காட்சி 91] [மில் முதலாளி வீடு
காட்சி 91·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
உஷா: பரந்தாமன்தான் வழிப்பறிசெய்து நெக்லஸை திருடினான் என்பது பூமாலை பரந்தாமன் சச்சரவின்போது எனக்கு நன்றாக புரிந்து விட்டதப்பா.
முதலாளி : பாபம் நிரபராதியான பாண்டியனை வீணே கஷ்டப் படுத்தி விட்டேன்.
உஷா : அந்தப் பாபத்தை போக்கிக்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது.
முதலாளி: என்ன உஷா?
உஷா: பாண்டியனின் கொள்கைப்படி பாட்டாளிகளுக்கு சமத்துவம் வழங்குங்கள்.
முதலாளி: பாண்டியன்!
(பாண்டியன் பிரவேசம்)
பாண்டியன் : பல்லைக்காட்டி ஏமாற்ற நினைக்காதீர் மறுபடியும்! இம்முறை இரண்டிலொன்று. அநியாயமாக நீக்கப்பட்ட தொழிலாளருக்கு வேலைதரவேண்டும் உடனடியாக.
முதலாளி: பாண்டியன்!
பாண்டியன்: யாரோ ஒருவன் செய்த தவறுக்காக இத்தனை குடும்பங்கள் மீது பழிவாங்கிக்கொள்வதுதான் மனிதத் தன்மையா?
முதலாளி: நான் அதை உணர்கிறேன் பாண்டியன்!
பாண்டியன் : உணர்ந்தால் போதாது. உடனடியாக பரிகாரம் தேட வேண்டும்.
முதலாளி: பாண்டியன்! தொழிலாளிகளை வேலைக்கு சேர்ப்பது மட்டுமல்ல. குற்றமற்ற உனக்கு நான் செய்த கொடுமைக்காக சிவசக்தி மில் நிர்வாகமே உன் கொள்கைப்படியும் உஷாவின் கொள்கைப்படியும் நடக்க அனுமதி தருகிறேன்.
(பாட்டாளிகளைக் காட்டி -இதோ மில்லின் சொந்தக்காரர்கள் ! உன் தோழர்கள்! கைபோட்டுக் கொடுத்து -இதோ மில்லின் நிர்வாகம் !)
பாண்டியன் : அப்படியா ! வாழ்க உங்கள் புகழ்! வளர்க இந்தப் பண்பு தோழர்களே ! சிவசக்தி மில் இன்று முதல் ஜனசக்தி மில்லாக மாறும் ! சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதி. சமத்துவம் கொழிக்கும் - சமதர்மம் திகழும்- சமுதாய மறுமலர்ச்சி உருவாகும்!
தொழிலாளர்கள்: பாண்டியன் வாழ்க! பாண்டியன் வாழ்க!
(வேலைக்காரன் ஓடிவந்தபடி)
வேலைக்காரன் : எஜமான் பாத்திங்களா?
முதலாளி: ஆ என்ன !
(பத்திரிகையை பாண்டியனிடம் கொடுத்தல்)
பாண்டியன்: ஆங்!