காட்சி 71]
காட்சி 71·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[ஹோட்டல்
கருடன் : எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டேன்.
பரந்தாமன்: ஆள் எப்படி அழகிதானா?
கருடன்: முப்பத்தி மூணு லட்சணம் பொருந்தியவள்.
பரந்தாமன்: என்னப்பா ஒரு லட்சணம் புதுசா சொல்றே !
கருடன் : அவ லட்சணத்தெ நீ நேரா பாத்தா தெரியும்.
பரந்தாமன் : ஆ !
கருடன்: தாஸியாகப் பொறந்தாலும், நீ வர்ணிப்பியே ; அது மாதிரி தங்கக் கொடி பரந்தாமா!
பரந்தாமன் : கருடா!
கருடன்: அவளெப் பாத்தோன்ன எனக்கு ஒரு ஐடியா தோணுச்சி !
பரந்தாமன் : என்ன?
கருடன் : நம்ப 'வாழு' புஸ்தகத்தின் இரண்டாம் பதிப்புக்கு அவளை அட்டைப் படமா போடலாம்!
பரந்தாமன் : ஏ சும்மாயிருடா பிஸ்னஸ்!
(பரந்தாமன் தாசி வீட்டுக்குப் புறப்படுகிறான்)