காட்சி 16-எ

காட்சி—16 எ

ஜமீன்வீடு வெளிப்புறம்

72 பகுதிகளில்

**ஜமீன்வீடு வெளிப்புறம்** (உமாவும், கோகிலாவும் குதிரைச் சவாரிக்கான உடையணிந்து வருகின்றனர்.) உமா:— கோகிலா! இன்னைக்கு "ஹார்ஸ் ரைடிங்" ஏரிக்கரைப் பக்கம் போயிட்டு வரலாமா?.... கோகிலா:— ஓ!... உன் இஷ்டப்படி! (சடையன், குதிரைகளைப் பிடித்துக் கொண்டு வருதல். உமா, 'ரம்' சாப்பிட்ட குதிரையில் ஏறி உட்காருகிறாள்...... கோகிலா, தான் ஏறவேண்டிய குதிரைக்குப் போவதற்குள், உமா ஏறிய குதிரை முரண்டு பிடித்து வெறியோடு ஓடத் தொடங்குகிறது... அதைச் சமாளிக்க முடியாமல் உமா திணறுகிறாள்.... குதிரை, அவளே மீறி ஓடுகிறது....) கோகிலா:— உமா! உமா!::: (அலறுகிறாள்.) அதற்குள் விங்கன் ஓடிவந்து விங்கன்:— என்ன? என்ன? கோகிலா:— அய்யோ! உமாவைக் காப்பாத்துங்களேன்!::: (விங்கன், கோகிலாவின் குதிரையில் ஏறிக்கொண்டு பின்தொடருகிறான்.) ★