காட்சி 42

காட்சி — 42

ஜமீன் தேவாலய வாயிற்புறம்

72 பகுதிகளில்

**ஜமீன் தேவாலய வாயிற்புறம்** (விங்கன், கண்ணாயிரம், புலவர், மற்றும் ஊர்ப்பெரியவர்கள் ஓடிவருதல்...சடையனும் அவர்களுக்குச் சற்றுப் பின்னால் தொடர்ந்து வருகிறான்...கதவருகே விங்கன் வந்து) விங்கன்:—ஏய், வழிவிடு! கதவைத் திற!... (காவலன், தன்னகையில் உள்ள ஈட்டிபோன்ற ஒருகருவியைக் குறுக்கே நீட்டியபடி) காவலன்:—ஜமீன்தாரய்யா உத்திரவில்லாமல்...யாரையும் உள்ளே விட முடியாது... விங்கன்:—முட்டாளே! ஜமீன்தாரின் காமவெறிக்கு ஆளாகி உள்ளே அழுதுகொண்டிருக்கிற பெண்ணுக்கு நீ தந்தையாக இருந்தால்..அப்போது உள்ளே நுழைய உத்திரவை எதிர்பார்க்கமாட்டாய்! உடைத்தெறிவாய் இந்தக் கதவை! ம்..விடு..என்னை! (காவலனைத் தள்ளுகிறான்) காவலன்:—முடியாது! (தடுத்தல்). (தடுக்கும் காவலனை விங்கன் தூக்கி எறிதல். விங்கனும், மற்றவர்களும், கண்ணாயிரமும், புலவரும் கதவைத் தடதடவென தட்டுதல். ஓங்கி மோதுதல். கதவு திறக்கப்படுகிறது. அனைவரும் உள்ளே நுழைகிறார்கள்.) ★