காட்சி 5
காட்சி — 5
ரயில் முதல்வகுப்புப் பெட்டி
72 பகுதிகளில்
**ரயில் முதல்வகுப்புப் பெட்டி** (டேவிட்துரை சிகரெட்டைப் புகைத்தவாறு மதுப்புட்டியை எதிரே வைத்து குடித்துக் கொண்டிருக்கிறார். அவர் உட்கார்ந்திருக்கும் பெஞ்சுக்குக் கீழே சிறுவன் சொக்கலிங்கம் ஒளிந்து கொண்டிருக்கிறான். அவன்முகத்தில் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் ஒரு கிளாஸ் ஊற்றிக் குடிக்கிறார்... டேவிட் தள்ளாடியவாறு எழுந்து, ரயில்பெட்டியில் உள்ள "டாய்லெட்"டிற்குச் செல்ல முயன்று நிலைதடுமாறி ரயிலின் கதவைத் திறந்து, ஒரு காலையும் முன்னுக்கு வைக்கப் போகிறார். அப்போது சொக்கலிங்கம், அலறியடித்து எழுந்தோடி, அவரது இடுப்பில் கையைக் கோத்து கீழேவிழாமல் தடுத்து நிறுத்துகிறான்.) டேவிட்:— ஹூ~ ஆர் யூ? யார் நீ? சொக்:— நான் யாருங்கிறது அப்புறம் இருக்கட்டும்...இன்னேரம் நான் வந்து இங்கே ஒளிஞ்சிருக்கலேன்னு...நீங்க கீழே விழுந்து சுக்குநூறாப் போயிருப்பீங்க!.. டேவிட்:— ஓ...ஐ ஸீ!..நான் பாத்ரூமுக்குப் போனேன்..பாய்!... சொக்:— பாத்ரூமுக்குப் போறேன்னுட்டு பரமண்டலத்துக்கே போயிருப்பீங்க!..இது..கீழே இறங்குகிற கதவுசார்...கதவு!... டேவிட்:— (சிரித்தபடி) குட்பாய்!..வெரிகுட் பாய்!...உன்பேர் என்ன தம்பி?.. சொக்:— சொக்கலிங்கம்!.. டேவிட்:— குட்!...குட்!...பாய்! நீ எப்படி இங்க வந்தே? சொக்:— நான் பொறந்த ஊரை விட்டே ஓடியாந்துட்டேன்!..? டேவிட்:— உனக்கு அப்பா அம்மா யாருமே இல்லையா? நீ ஒரு அனாதையா?... சொக்:— அனாதை இல்ல சார்...நான் ஓடியாந்து இங்க ஒளிஞ்சதே ஒரு பெரிய கதை சார்!... டேவிட்:— ஓ...!ம்.... சொல்லு, சொல்லு!.... சொக்:— அப்பா மடியிலே உக்காந்துக்குவேன்!.. அம்மாதான் எனக்குச் சோறு ஊட்டுவாங்க!.. (ப்ளாஷ்-பேக் ஆரம்பம்.)