காட்சி 24-சி
காட்சி-24 சி
72 பகுதிகளில்
(விங்கன் பாட்டு) கார்த்திகை மாதம் கார்காலம்! கங்குலில் எங்கும் பனிமூட்டம் — உடல் வேர்த்திட நின்றுள் பருவச்சீலை! அதை வேடிக்கைப் பார்த்தது பள்ளியறை! படுத்தாள்; புரண்டாள்; உறக்கமில்லை! சுகம் எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தனில்லை! மடல் கொண்ட வாழை உடல் கொண்ட பாவை! இடைகொள்ளவில்லை அவள் கொண்ட சேலை! அவள் வந்த பின்பு அதற்கென்ன வேலை? வந்தான்; சேர்ந்தேன் தந்தான்! — செவ் வாய் மீது ஓயாமல் முத்தாடினான்! வண்ணம் கொஞ்சும் அன்னம்! தன் பூமணி போதைகள் கொண்டாடினாள்! படுத்தாள்! புரண்டாள்! உறக்கமில்லை! சுகம் எடுக்கவும் கொடுக்கவும் தடுக்கவில்லை! நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர அவள் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற கோடி கொண்ட பூவில் மதுவெல்லாம் ஊற — முன்னும் பின்னும் மின்னும் — பொன் பாலேறு ஆனந்த நீராடினாள்! மெத்தை — தத்தும் தத்தை; தன் தாபங்கள் தாளாமல் போராடினாள்! (படுத்தாள்) ஸ்வரம் கொண்ட வீணை அவன் கொண்டு மீட்ட; உளம் எங்கும் நல்ல உயிர் நாதம் கேட்க; உறவென்ற ராகம்; அரங்கேற்றம் ஆக— இன்பம் என்னும் சந்தம் — தன் பாட்டாகப் பூங்கோதை தாலாட்டினாள்! இன்னும் இன்னும் என்று—தன் காதாரத் தான் கேட்கப் பாராட்டினாள்! (படுத்தாள்) (இருவரும் காதலில் மயங்கு கின்றனர் — விங்கன் பிடியில் உமா விழுகிறாள்!) [பொழுது விடிகிறது] ★