காட்சி 82]

காட்சி 82·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[கருடன் பதிப்பகம் பையன் : சார்! ஆசிரியர் சார்! பரந்தாமன் : அப்படிக் கூப்பிடாதே ! ஆசிரியன் - அறிவு நூல்கள் எழுதும் ஆசிரியன் - அழகான எழுத்தோவியன் - அவதிப்படும் பாட்டாளிகளின் தலைவன் -இந்தப் பளபளப்பான பட்டுத் திரைகளுக்குப் பின்னே மறைந்துகிடக்கும் பயங்கரமான ரகசியங்கள் உனக்குத் தெரியாது தம்பி! உனக்குத் தெரியாது. கருடன் : பரந்தாமா ! பரந்தாமன்: பரந்தாமனல்ல- பயங்கர மிருகம், மிருகம் ! மிருகமல்ல - மனிதனாகிவிட்டேன். இன்றுதான் மனிதனானேன் கருடன்: என்னப்பா சொல்றே பைத்யம் பிடிச்சவன் மாதிரி. பரந்தாமன் : பைத்யம் பிடிப்பதா - பிடித்திருந்த பைத்யம் இப்போதுதான் தெளிந்திருக்கிறது என் அக்காளால். கருடன் : சரிதான். அக்காள் உபதேசம் பண்ணீருக்காப்ல இருக்கு. உருப்டாப்லதான். பரந்தாமன் : அக்காளைப்பற்றி ஒன்றும் சொல்லாதே - அது என் தெய்வம்.மூடிக்கிடந்த என் இருதயக் கதவுகளைத் திறந்து விட்ட தெய்வம் ! என் இருண்ட பாதையிலே ஜோதி விளக்குக் காட்டிய மங்கையர் குல திலகம். இழிவுப் படுகுழியிலே விழப்போன எனக்கு இறுதி மூச்சு வழங்கி- பாரடா பண்பு கெட்ட வீணனே, நீ நடந்துவந்த பாதையிலே உன் காலடி பட்டுக் கசங்கிப்போன மலர்முகவதிகள் எத்தனை பேர் - திக்கற்றவர்கள் - திசைமாறிப் போனவர்கள் - திண்டாடித் தெருவில் நிற்போர் அவர்களின் தொகை எவ்வளவு? துரோகியே திரும்பிப்பார் என்று ஆணையிட்டு என்னைத் திருத்திய தெய்வம் என் அன்புச் சகோதரி அவள்தாண்டா எனக்கு கண்கண்ட தெய்வம். கருடா, நான் தீயவழியிலேதான் நடந்துவிட்டேன். நீயுந்தான், நீயுந்தான். நீயும் திருந்திவிடு - திரும்பிப்பார் என் தோழனே- திரும்பிப்பார்! கருடன் : அட போப்பா !

பரந்தாமன் : உன்னால் சுலபத்தில் திரும்பிப்பார்க்க முடியாது நீ ஒரு யானை. கருடன் : பரந்தாமா,உனக்கு ஏனப்பா திடீர்ன்னு இந்த கெட்ட புத்தி. பரந்தாமன் : நல்ல புத்தி வந்துவிட்டதடா நாசகாரா - இனியும் என்னை உன் வலையில் தள்ளாதே. பரந்தாமன் பாதை மாறி விட்டது. அவன் செய்த அக்ரமங்களுக்கு சாந்தி தேடப் போகிறான். அக்கா ! உங்கள் தம்பி உடனடியாக ஒரு நல்ல காரியத்தில் பிரவேசிக்கப் போகிறான். பாண்டியன் குமுதா அவர்களை ஒன்று சேர்த்து மகிழப் போகிறான். பாமாவிடம் மன்னிப்புக் கேட்கப் போகிறான். கருடன் : பரந்தாமா ! பரந்தாமன் : வருகிறேன். என்னைக் கூப்பிடாதே. பையன் : நானும் வர்றேங்க உங்களோட. பரந்தாமன் : வா தம்பி வா. இங்கிருந்தால் நீயும் கெட்டு விடுவாய். கருடன்: ஏய் என்னடா? பையன் : திரும்பிப்பார். (பையன் எழுத) (கருடன் பதிப்பகம் - திருடன் பதிப்பகமாக்கப்படுகிறது)