காட்சி 83]

காட்சி 83·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[சென்னை ஹோட்டல் [ பரந்தாமன் எழுதுவது அவசர வேண்டுகோள். அன்புள்ள குமுதாவுக்கு ! உன்னைப் பார்க்கவேண்டும் என்று துடிக்கிறேன். நடந்தவைகளை மறந்துவிட்டு

உடனே உன்னுடைய விலாசத்தை எனக்குத் தெரியப் படுத்தினால் ஓடி வந்து சந்திக்கிறேன். இங்ஙனம், உன் அன்பு மாமன் பரந்தாமன், ரூம் -15, இமாலயா ஓட்டல், சென்னை. (எழுதிய கடிதத்தை ஒருமுறை படித்துவிட்டு பையனிடம்) பரந்தாமன் : நீ உடனே தினசரி பத்திரிகை ஆபீஸ்களுக்குச் செல்லவேண்டும். பையன்: ஏங்க... பரந்தாமன் : இந்த விளம்பரத்தை எல்லாப் பத்திரிகைகளிலும் போடவேண்டும். பையன்: ஏங்க வீணா சிரமம் குமுதா அம்மாளுக்கே நேரா ஒரு கார்டு போட்டா போவுது பரந்தாமன் : ஏ. என்னா எனக்கு புத்தி வந்தவுடனே உனக்கு புத்தி மழுங்குது ! குமுதா விலாசம் தெரிஞ்சா இந்த விளம்பரம் எதுக்கு ! உம் பையன் : ஓ... அதை மறந்துட்டேன். பரந்தாமன்: (நூறு ரூபாய் பணம் எடுத்துக் கொடுத்து) இந்தா விளம்பர சார்ஜுக்குக் கொடு! எல்லா பத்திரிகையிலும் இன்னைக்கே போடச் சொல்லணும்! பையன் : (பணத்தையும் காகிதத்தையும் வாங்கியபடி ) சரிங்க !... பரந்தாமன்: நிச்சயம் என் குமுதா இருக்குமிடம் தெரிந்து விடும்: அவளிடம் ஓடுவேன். மன்னிப்பு கேட்பேன். சீரழிந்த குடும்பத்திலே மறுமலர்ச்சி உண்டாக்குவேன்!