காட்சி 22-எ

காட்சி — 22-எ

72 பகுதிகளில்

உமா:— சடையா! விளக்கை ஏத்து!.. (அதுவரையில் கம்பளிச் சட்டையுடன் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த விங்கன், தீக்குச்சியைப் பொருத்த அந்த ஒளியில் அவன் முகத்தைக்கண்டு உமா, வியப்பும் திகைப்பும் அடைதல்.) உமா:— நீங்க எப்படி வந்தீங்க? சடையன் என்ன ஆனான்? விங்கன்:— எஸ்டேட்டைப் சுத்திப் பார்க்கணும்னு எனக்கும் ஆசையா இருந்தது!.... உமா:— அதுக்காக... (உமா வண்டியிலிருந்து இறங்கி) இதெல்லாம் என்ன விளையாட்டு? என் குணம் தெரியாம நடந்துக்கிறீங்க?.. (இந்தப் பேச்சுக்கிடையே வண்டியின் லாந்தர் விளக்கு ஏற்றப்படுகிறது.) விங்கன்:— சரி, உனக்குப் பிடிக்கவேணா..இப்பவே நான் திரும்பிப் போறேன்... (இறங்கிப் போக முனைகிறான்.) உமா:— ரொம்ப ஒழுங்கா இருக்கு..என்னை இருட்டிலே தனியா தவிக்க விட்டுட்டா?... (திருக்கிட்டு வழியை நோக்கி) அடடே... பாதைகூட தவறிட்டு போயிருக்கே!... விளக்கைக் கொளுத்து!... (என்று விளக்கை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி, அங்குள்ள மைல் கல்லைப் பார்க்கிறாள்...) “டேவிட் துரை எஸ்டேட் பங்களாவுக்குப் போகும் வழி!” — என்று போர்டில் விளக்கின் உதவியால் எழுத்துக்களைப் படிக்கிறாள். நம்ம ஜமீன் எஸ்டேட்டுக்குப் போற வழியை இருபது மைலுக்கு அப்பாலேயே தவற விட்டாச்சு!... விங்கன்:— வழி காட்டாதது யாரு குற்றம்?..நான் புதுசு!.. உமா:— இப்ப என்ன பண்றது?... விங்கன்:— என்ன பண்றது?... உமா:— பொழுது விடியிற வரையிலே இங்கேயே உட்கார்ந்து கிடக்க வேண்டியதுதான்! விங்கன்:— உம்! உட்கார்ந்து கிடக்கலாம். ஆனா பயங்கரமான காடு! ஒரு வழி சொல்றேன்..என்னை உங்கப்பாவுக்கு அறிமுகப் படுத்தினாரே டேவிட் துரை. அவருக்கு ஒரு பங்களா..இங்கேதான் இருக்கு!..ரொம்ப கிட்ட இருக்கு!.. உமா:— அதான்..இந்தக் கல்லிலேயே போட்டிருக்கே!.... விங்கன்:— அங்கே போய் ராத்திரிக்கு தங்கலாம்!.. காலையில எஸ்டேட்டுக்குத் திரும்பலாம்!... உமா:— சரி!... விங்கன்:— ஏறு வண்டியிலே! ★