காட்சி 24
காட்சி-24
டேவிட் மலைப்பங்களா உட்புறம்
72 பகுதிகளில்
**டேவிட் மலைப்பங்களா உட்புறம்** (விங்கனுக்கு முன்பு, உள்ளே வந்த உமா, அந்த அறையில் உள்ள கனல் அடுப்புக்கருகே சென்று குளிர் காய்ந்து கொண்டிருக்கும்போது விங்கன் உள்ளே நுழைகிறான்.) விங்கன்:— என்ன உமா, ரொம்பக் குளிருதா?...சூடா ஒரு கப் 'டீ' போட்டுத் தரட்டுமா? உமா:— எனக்கு ஒண்ணும் வேண்டாம்!...பசியுமில்லே ஒண்ணு மில்லே!...படுத்துத் தூங்கினு போதும்! (விங்கன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். ஒருகட்டில், ஒருரெண்டு சேர், நாற்காலிகள் மட்டுமே இருக்கின்றன.) விங்கன்:— அடடே..கட்டில்கூட ஒண்ணுதான் இருக்கு!..சரி, பரவாயில்லே.. நீ கட்டில்லே படுத்துக்க!...நான் இந்த சோபாவிலே கட்டையைச் சாய்க்கிறேன்!... உமா:— நோ! நோ! வேண்டாம்...வேண்டாம்! விங்கன்:— ஏன்? அப்படின்னு நீ சோபாவிலே படுத்துக்க நான் கட்டில்ல படுத்துக்கிறேன். உமா:— இல்லே!...நான் சொல்ல வந்தது அது இல்லே!... விங்கன்:— (புரியாதவன்போல, வெகுளித்தனமாக பாவனை செய்து) அப்ப நம்ம ரெண்டுபேருமே ஒரே கட்டில்லே படுத்துக்குவோம்! உமா:— ஷட் அப்!.. விங்கன்:— ஆமாமா அது அவ்வளவு நல்லா இருக்காதில்லே...சரி உமா, நீயே முடிவுபண்ணு—கட்டில்ல யாரு படுக்கிறது? சோபாவிலே யாரு படுக்கிறது! உமா:— அந்தப் பிரச்சினைக்கே இடமில்ல. நான் இங்கே உள்ள கட்டில்லிலே படுக்கிறேன்! நீங்க வெளியில் வராண்டாவிலே படுங்க!.. விங்கன்:— அய்யோ..வெளியிலயா?.. அங்க படுத்தா எலும்பெல்லாம் வெட வெடன்னு நடுங்குமே!.. உமா:— எலும்பெல்லாம் விட விடன்னு நடுங்கும்...ஆ!... விங்கன்:— ஆமா!...பல்வெல்லாம் தட தடன்னு தந்தியடிக்கும்!.. உமா:— பல்வெல்லாம் தட தடன்னு தந்தியடிக்குமா? இந்தாங்க! (என்று விங்கனிடம் கம்பளியையும் தலையணையையும் உமா கொடுக்கிறாள். விங்கன் வெளியிலே வந்து கட்டிலை விரிக்கிறான். ஜம்பு வருகிறான்.) ஜம்பு:— என்ன சார்! இந்த குளிர்லே இங்கே படுத்திருக்கீங்க? உள்ளேதானே ஹீட்டர் இருக்கு! விங்கன்:— உம்!..உள்ளே இருக்கிற ஹீட்டர் சூடு ரொம்ப அதிகமா இருக்கு! அதான் வெளியே படுத்திருக்கேன்! போய்யா! நீ ஒருத்தன்!..போய்! வாய்யா இங்கே! எனக்கு ஒரு உதவி பண்ணியா? ஜம்பு:— என்ன உதவி? உள்ளே போறதுக்கா? (ஜம்புவின் காதில் விங்கன் ஏதோ சொல்ல அவன் சிரிக்கிறான்.) (உமா உள்ளே படுத்திருக்க யானை பிளிறும் சப்தம் கேட்டு பயப்படுகிறாள்.) விங்கன்:— யானைமாதிரியே இருக்கு! கத்து!...கத்து! (ஜம்பு கத்துதல்.) ★