காட்சி 27

காட்சி-27

உமா அறை

72 பகுதிகளில்

**உமா அறை** (கையில் நாணயத்தை தூக்கி எறிந்து பிடித்தவாறு குதூகலமாக வரும் கோகிலா) கோகிலா:—உமா! உமா!...உண்மையைக் கண்டுபிடிச்சுட்டேன்!...பூவா தலையா போட்டதில தலைவிழுந்தது—தப்பு!...பூ விழுந்ததுதான் கரெக்டு!...அவரை நீ எனக்குக் கொடுத்துட்டே!.... (பேச்சை முடிப்பதற்குள், உமா வாஷ்பேசினில் வாந்தி எடுப்பதை கோகிலா பார்த்து அதிர்ச்சி...) கோகிலா:—உமா!...உடம்புக்கு என்ன?...ஏன் வாந்தி எடுக்கிறே?..என்ன சாப்பிட்டே?... உமா:—கோகிலா!...அவசரப்பட்டு..என்னையேதான் மறந்து; அமுதம் சாப்பிட்டேன்!..அது எனக்கு விஷமாகிவிட்டதடி!.... கோகிலா:—என்ன சொல்றே?...எனக்கு ஒண்ணும் புரியலியே!.. உமா:—உன்கிட்ட உண்மையைச் சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப்போறேன்!... கோகிலா:—சொல்லு உமா! உமா:—எஸ்டேட்டைப் பார்க்கப் போனப்ப..எப்படியோ...அந்த விங்கனும்...அங்க வந்துட்டார்...ஆண்மை, வீரத்துக்கு மட்டுமே அடையாளம் என்றுதான் அதுவரையில் கருதியிருந்தேன்!...ஆனால் அவரது ஆண்மை புரிந்த சாகசத்தில் என்பெண்மையின் உறுதி உருத்தெரியாமல் உடைந்துவிட்டது கோகிலா!... உருத்தெரியாமல் உடைந்துவிட்டது!.. (கோகிலா திகைப்பு — அவள் கையிலிருந்த நாணயம் விழுந்து உருண்டு, தலைப்பகுதி மேலே தெரிகிறது.)