காட்சி 20-எ
காட்சி-20-எ
72 பகுதிகளில்
(கோகிலா-விங்கன் கனவு கீதம் முடிகிறது. கோகிலா ரூபாய் நாணயத்தையே உற்று நோக்கியவாறு இருக்கிறாள். மரகதம் பின்னிருந்தவாறு தோளைத் தொடுகிறாள்.) கோகிலா:— (மெய்மறந்த நிலையில் மரகதத்தின் கையைப் பிடித்தவாறு) விங்கன்!... மரகதம்:— விங்கனா? வர வேண்டிய நோய் வர வேண்டிய வயசிலே வந்தாச்சா?.. கோகிலா:— (சட்டென) அம்மா! அந்தநோய் உங்களுக்கு எத்தன வயசுலம்மா வந்துச்சு? (மரகதம் சிரிக்கிறது — சுதாரித்து) மரகதம்:— சீ! சரியான வெகுளிப் பெண்ணு வந்து பிறந்தேடி எனக்கு!..ஆமா...கோகிலா! என்ன விஷயம்..காதலா? கோகிலா:— அம்மா நீங்கதான் ஒரு ஜோசியம் சொல்லுங்களேன்! விங்கன் எனக்குக் கிடைப்பாரா? இல்லே, உமாவுக்குக் கிடைப்பாரா? மரகதம்:— ஓகோ! இதுவே போட்டிப் பந்தயம் வேறயா? கோகிலா:— ஆமாம்மா!..அவள் குடும்பத்துக்கு ஏத்த அந்தஸ்து இருந்தா உமா அவரைக் கல்யாணம் பண்ணிக்குவாளாம்... மரகதம்:— இல்லேன்னு, நீ தயார்னு சொன்னியாக்கும்..? கோகிலா:— சொல்லவேம்மா...நினைச்சிகிட்டிருக்கேன்!.. மரகதம்:— நினைப்போட இருக்கட்டும் — ரொம்ப நெருங்கிடாதே! கோகிலா:— அம்மா! என் மனநிலையை எப்படிம்மா அப்படியே உங்கிட்ட சொல்ல முடியும்?.. மரகதம்:— சொல்ல முடியலேன்னு விவரமா எழுதிக்கொடு!.. கோகிலா:— அதைக் கொண்டு போயி, அவருகிட்ட கொடுத்திடறீங்களாம்மா!... மரகதம்:— நான் கொண்டு போய் கொடுக்கணுமா? அந்தக் காலத்திலே அன்னம் விடு தூதும்பாங்க!...இப்ப நீ அன்னம் விடு தூதே நடத்துறேங்கிறியா?... கோகிலா:— அம்மா! அப்படின்னு என் காதல்...என்னுறது?.. மரகதம்:— கொஞ்ச நாளைக்கு ஊறுகாய்ப் பானையிலே போட்டு வை!...அது ஒண்ணும் ஊசிப் போயிடாது!.. கோகிலா:— ஊறுகாய் போட்ட...என்ன மாங்காயா? எலுமிச்சங்காயா?... மரகதம்:— மாங்காய்க்கும், எலுமிச்சங்காய்க்கும் தேவை வந்துடக் கூடாதுன்னுதான்.. அவசரப்பட்டாதேங்கிறேன்!.. கோகிலா:— சரிம்மா!...நீங்க அவரைப்பற்றி... மரகதம்:— ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறேன். அதுவரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா இரு!.. (கோகிலா தாயைத் தழுவிக் கொள்ளுதல்.) ★