காட்சி 21

காட்சி — 21

ஜமீன் மாளிகை / ஜமீன்தார் அலுவலக அறை

72 பகுதிகளில்

**ஜமீன் மாளிகை** **ஜமீன்தார் அலுவலக அறை** (ஜமீன்தார், விங்கன் இருவரும் — பெரிய பெரிய கணக்குப் பேரேடுகளை அடுக்கிவைத்து, அவைகளைப் புரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.) ஜமீன்தார்:— மிஸ்டர் விங்கன்!..எந்தக் கணக்கு இடிக்குதுன்னு சொன்னீங்க!... விங்கன்:— நம்ம ஜமீன்கிராமங்களிலே விவசாயிகள் கட்டவேண்டிய கிஸ்தி பூரா கட்டியிருக்காங்க!.. அதுக்குக் கணக்கு இருக்கு!..ஆனா..நம்மகிட்ட இருப்பு இருக்கிற உணவு தானியம் ரொம்ப குறைவா இருக்கு... ஜமீன்தார்:— உணவு தானியம், கணக்கிலே குறைவா இருக்கும்!.. நம்ம களஞ்சியத்திலே சரியா இருக்கும்!.. விங்கன்:— அப்படின்னு..களஞ்சியத்திலே..பாழாப்போற தானியத்தை ஏழைபாழைகளுக்குக் கொடுக்கலாமே!.. ஜமீன்தார்:— நல்லா சொன்னீங்க போங்க!..மிஸ்டர் விங்கன்!... களஞ்சியத்திலே இருக்கிற தானியம் எதுவும் பாழாப்போகாது.. அப்படியே பணமா மாறும்!.. அதுவும் கறுப்புப்பணமா மாறும்!..விங்கன்! இதெல்லாம் நம்ம ஜமீன் ரகசியங்கள்!..சாவி ஜாக்கிரதையா காப்பாத்தணும்!..மேலும்... (அப்போது உமா வருகிறாள்.) உமா:— அப்பா! அப்பா!... ஜமீன்தார்:— உமா கண்ணு என்னம்மா?... உமா:— அப்பா! நான் இன்னைக்கு நம்ம எஸ்டேட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வந்துடறேன்!.. ஜமீன்தார்:— போயிட்டு வாம்மா!.. தனியா குதிரையிலே கிளம்பிடாதே!..என் வண்டியை எடுத்துக்கிட்டு போ!.. உமா:— சரிப்பா!... (திரும்புகிறாள்.) ஜமீன்தார்:— உமா!..வண்டியையும் நீயே ஓட்டிக்கிட்டு புறப்பட்டுடாதே!..வண்டிக்கார சடையன அழைச்சிக்கிட்டுப் போ! உமா:— சரிப்பா! ஜமீன்தார்:— நீ பயணத்துக்கு ரெடியாயிடு!..சடையனே நான் அனுப்புறேன்!.. உமா:— சரிப்பா!... (எனக்கூறிவிட்டு உமா போய்விடுகிறாள் குதித்துக்கொண்டு) ஜமீன்தார்:— மிஸ்டர் விங்கன்!..நம்ம வண்டிக்கார சடையனுக்குச் சொல்லி அனுப்பி..உமாவோட எஸ்டேட்டுக்குப் போகச் சொல்லுங்க!.. விங்கன்:— ஓ எஸ்!..ஓகே!... (ஜமீன்தார் போய்விடுகிறார். விங்கன் முகத்தில் மாற்றம்.) ★