காட்சி 86]
காட்சி 86·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[வாட்ச்மேன் வீடு பாண்டியன் : குமுதா! குமுதா ! குமுதா: பாண்டியன் ! (தழுவிக்கொள்ளல்) பாண்டியன்: குமுதா ! உன்னைத் தேடி எங்கெல்லாம் அலைந்தேன் தெரியுமா? ஆமாம் குழந்தை எங்கே? (குழந்தையை கொஞ்சுதல்) பாண்டியன்: என்ன குமுதா குழந்தைக்கு பெயர்? குமுதா: என்னவாயிருக்கும் சொல்லுங்களேன் ! பாண்டியன் : தாத்தா பெயரா? (புண்யகோடியும், ஊமைப் பெண் உள்பட ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டம் " சாம்ப சதாசிவம் - சாம்ப சதாசிவம் - சாம்ப" என்று பிச்சையெடுத்து வரல்,வீட்டுக்கு வந்த வாட்ச்மேன் அவர்களைப் பார்த்து ) வாட்ச்மேன்: என்னாப்பா... ஒருத்தன் வந்தாவே பிச்சைபோட ஆள் இல்லை. நீ பெரிய பட்டாளமே திரட்டிக்கிட்டு வர்ரியே. புண்யகோடி: ஒருத்த ஒருத்தரா வந்தா தொல்லையா இருக்கும்ணுதான் எல்லோரும் சேர்ந்து வர்ரோம். ம் என்னா செய்றது! எங்க காலம், நல்லாத்தான் வாழ்ந்தோம்! வாட்ச்மேன் : ஓகோ நெசவாளிங்களா!
புண்யகோடி: அது கெட்டுது போ ! நாங்கள்ளாம் மில் தொழிலாளிங்க. அதும் கோயமுத்தூரு! வேலை கிடையாது. இப்படி வேதனைபடுறோம். வாட்ச்மேன் : குமுதா! குமுதா ! கொஞ்சம் அரிசி கொண்டாம்மா! புண்யகோடி : கொஞ்சமா -கூட்டத்தைப் பார்த்துட்டு வாட்ச்மேன் : பின்ன என்ன குருணியா போடுவாங்க! (பாண்டியன் குமுதா வருகை பாண்டியன்: (புண்யகோடியைக் கண்டு) அப்பா ! அப்பா ! புண்யகோடி : பாண்டியா! என் மகனே ! பாத்தியா உங்கப்பன் கதியை! பாண்டியன் : அப்பா ! பரதேசியாக மாறிவிட்டீர்கள்? புண்யகோடி: மாத்திட்டான் அந்தப் பரந்தாமன். குமுதா: (வாட்ச்மேனிடம்) இவர்தான் பாண்டியன்! என் கணவர் ! வாட்ச்மேன் : அப்படியா! பாண்டியன் : ஆமாம். (வாட்ச்மேனிடம்) இவர்தான் எங்கப்பா. அப்பா ! என்னப்பா நடந்தது? புண்யகோடி ; பரந்தாமன் சுயநலத்துக்காக வேலை நிறுத்தம் பண்ணி மன்னிப்பு . அதுக்காக எங்களுக்கெல்லாம் வேலை இல்லேனுடான் முதலாளி. பாண்டியன் : ஆ ! குற்றம் செய்தது யார்? கொடுமை அனுபவிப்பது யார்? புண்யகோடி: நாங்கமாத்திரம் இல்லப்பா ! நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இப்படி ஆயிட்டுது!
பாண்டியன் : நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ! வேதனைப்படும் தொழிலாளர்களின் சார்பில் நான் அந்த முதலாளியை சந்திக்கிறேன். புண்யகோடி : என் மகன்னா மகன்தான்.(கட்டிக்கொள்கிறான்)