காட்சி 18
காட்சி—18
ஜமீன்மாளிகை வெளிப்புறம்
72 பகுதிகளில்
**ஜமீன்மாளிகை வெளிப்புறம்** (உமாவும் விங்கனும் நடந்து வர மரகதம் ஓடிவந்து) மரகதம்:— துளியோண்டு துளியோண்டு.... சின்னச்சின்ன சிராய்ப்புத்தான்!... (ஆறுதலுடன்... விங்கனை நோக்கி) பெருங்காயமே கிடையாது தம்பி!.... விங்கன்:— டீச்சரம்மா! இவ்வளவு பெரிய ஜமீன் மாளிகையிலே பெருங்காயம் கிடையாதா?... பெருங்காயம் இல்லே, புளி இல்லேன்னு செகரட்டரிகிட்ட வந்து சொல்றீங்களே.... சமையக்காரங்கிட்டே சொல்லுங்க!... மரகதம்:— தம்பி தமாஷ் பண்ணுதப்பா!::: (மரகதம் உமாவை அழைத்துக் கொண்டுவர) ஜமீன்தார்:— உமா!... மரகதம்:— உமா! வாம்மா டிரஸ் 'சேஞ்ச்' பண்ணிகிட்டு காயத்துக்கு மருந்து போட்டலாம் வா!... (என்று அழைத்துப் போகிறாள்) ஜமீன்தார்:— ஏன் சடையா? என்னைக்குமே இல்லாம இன்னைக்கு நம்ம குதிரை வெறிச்சிகிட்டு ஓடக்காரணம்? காளிங்:— காரணமில்லாமயா நடக்கும்? (அன்று வரும் காளிங்கன் வருவதைக் கவனித்தல். — காலி 'ரம்' பாட்டிலைத் தூக்கிக் காட்டியபடி).... 'ரம்'மை குதிரைக்குள்ள விட்டான்.. அது 'கும்'முன்னு குதிக்க ஆரம்பிச்சிடுச்சி! ஜமீன்தார்:— என்ன சொல்றே காளிங்கா?.... காளிங்:— என்ன சொல்றேனு? பாதியை அவன் குடிச்சான்! மீதியைக் குதிரைக்கு விட்டான்! அந்த அயோக்கியன் இங்கேதான் இருக்கான். அவன் யார் தெரியுமா? (எல்லோருடைய முகத்திலும் யார்? யார்? என்ற கேள்வி) சடையன்:— யார் அந்த அயோக்கியன்?::: என் பாதுகாப்பிலே இருக்கிற லாயத்திலே இப்படியொரு அக்கிரமத்தைச் செய்தவன் சொல்லுங்க, அவனைப்பிடிச்சு... சவுக்கடி கொடுக்கிறேன்!... காளிங்:— ஒன்றல்ல, ரெண்டல்ல.... ஓராயிரம் அடி கொடுக்கணும்! தெரியாத மாதிரி நடிக்கிறியே?.. அந்த அயோக்கியன் இவன்தான்! (சடையனைக் காட்டியபடி.) சடையன்:— ஆண்டவனே! எஜமான்! சத்தியமா நான் குடிக்க மாட்டேங்க!... ஜமீன்தார்:— யாராயிருந்தாலும் சரி... குடிகாரனை நான் மன்னிக்கவே மாட்டேன்!... காளிங்:— அது உங்க கொள்கையாச்சே! சடையன்:— என் பெத்த பிள்ளை மேல ஆணையா சொல்றேங்க! எனக்கு குடிப்பழக்கமே கிடையாதுங்க!... காளிங்:— உனக்கு ஏதுடா பெத்த பிள்ளை? அதுதான் தொலைஞ்சு போச்சே! எங்கே போயி பிச்சை எடுக்குதோ? பிள்ளைமேலயா சத்தியம் பண்ணுற? பெரிய சத்தியவானுடா நீ?... சடையன்:— எஜமான்!... (சவுக்கால் அடிக்க கையை ஓங்குதல். விங்கன் பாய்ந்து சவுக்கடியைத் தன் முதுகில் வாங்கிக்கொள்ளுதல்.) சடையன்:— ஐயோ!... செகரட்டரி தம்பி!.... யாரு பெத்த பிள்ளையோ, என்னை நீங்க அடி வாங்கிக்கிட்டீங்களே!... விங்கன்:— தன் பிள்ளை மீது ஆணை வைத்து சத்தியம் செய்த ஒரு தகப்பனை தண்டிப்பது தவறு!... காளிங்:— (சவுக்கைக் கீழே இறக்கவாறு) செகரட்டரி நீங்க ஒதுங்க! வேலக்கார நாயே! உன்னை அடிச்ச அடி அவர் மேல அடிபட்டுப் போச்சே! டேய்! சர்ஜனைக் கூட்டியாடா. உன்னை விடுறதில்லடா. இன்னைக்கு.. டேய்!.. (கை ஓங்கி அறையப்போகும்போது) ஜமீன்தார்:— உஸ்.... காளிங்கா!.... வேண்டாம்... சடையன்:— (ஜமீன்தார் காலில் விழுந்தவாறு) எஜமான்!... என்னை நம்புங்க! நீங்க அடிச்சாலும் உதைத்தாலும் இந்த அரண்மனை சோத்தை தின்னுகிட்டு கிடக்கிற நன்றியுள்ள நாய்ங்க நான்! (விங்கன் உணர்ச்சிவயப்படுகிறான்.) ★