காட்சி 6
காட்சி — 6
சடையன் வீடு
72 பகுதிகளில்
**சடையன் வீடு** (சடையன் அருகே சொக்கலிங்கம் உட்கார்ந்திருக்கிறான். சடையன் தன் எதிரில் உள்ள; தட்டில் உள்ள சோற்றை அள்ளி வாயில் போட்டுக் கொள்கிறான். மண்டியிட்டு அருகே பானை, சட்டியுடன் அமர்ந்துள்ள சொர்ணம் சடையனின் மடியில் உள்ள சொக்கலிங்கத்துக்குச் சோற்றை அள்ளி ஊட்டிவிடுகிறாள்....) சொர்ணம்:— ஏங்க...நம்ம ஜமீன்தாரய்யா பொண்ணுக்கு தினம் பாதாம் அல்வாவா கொடுக்கிறீங்களாமே... அதில ஒரு நாளைக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்து...நம்ப பையனுக்கு கொடுங்களேன்!.... சொக்க:— வேணும்மா வேணும்! இந்தப் பழயது என்னைக்கும் கிடைக்கும்...பாதாம் அல்வா ஒரு நாளைக்குத்தான் கிடைக்கும்... சடையன்:— சொ..ணம்!.. நம்ம பையன் பேசுறதைக் கேட்டியா? சொர்ணம்:— சின்னப்புள்ளே பேசா இருந்தாலும் சிந்திக்க வைக்கிற பேச்சுங்க!...நம்பளப் போல பாட்டாளிங்களுக்கு பழயசோறுதான் பாதாம் அல்வா, பஞ்சாமிர்தம் எல்லாமே — இல்லீங்களா?.... சடையன்:— என்ன அப்படிசொல்லிட்டே!... நம்ப பையன் பாதாம் அல்வாவுக்கு ஆசைப்படுறான்னு, ஜமீன்தாரய்யா கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும். அப்படியே பாதாம் அல்வா தட்டையே அனுப்பிச்சிடுவாரு!.... சொக்க:— எம்மோ!...எப்போ!...நான் விளையாடப்போறேன்! சொர்ணம்:— சரிடா கண்ணு சீக்கிரம் விளையாடிட்டு வந்து.. கால் கையை கழுவிட்டு...படிடாம்மா... சொக்க:— சரிம்மா!... (முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறான்.) சொர்ணம்:— (சடையனிடம்—சாப்பாட்டு சாமான்களை எடுத்து வைத்தவாறு) ஏங்க!...நானும்...குதிரை லாயத்துக்குப் போயி, கூட்டிப் பெருக்கிட்டு வர்றேன்... ★