காட்சி 10

காட்சி — 10

72 பகுதிகளில்

(பெரியவனான லிங்கன் பாட்டுப்பாடி வருதல்.) ஒருநாடகம் நடக்குது நாட்டிலே! — அதை நான் சொல்ல வந்தேன் பாட்டிலே! — சிலர் ஆடுற மேடையும், போடுற வேஷமும் ஊரார் கண்ணுக்குத் தெரியல்லே! — அட; உண்மை எவனுக்கும் புரியல்லே! — ஒருநாடகம் பாய்ந்து வருகுது அதிகாரம்! — அதன் பக்கத்தில் ஆயிரம் பரிவாரம்! — இது போகுற போக்கு சரியில்லை என்று ஊருக்குக் காட்டுவேன் அடையாளம்! — ஒருநாடகம் உத்தமர் போலொரு உபதேசம்! — அந்த புத்தரைப் போலொரு வெளிவேஷம்! — இந்தப் போலிகள் போடும் போர்வையை எடுத்தால் உருட்டல்; மிரட்டல்; சிறைவாசம்! — ஒருநாடகம் ஏழைகள் குளிப்பது கண்ணீரில்! — இந்த எத்தர்கள் மிதப்பது பன்னீரில்! — இந்தக் கோழைகள் வீரம் எத்தனை காலம் கொடிகட்டிப் பறக்கும் தர்பாரில்? — ஒருநாடகம் ★