காட்சி 84]
காட்சி 84·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பிரசவ ஆஸ்பத்திரி (வாட்ச்மேன் கூண்டில், பத்திரிகையுடன் வாட்ச்மேன் உட்கார்ந்திருக்கிறான். பரந்தாமனின் விளம்பரம் கண்ணில்படல்] "அன்புள்ள குமுதாவுக்கு" (ஆர்வமாய்) என்னாது ! என்னாது ! நம்ப குமுதா பேரு வருது ! (மீண்டும்) அன்புள்ள குமுதாவுக்கு... (பிறகு முணகல் ) (உரக்க) இப்படிக்கு உன் மாமன் பரந்தாமன், 15, இமாலயா ஹோட்டல், சென்னை ...ஆகா, குமுதாவோட கவலையெல்லாம் ஒழிஞ்சிடும்!இப்பவே எழுதுகிறேன் குமுதா விலாசத்தை (கார்டைத்தேடி) எங்கடா கார்டு ! இதுவேற ...ம்.... (எடுத்து எழுதுகிறான். எழுதி முடிக்கும்போது அந்தப் பக்கம் பாண்டியன் வருதல்) வாட்ச்மேன்: (பாண்டியனைப் பார்த்து) தம்பீ ! கொஞ்சம் நில்லேன்! (அருகே வந்து) இந்தப் பக்கம்தானே போறே? பாண்டியன்: ஆமாம் வாட்ச்மேன் : உம். இந்தக் கார்டை கொஞ்சம் தபால் பெட்டியிலே போட்டுட்டு போய்டேன். (பாண்டியன் வாங்குதல்) ரொம்ப அவசரம் எனக்கு ஆஸ்பத்திரி நேரம். வெளியே போகக்கூடாது ! போட்டுர்ரீயா? பாண்டியன்: ம்... (வாங்கிக்கொண்டு போகிறான்)