காட்சி 8
காட்சி — 8
ரயில் முதல்வகுப்புப் பெட்டி
72 பகுதிகளில்
**ரயில் முதல்வகுப்புப் பெட்டி** (ப்ளாஷ்—பேக் முடிகிறது.) டேவிட்:— (சிறுவன் கண்களில் நீர்த்துளிகள்... அதனைத் தன் விரல்களால் துடைத்துவிட்டவாறு...) மை பாய்!.. கவலைப்படாதே!.. கடவுள்தான் உன்னைக் கொண்டு வந்து என்னிடம் சேர்த்து வைத்திருக்கிறார்.... இனிமேற் கொண்டு நீ என்னிடமே இருக்கலாம்.... உன்னை வளர்த்து ஆளாக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது! என்ன சரிதானு?... ம்.. சரி என்று உன் தலையை ஆட்டு... (சோகத்திலும் சொக்கலிங்கம் புன்னகை சிந்த தலையசைக்கிறான்.) டேவிட்:— மிகவும் நல்லது!.. ம்.. பாய்! உன் பெயர் என்ன சொன்னாய்?... சொக்க:— சொக்கலிங்கம்!.. டேவிட்:— சுக்கு லிங்கம்!... சொக்க:— ஊஹூம்!.. சொக்க..லிங்கம்!... டேவிட்:— ஏன் வம்பு... இனிமேல் நான் உன்னை லிங்கன் என்றே கூப்பிடுவேன்!... (லிங்கன் மகிழ்ச்சியுடன் தலையசைத்தல்.) **(ஆண்டுகள் உருள்கின்றன)**