காட்சி 23
காட்சி-23
டேவிட் பங்களா வெளிப்புறம்
72 பகுதிகளில்
**டேவிட் பங்களா வெளிப்புறம்** (வண்டி நிற்கிறது...இருவரும் இறங்குதல்.) விங்கன்:— உமா, இதான் டேவிட் துரை பங்களா!..கோடை காலத்தில் இங்கதான் வந்து தங்குவார்..நான்கூட வந்திருக்கேன்!.. (கேட்டைத் திறந்து காம்பவுண்டுக்குள் வந்தவாறு...) ஜம்பு! ஜம்பு!... (வேலைக்கார ஜம்பு ஓடிவருதல்.) ஜம்பு:— சார்! சார்! நீங்களா? வாங்க-வாங்க-அம்மா யாரு?.. சாருக்குக் கல்யாணம் ஆயிட்டுதா?..என்ன சார் எனக்கு ஒரு பத்திரிகைகூட அனுப்பலே!.. விங்கன்:— (ஜம்புவின் வாயைப் பொத்தி)...ஏ, ஏ!..சும்மா இரு!..உமா!..நீ உள்ளே போ!... ஜம்பு:— சார்!..உங்களுக்கு ரொம்பப் பொருத்தம் சார்!... விங்கன்:— சரி! சரி!..சாவிக்கொத்தை என்கிட்டே கொடுத்துட்டு...சாப்பாட்டுக்கு முதல்ல ஏற்பாடு பண்ணு! ஜம்பு:— இப்பவே ரெண்டு கோழி அடிக்கிறேன்! ★