காட்சி 78] [ஜெயில்
காட்சி 78·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
வார்டர் : உனக்கு விடுதலைப்பா.
பாண்டியன் : அதற்குள்ளாகவா- மூன்று வருஷம் ஆகவில்லையே...
வார்டர் : உனக்கு மட்டுமல்ல. இன்றைக்கு இந்த உபகண்டத்திற்கே விடுதலை - சுதந்திரதின விழா - அதனால்தான் நீ விடுதலை செய்யப்பட்றே.
பாண்டியன் : சார் ! நான் மெட்ராஸ் போரதுக்கு பாஸ் கொடுப்பாங்கள்ளே !
வார்டர் : ஓ.நீ போகவேண்டிய ஊருக்கே கொடுப்பாங்க. மெட்ராஸிலே தானே உன் குடும்பம்....
பாண்டியன் : ஆம். அங்கேதான் என் குமுதா.