காட்சி 25
காட்சி-25
சடையன் வீடு
72 பகுதிகளில்
**சடையன் வீடு** (விங்கனின் தாயார் சொர்ணத்தின் படத்திற்கு சடையன்; மாலை அணிவிக்கிறான்.) சடையன்:—சொர்ணம்...நீ என்னை விட்டுப் பிரிஞ்சு பதினஞ்சு வருஷமாவது!...நீயும் நம்ம பெத்த பிள்ளையும் இருந்திருந்தா நம்ம பேரனையோ அல்லது பேத்தியையோ நம்ம ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டு இருந்திருக்கலாம்...சொக்கலிங்கம் என்ன ஆனானோ...உயிரோட இருந்திருந்தான்னு அப்பனை ஒருவாட்டியாவது பாக்கணும்னு வந்திருக்க மாட்டானு?.... (விங்கன் வருகிறான்.) (திரும்புகிற சடையன் விங்கனைப் பார்த்து) சடையன்:—(வியப்புடன்) செக்ரட்டரி தம்பி...வாங்க! வாங்க!! இந்த ஏழைக் குடிசையிலே உங்க கால் படுறதுன்னு நான் என்னபுண்ணியம் பண்ணியிருக்கேனே?..... (பரபரப்புடன்) உக்காருங்க!.. விங்கன்:—பரவாயில்ல... சடையன்:—இன்னைக்கு என் சம்சாரம் நினைவு நாளு... விங்கன்:—அப்படியா?... அந்தப் புனிதவதிக்கு நானும் என்னுடைய மரியாதையைத் தெரிவிக்கிறேன்... (படத்தைத் தொட்டுக் கும்பிடுகிறான்...) சடையன்:—(விங்கனிடம்) சொர்ணம், செத்துப்போன அன்னைக்கு... இப்படித்தான் நான் உக்காந்து கிட்டு... அவ இங்க உக்காந்துகிட்டு... (உருக்கமுடன்) என் வயசு சொக்கலிங்கத்துக்கு அவப் பழைய சோறு ஊட்ட நானும்...பழையதையும், சுண்டைக் குழம்பையும் கலந்து சாப்பிட்டேன்!...அந்தக் காட்சி கண்ணிலேயே நிக்குது... விங்கன்:—இப்பவும் அது மாதிரி....அம்மா நினைவா சாப்பிட வருமே!...எங்க...நீங்க உக்காருங்க, உங்க பக்கத்திலே நான் உக்காந்து சாப்பிடுறேன்!.. சடையன்:—சிவ, சிவா! நீங்க எங்க வீட்டிலே சாப்பிடறதா?.. அதுவும் பழைய சாதம்!... விங்கன்:—ஐயா! அன்போடு கொடுத்தா..பழையதுகூட..பச்சடி, கூட்டு, பாயசம், வடைபோட...விருந்து சாப்பிட்டது மாதிரிதான் இருக்கும்..ம்..உக்காருங்க!.. (என்றவாறு சடையனை உட்கார வைத்துத் தானும் அருகில் உட்கார்ந்து...பழையது சாப்பிடத் தொடங்குகிறான்...மரகதம் வருகிறாள்.) மரகதம்:—சடையா! சடையன்:—வாங்க, மச்சரம்மா வாங்க! (எழுகிறான்.) மரகதம்:—நீ, சும்மா உக்கார்ந்து சாப்பிடு சடையா... (விங்கனைப் பார்த்து விட்டு) அப்படே...செக்ரட்டரி சார் இங்கேயா? ஏது இவ்வளவு தூரம்?... விங்கன்:—வீட்டுக்காரம்மாவுக்கு நினைவுநாள் இல்லையா?... சடையன்:—செக்ரட்டரி தம்பி!...நம்ம மச்சரம்மாகூட வருஷம் தவறாம வந்து, சொர்ணத்துக்கு ஒரு மல்லிகைச்சரம் போடுறது வழக்கம்... (இதற்கிடையே மரகதம், சொர்ணம் படத்துக்கு மல்லிகைச் சரம் அணிவித்தல். அப்போது “சடையா! சடையா!” என்று ஒரு ஆள் கூப்பிடுகிறான் தெருவிலிருந்து...) சடையன்:—(உள்ளிருந்து) என்ன முனியா? என்ன?... முனியன்:—(வெளியில் நின்றவாறு) ஜமீன்தார் எஜமான் அவசரமா கூப்பிடுறாரு! தேவாலயத்துக்குப் போகணுமாம்...வண்டி கட்டச் சொல்றாரு!.. சடையன்:—செக்ரட்டரி தம்பி...மன்னிச்சுக்குங்க...எஜமான் கூப்பிடுறாரு; நான் வர்றேன்..வர்றேன்...(போகிறான்.) விங்கன்:—(அதற்குள் பழையது சாப்பிட்டு கைகழுவி எழுந்து மரகதத்திடம்) அம்மா..அடிக்கடி ஜமீன்தார் தேவாலயத்துக்குப் போறாரே; அங்க அப்படி என்ன விசேஷம்? மரகதம்:—என்ன விசேஷம்? பக்திமான்!...அம்மாள் வழிபாட்டில் அவருக்கு அபாரமான ஈடுபாடு!...நித்தியப்படி பூஜை செய்யாவிட்டால் அவருக்கு நிம்மதியே இருக்காது! விங்கன்:—அவரு கோயிலுக்குப் போறதிலே ஏதோ, புதிர் இருக்குன்னு நினைக்கிறேன்!... மரகதம்:—நான்கூடத்தான் நினைக்கிறேன். நம்ம செக்ரட்டரி தம்பி விஷயத்திலேகூட ஏதோ புதிர் இருக்குன்னு!.. விங்கன்:—எனக்கிட்டயா? புதிரா? என்ன புதிர்? மரகதம்:—உங்க குலமென்ன? கோத்திரமென்ன?...ஜமீன்தார் பரம்பரையா?...மிட்டாதாரா? மிராசா? சீமானு? பூமானு?...இல்ல...சாதாரணமான குடும்பமா?... விங்கன்:—சாதாரணமானவனுகவோ சாமான்யனுகவோ இருந்தா ஜமீன்தார் வீட்டில் இவ்வளவு பெரியவேலை கிடைக்குமா? மரகதம்:—பணம் படைச்ச குடும்பமா இருந்தா...இந்த ஏழை வண்டிக்காரன் வீட்டிலிருந்து பழையது சாப்பிடுவாங்களா? விங்கன்:—உங்களுக்கு ஏன் அப்படி என்மேலே ஒரு சந்தேகம் வந்துச்சு?... மரகதம்:—சந்தேகம், வரலாமா, வரக்கூடாதான்னு முன்அனுமதி கேட்டுகிட்டு வரது இல்லியே! அதுமாதிரி..எனக்குச் சந்தேகம் வந்துச்சு! வந்த மாதிரியே போயிடுச்சி!.. ★