காட்சி 37
காட்சி — 37
பதுக்கல் கிடங்கு
72 பகுதிகளில்
**பதுக்கல் கிடங்கு** (விங்கன், தன்னுடன் வரும் கூட்டத்துடன் அங்கே வருகிறான்.) விங்கன்:—அதோ தெரிகிறதே! அதுதான்...அந்தப் பகல்வேட தாரியின் பதுக்கல் கிடங்கு!...உள்ளே நூறாயிரங்கள் உரிமையோடு!...உங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை எடுத்துத் தருகிறேன், வாருங்கள்!... (சாவியை கழற்றியபடி முன்னே நடக்கிறான்.) (அங்கே ஒரு கூட்டத்தின் மத்தியில், ஜமீன்தாரும் காளிங்கனும் இருக்கிறார்கள். அரிசி, கோதுமை முதலிய தானியங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் — அது கண்டு விங்கன் திகைத்து நிற்கிறான்...) ஜமீன்தார்:—காளிங்கா! யார் யாருக்கு எவ்வளவு வேணுமோ அள்ளிக்கொடு!...இதையெல்லாம் வச்சிகிட்டு நான் என்ன செய்யப்போறேன்? இன்னைக்கு என் பிறந்த நாள்! காளிங்:—(இடுக்கிட்டு ஜமீன்தாரைப் பார்த்து) எத்தனையாவது பிறந்த நாளுன்னு வெளியே சொல்லிடாதீங்க!..வருஷம் பூரா உங்களுக்குப் பிறந்த நாள் தான் — அள்ளிக் கொடுப்பா எல்லாருக்கும் — நல்லாத் தின்னுட்டு அவரை வாழ்த்திட்டுப் போங்க! வாங்க எல்லோரும்...எல்லாம் வாங்க...வாங்க...கொடுக்கிறதையெல்லாம் வாங்கிட்டு நம்ப எஜமான் பாரி வள்ளலே வாழ்த்திட்டு போங்க! ஏன் நிக்கிறீங்க வாங்க... (விங்கன் பின்னே நண்பர்கள் காளிங்கனிடம் ஓடுதல்...விங்கன், தனியாக நிற்கிறான். அருகே ஜமீன்தார் வருகிறார்...) ஜமீன்தார்:—என்னமாப்பிள்ளை!...வேங்கைக்கு முன்னால் வெள்ளாடு விளையாடியதாக கதையாவது படித்திருக்கிறாயா? விங்கன்:—வேளை வரத்தான் போகிறது!..வேஷம் கலையத்தான் போகிறது! உம்மை எதிர்த்து நான் வெற்றிபெறத் தான் போகிறேன்!... ஜமீன்தார்:—ஹா! ஹா! ஹா! பாவம், வானத்தை வில்லாவளைக்கப் பார்க்கிறாய்!...முடியாது மாப்பிள்ளை...முடியாது!... விங்கன்:—பார்ப்போம்!... ஜமீன்தார்:—ம்!...பார்ப்போம்!...இது என் பிறந்த நாள் சபதம்!..இந்த ஜமீன்தார் ஐம்புலிங்க பூபதி யாரிடமும் தோற்க மாட்டான் — தோற்கவே மாட்டான்! ★