காட்சி 39
காட்சி - 39
சடையன் வீடு
72 பகுதிகளில்
**சடையன் வீடு** சடையன்:—(மாடு முட்டும் படத்தைத் தூக்கி எறிந்தவாறு) இதென்னடா விபரீத விளையாட்டு ஜமீன்தார் பெருமையின் பொக்கிஷம்!...அதனுள் பொறுத்துக்கொண்டார்...நானுக இருந்திருந்தால் அந்த இடத்தில் நடப்பதே வேறு!..வேற யாராக இருந்தாலும்...உன்னை வீட்டைவிட்டு வெளியேற்றி இருப்பார்கள்!... விங்கன்:—நான் அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையப்பா!...நானுகத் தான் வெளியேறுவேனே தவிர, என்னை உங்கள் ஜமீன்தாரால்; எனது அருமை மாமனாரால் வெளியேற்ற முடியாது!... சடையன்:—வீட்டுக்கு மாப்பிள்ளை!...மருமகன்!...ஜமீன்தார் ஜம்புலிங்க பூபதியின் மகள் உமாவின் கணவன்!...இவ்வளவு கெளரவமும் உனக்கு யாரால் கிடைச்சது? யார் கொடுத்தது?...கிளிஞ்சலைக் கொண்டுபோய் யாராவது கிரீடத்தில் பதிச்சுக்குவாங்களா? பதிச்சுக்கிட்ட குற்றத்திற்காக நீ அவரையே பழிவாங்குறேன் என்கிறயா? விங்கன்:—பழி வாங்குவதற்கு நான் பஞ்சாங்கத்தைப் புரட்டி நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருக்கவில்லே!..பழி வாங்கும் படலத்தை நான் ஏற்கனவே எழுத ஆரம்பிச்சுட்டேன்!...அதுமுழுமையாக முடிவடையும் காலம் வெகு தூரத்தில் இல்லை!...அதற்குள் உங்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டியது என் கடமை! சடையன்:—என்ன உண்மை; பொல்லாத உண்மை! சொர்ணத்தை ஜமீன்தார்தான் கொன்றான்னு, கடவுளே வந்து சாட்சி சொன்னாலும்...இந்தச் சடையன் நம்ப மாட்டான்டா...நம்பவே மாட்டான்!... விங்கன்:—நம்ப வைக்கிறேன்!.நச்சரவத்தை, பச்சைக்கொடியின்னு எண்ணியிருக்கிற உங்கள் மட்டுமல்ல...இந்த ஊராரையே உண்மை எது - பொய் எது; நிழல் எது வெளிச்சம் எது? என்ற உணர்வுக்கு...வெற்றி பெற்றுக் காட்டுகிறேன்!..அந்த மனித மிருகத்தால் கொலை செய்யப்பட்ட என் தாயின்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்!...அந்த வெறிபிடிச்ச விலங்கின் வேஷத்தைக் கலைச்சுக் காட்டுகிறேன்!... சடையன்:—(ஆத்திரமாக சபதமிட்டு) உளறாதே!..ஜமீன்தார் நம்ப ஊருக்கே தெய்வம் மாதிரி!... ★