காட்சி 81] [பாழடைந்த மண்டபம்
காட்சி 81·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
பரந்தாமன்: பரந்தாமா! பாவி ! உனக்கு இந்த தண்டனை போதாது. இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும்.
(வானத்திலே பல நட்சத்திரங்கள் திடீரென உதிர்ந்து பெண்ணாக மாறுகின்றன. பரந்தாமன் Reaction-Echo)
Echo: வானத்திலே பல நட்சத்திரங்கள்- ஒரே நிலவு- வையகத்திலே உனக்குப் பல சகோதரிகள் - ஒரே மனைவி - ஒரே மனைவி.
பரந்தாமன் : அக்கா ! அன்பின் சிகரமே ! என்னை மன்னித்து விடுங்கள். நான் பகுத்தறிவாளனாகி விட்டேன். பகுத்தறிவாளனாகி விட்டேன். திரும்பிப்பார் - எனக்கு மட்டுமல்ல - உலகத்திற்கே என் அக்காள் வழங்கிய ஒப்பற்ற உபதேசம்.திரும்பிப்பார் - ஏ மாஜி மனிதனே - மகா பாதகனே - நீயும் திரும்பிப்பார். நீ உருண்டு வந்த சாலையிலே அள்ளித் தெளித்திருக்கும் மண்டையோடுங்கள் எத்தனை? பிழிந்தெறியப்பட்ட இருதயச் சக்கைகளின் தொகை எவ்வளவு? எண்ணிப்பார்.இழிவு நிறைந்தவனே திரும்பிப்பார். ஏ, மானிட ஜாதியே நீ குரங்கிலிருந்து வளர்ந்தாயாம்-அந்தக் குரங்கு மனப்பான்மை உன்னை விட்டு குறைந்துவிட்டதா என்று ஒருமுறை திரும்பிப்பார்- திரும்பிப் பார் - திரும்பிப் பார் - அக்கா ! நான் திரும்பிப் பார்த்துவிட்டேன் அக்கா ! திருந்திவிட்டேன் அக்கா !
(ஓடுகிறான்)