காட்சி 90] [பாமா வீடு
காட்சி 90·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
(கதவு திறந்திருக்கிறது - ஹாலில் போய் உட்காருகிறான் பரந்தாமன்]
பரந்தாமன் : குமுதா! குமுதா!
(பதிலில்லை - உட்கார்ந்திருக்கிறான். பிறகு பலூன் ஊதுகிறான். வெடிக்கிறது)
பாமா: அப்படித்தான் வெடித்துச் சிதறப்போகிறது உன் வாழ்வும் !
பரந்தாமன் : பாமா! (என்று திகிலுடன் எழுகிறான்)
பாமா: பாவி! இந்த முறை நீ தப்பமுடியாது ! நீ செய்த அக்ரமங்களுக்கு பிராயச்சித்தம் செய்யப்போகிறேன் .
பரந்தாமன்: பாமா ! என்னை உணர்ந்துகொள் ! அவசரப்பட்டு விடாதே ! துடிக்கத் துடிக்க பாமாவை விட்டுவிட்டு ஓடிய துரோகி பரந்தாமனல்ல ! துன்மார்க்க செயல்களுக்கு சமாதி கட்டிவிட்டு தூய்மையின் தூதுவனாகவே மாறி விட்ட புதுப் பரந்தாமன்!
பாமா : ஆமாம்! அதனால்தான் குமுதாவுக்கு வலைவீச வந்திருக்கிறாய்.
பரந்தாமன் : இல்லை பாமா இல்லை அவளிடம் மன்னிப்புக் கேட்க வந்தேன்.எதிர்பாராதவிதமாக உன்னையும் கண்டேன் . பாமா நீயும் நடந்தவைகளை மறந்துவிடு ! மீண்டும் நம் வாழ்வைப் புதுமை செய்வோம்.
பாமா : வாழ்வு எனக்கா? நான் முறிந்துபோன பால் ! விஷங் கலந்த தேன் ! எனக்கா வாழ்வு ! சதிகாரா ! போதுமடா உன் உபதேசம்! போதும். (ரிவால்வாரை நீட்டி)
பரந்தாமன் : பாமா!
பாமா : உலகத்திலே இருக்கிற என்போன்ற பேதைகளைக் காப்பாற்றுவதற்காக உன்னைக் கொல்லுகிறேன் !
(சுடப்போகிறாள்)
பரந்தாமன்: பாமா! (தடுக்கிறான் - இருவருடைய போராட்டத்தில்) பாமா! நான் சொல்வதைக் கேள்! என்னைக் கொல்லாதே! நான் உண்மையிலேயே திருந்திவிட்டேன்...
பாமா: பாவி ! விடு என்னை !
("குமுதா! குமுதா" என்ற பூமாலையின் ஒலி கேட்கிறது ! அதற்குள் பாமாவின் ரிவால்வார் வெடிக்கிறது. ரிவால்வார் அவள் பக்கமே திரும்பியிருந்ததால் பாமாவின் உயிர் போகிறது. பாமா விழுகிறாள்.)
பரந்தாமன் : ஆ !.... (கவலை)
(அதே சமயம் அவன் மார்பில் குண்டுவீச்சு)
பரந்தாமன் : ஆ !... (அலறல்)
(துடித்தபடி சோபாவில் விழுகிறான். இப்போது சுட்டது பூமாலை)
பூமாலை: தொலைந்துபோ துஷ்டனே ! இனிமேலாவது உலகம் நிம்மதியாயிருக்கட்டும் ! (கீழே கிடப்பவளிடம்) குமுதா! குமுதா! (அருகே போய் பார்க்கிறாள்) ஆ! பாமா!
[மரணமூச்சுவிடும் பரந்தாமன்)
பரந்தாமன் : அது குமுதா இல்லக்கா ! பாமா ! (விம்மலுடன்) என் பாமா! அவளே அவளைக் கொன்றுகொண்டாள்!
பூமாலை : ஆமாம் ! என்றைக்கு உன்னை முதன்முதலாகப் பார்த்தாளோ அன்றைக்கே அவள் தன்னைத்தானே கொல்ல ஆரம்பித்துவிட்டாள்!
பரந்தாமன்: அக்கா ! என்னை இன்னும் தவறாக நினைக்கிறீர்கள் அக்கா ! தகாத செயல் புரியும் தம்பியை அல்ல தாங்கள் கொன்றது ! தணலில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கத்தை ! கோர விளையாட்டுக்களின் குகையாயிருந்த பரந்தாமனை முன்பே கொன்றுவிட்டீர்கள் அக்கா ! இப்போது நீங்கள் கொன்றது உங்களால் புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட உத்தமனை! உங்களுக்கு யார் தம்பியாய் இருக்க வேண்டுமோ அந்தத் தம்பியை கொன்றுவிட்டீர்களே அக்கா. குமுதாவிடத்திலே மன்னிப்புக்கேட்க வந்தேன் அக்கா. பழிவாங்க எண்ணியிருந்த பாமா.... பாமா ...
பூமாலை: தம்பீ...
பரந்தாமன் : இதோ பாருங்கக்கா ! குமுதாவின் குழந்தைக்காக நான் வாங்கி வந்த விளையாட்டுச் சாமான்கள்!
பூமாலை : பரந்தாமா ! அவசரப்பட்டு அறிவிழந்தேன் - என்னை மன்னித்துக்கொள்ளடா என் செல்வமே....
பரந்தாமன் : நீங்கள் குற்றமற்றவர்.நான் சாகவேண்டியவன் அக்கா ! எனக்குத் தேவையான தண்டனைதான். எனக்கு மட்டுமல்ல என்னைப்போலுள்ள எல்லோருக்கும். என்னைத் திருத்திய தெய்வமே, எங்கே திரும்பிப்பார் என்று சுட்டிக்காட்டிய அந்தப் பொன்கரத்தை இப்படிக் கொடுங்கள்.
பூமாலை: சுட்டிக்காட்டிய கரமல்ல. சகோதரனை சுட்டுத் தள்ளிய கரம்... சுட்டுத்தள்ளிய கரம்.
பரந்தாமன்: இல்லை அக்கா! இல்லை. கொடுங்கள் என்னை வளர்த்த அந்த அன்புக் கரங்களை ... ஆசைக் கரங்களை .. அக்கா.... விடை கொடுங்கள் !
பூமாலை : பரந்தாமா!
பரந்தாமன் : நீங்கள் ஓடிவிடுங்கள். போலீஸாரிடமிருந்து தப்பி விடுங்கள் அக்கா
பூமாலை : வேண்டாம். நீயே போனபிறகு எனக்கு எதற்கடா வாழ்வு.
பரந்தாமன் : அக்கா ! அக்கா!
பூமாலை : போலீஸ்! போலீஸ்!
பரந்தாமன் : அக்கா ! அக்கா !
பூமாலை : பரந்தாமா!
(பரந்தாமன் சாதல்)