காட்சி 26
காட்சி-26
கோகிலா அறை
72 பகுதிகளில்
**கோகிலா அறை** கோகிலா:—அப்பா! சந்தேகம் தீர்ந்து போச்சா! அப்படின்னு விங்கன் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரா?.. பெரிய வீட்டுப்பிள்ளை இல்லையா? அம்மா! உண்மையா சொல்றீங்களாம்மா! மரகதம்:—அப்புறம் என்ன..கையடிச்சு சத்தியம் பண்ணிக் கொடுக்கணுமா?...கற்பூரத்தைக் கொளுத்தி காளியம்மன் கோயில்ல அணைக்கணுமா? பெரிய இடத்துப் பையனு இருந்தா...சடையன் வீட்டுல...அவ்வளவு சகஜமாப் பழக முடியுமா?...பழைய சோறு சாப்பிட மனசு வருமா?... கோகிலா:—அப்படின்னு...உமா, அவரை எனக்கே கொடுத்துடுவா..அவளுடைய லட்சியம்...அவள் அந்தஸ்துக்குக் குறையாத மாப்பிள்ளைதானே!.. (மேசை டிராயரைத் திறந்து காசை எடுத்து...பூவா தலையா போட்டுப் பார்த்துக்கொள்கிறாள். 'பூ' விழுகிறது...) கோகிலா:—அம்மா, நீ சொன்னது உண்மையே தாம்மா!... இப்பவேபோய்..உமாகிட்ட இந்தச் சேதியைச் சொல்லி.. மரகதம்:—உமா கிட்ட சொல்லி...? கோகிலா:—அவ உதவியோடவே விங்கன்-கோகிலா திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்போகிறேன்!... மரகதம்:—கோகிலா! கோகிலா:—அய்யோ!...என்னைத் தடுக்காதீங்கம்மா!...எனக்கு சந்தோஷம் தாங்கலேம்மா...நான் தலைகீழா நடக்கிற மாதிரி இருக்கு...வர்றேன்ம்மா!... (கோகிலா ஓடுகிறாள். நாணயத்தைக் கையில் தூக்கி எறிந்து பிடித்தவாறு) ★