காட்சி 14-எ

காட்சி—14 எ

ஜமீன் மாளிகை / காளிங்கன் அறைக்கு வெளியே

72 பகுதிகளில்

**ஜமீன் மாளிகை** **காளிங்கன் அறைக்கு வெளியே** (வெளியேறிய கண்ணாயிரம் ஒரு தூண்பக்கம் போகும்போது — ஒரு கை அவனைத்தடுத்து இழுத்துப் பிடிக்கிறது. கண்ணாயிரம் அதிர்ச்சி — திகைப்பு — விங்கனின் கைதான் அது... விங்கன், சைகை காட்டி கண்ணாயிரத்தைப் பேசாமல் இருக்கச் செய்து — தன்னுடன் தூணில் ஒளித்துக் கொள்கிறான். அப்போது காளிங்கன், அவர்கள் ஒளிந்திருக்கும் தூணைக் கடந்து செல்லுதல் — விங்கன் காளிங்கனைப் பின்தொடரும் சில பகுதிகள் — கண்ணாயிரமும் விங்கன் பின்னால் செல்கிறான்.)