காட்சி 10-எ
காட்சி 10-எ
72 பகுதிகளில்
(லிங்கனின் இலட்சிய கீதம் முடிவதற்கும் உமா, ஓட்டிவரும் சாரட் வண்டி அவனை மிக வேகமாக நெருங்குவதற்கும் சரியாக இருக்கிறது. உமாவின் கையிலுள்ள சாட்டையை லிங்கன் பிடுங்குகிறான்.) உமா:— (கோபமாக) ஏய்! உடம்பு எப்படியிருக்கு! லிங்கன்:— (முண்டாசைத் தட்டி) நல்லாத்தான் இருக்கு!..பாத்தா தெரியலே; தெருவிலே போறவங்களையெல்லாம் உடல்நலம் விசாரிக்கிறீங்களே...நீங்க என்ன டாக்டரம்மாவா?... உமா:— (மேலும் கோபமாக) ஆங்? மரகதம்:— டாக்டரம்மாக்கள் எல்லாம் இப்படித்தான் சவுக்கை வச்சிகிட்டு விசாரிப்பாங்களா? லிங்கன்:— நோயாளிகள் கிடைக்காம லோ-லோன்னு அலையுற டாக்டரம்மாக்கள்ளாம் இப்படித்தான் விசாரிப்பாங்க? உமா:— கேலியும் கிண்டலும் கிடக்கட்டும்...முதல்ல சவுக்கைக் கொடு! (கையை நீட்டுகிறாள் சவுக்கை வாங்க) லிங்கன்:— சவுக்கை கொடுக்கட்டுமா? இல்லை; சவுக்கால கொடுக்கட்டுமா? உமா:— என்ன சொன்னே? மரகதம்:— தம்பியோவ்! கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க! யாகாவாராயினும் நா காக்க!.. லிங்கன்:— நா, காக்கிறது இருக்கட்டும் இவ்வளவு வேகமா போனா..தெருவில்போறவுங்க உயிரை யாரு காக்கிறது? உமா:— அதைக் கேக்க நீங்க யாரு? லிங்கன்:— நான் யாருன்னு ஒரே வரியிலே சொல்ல முடியாது!... எனக்கும் கொஞ்சம் இடம் கொடுத்தீங்கன்னு உட்கார்ந்துகிட்டு விவரமா சொல்வேன்! மரகதம்:— தம்பி! நீங்க இந்த ஊரு இளைய ஜமீன்தாரணியோட பேசுறீங்கங்கிறது ஞாபகமிருக்கட்டும்! லிங்கன்:— ஓ! ஜமீன்தாரணியா? (திகைப்பு — மரகதத்திடம்) நீங்க யாரு? இவுங்க டாட்டரா? மரகதம்:— டாட்டரா?... போச்சுடா!... தம்பி? நீங்க என்ன எனக்கு ஐஸ் வைக்கிறீங்களா? எனக்கே இதாட்டம் ஒரு டாட்டர் இருக்கு! நான் இந்த சின்ன ராணிக்கு டீச்சரம்மா! லிங்கன்:— ஓகோ! டீச்சரம்மா அவர்களே! உங்க மாணவியை இவ்வளவு வேகமா வண்டியோட்டச் சொல்லாதீங்க!. (சவுக்கைத் தூக்கி எறிய — அதை உமா, கையில் பிடித்தவாறு — கோபமாக) உமா:— இதைவிடவேகமா ஓட்டுவேன்; என்னை யார் கேக்கிறது? லிங்கன்:— இப்பநான் கேக்கிறேன்! அப்பறம் இந்த ஊரேகேக்கும்! உமா:— இனிமேப் பாரு நான் பொல்லாதவளா இருப்பேன்!... லிங்கன்:— இனிமே தானு!....உம்!...உம்!.... (வண்டி போகிறது...) ★