குறே?..அதுவும் வயிற்றுப்பிள்ளையா இருக்கிற பெண்ணை அழைச்சிக்கிட்டு போறேங்கிறியே!... விங்கன்:—உமா! புறப்படு!... ஜமீன்தார்:—உமா!.... உமா:—அப்பா! மன்னிச்சிடுங்க! அவர் இருக்கிற இடம்தான் எனக்கு சொர்க்கம்!..நான் வர்றேன்!..(விங்கனிடம்) போகலாமா?... விங்கன்:—(ஜமீன்தாரிடம்) வர்றேன்!...நாங்க ஒண்ணும் தொலை தூரம் போய்விடவில்லை. அதனாலே தொடர்பு விட்டுப் போகாது... (சடையனிடம்) அப்பா! நான் தவறு செய்ற மாதிரி தெரியும்!...ஆனா..உண்மை போகப் போகப் புரியும்!..மன்னிச்சிடுங்க! வரட்டுமா...உமா!..வா!... (இருவரும் போகிறார்கள்...ஜமீன்தார் பார்த்துக்கொண்டே நிற்கிறார்..சடையன் முகத்தில் வேதனை.) சடையன்:—(ஜமீன்தார் காலடியில் விழுந்து) எஜமான்..என்னை மன்னிச்சிடுங்க!... ஜமீன்தார்:—(மனதில் குரோத உணர்வுடன்) உம்!..காலில் விழக் கூடாது!..சம்பந்தி...சம்பந்தியே இருக்கணும்!....