காட்சி 4

காட்சி — 4

ஜமீன் தேவாலயம் உட்புறம்

72 பகுதிகளில்

**ஜமீன் தேவாலயம் உட்புறம்** (அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிலையிருக்கும் பீடத்திற்குப் பின்னால் அடைப்புச் சுவர் போல இருக்கிறது. உள்ளே வந்த ஜமீன்தார், தன் காலணிகளைக் கதவோரத்தில் கழற்றிவைத்துவிட்டு, மேலே போட்டுக் கொண்டுள்ள பட்டுத் துண்டினை இடுப்பில் கட்டிக்கொண்டு — தேங்காயை உடைத்து வைத்து..பழங்களை, சிலையின் முன் வைத்து.... சூடத்தைக் கொளுத்தி, சிலைக்குக் காட்டிவிட்டு...) ஜமீன்தார்:— தேவி! பராசக்தி! ஜெகன் மாதா!..ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! ஓம்சக்தி, ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!... (கண்மூடித் தியானித்து நின்று, கன்னங்களில் போட்டுக் கொண்டு — கண்விழித்து, சடையனைப் பார்த்து,....) சடையா!... நான் பூஜையிலே உட்கார்ந்தா எப்ப எழுந்திருப்பேனு தெரியாது..நீ போய் மற்ற வேலைகளைப் பாத்துட்டு மெதுவா வா!...போ!... (சடையன் அவரையும் வணங்கிவிட்டு, அம்மன் சிலையையும் வணங்கிவிட்டு மிகப் பணிவுடன் வெளியேறுகிறான்....கதவை ஜமீன்தார் தாளிடுகிறார்..... பின்னர், அம்மன் சிலையை திருக்குகிறார். ஒரு ரகசியக் கதவு சிலைக்குப் பின்னால் திறக்கிறது — அந்த வழியாக ஜமீன்தார், தனது அந்தரங்க ஆடம்பர அறையில் நுழைகிறார்.) ★