காட்சி 24-டி

காட்சி-24 டி

72 பகுதிகளில்

(உமா, விம்மி விம்மியழுது கொண்டிருக்கிறாள்....அழுகுரல் கேட்டு, விங்கன் அவளருகே செல்கிறான்.) விங்கன்:—உமா!... உமா!.... (அவள் முகவாய்க் கட்டையைக் கையால் தூக்கி) அழாதே, அழக்கூடாது!.. உமா:—நீங்கள் வேண்டுமானால் சந்தோஷமா இருக்கலாம்.... ஏன்னா உங்க சதி நிறைவேறி விட்டதல்லவா?.... விங்கன்:—(லேசான புன்னகை) சதி! உமா!...சதிங்கிற வார்த்தை தனியா இருக்கிறப்பதான் அதுக்கு பயங்கரமான அர்த்தம். சதியோட பதியும் சேர்ந்து, சதிபதி ஆயிட்டா... அதுக்கு புனிதமான அர்த்தம்! உமா:—எப்படியோ...மன்னிக்க முடியாத குற்றத்துக்கு என்னை ஆளாக்கிட்டீங்க!...(அழுகிறாள்) விங்கன்:—கவலைப்படாதே!..நமக்குள் நடந்துவிட்ட இந்த விவகாரம்; யாருக்கும் தெரியாம ரகசியத்தை நான் காப்பாத்துவேன்!.. உமா:—திட்டம் போட்டு என்னைக் கெடுத்துட்டு, இப்ப ரகசியத்தைக் காப்பாத்துறேங்கிறீங்க! விங்கன்:—திட்டமில்ல உமா! விங்கன் குரல்:—திட்டமில்ல!.. இது நான் மேற்கொண்ட சபதம்!... எடுத்துக் கொண்ட சூளுரை! ★